நேர்காணல்: 82 வயதான தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்தபதி நடராஜ பிள்ளை அய்யா
இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.
இங்கு, நாகர்கோவில் பகுதியில் சுண்ணாம்பின் பயன்பாடு மற்றும் பல வகை மண் மற்றும் சுண்ணாம்பு பூச்சு பற்றி நடராஜ பிள்ளை அய்யாவுடன் நடந்த ஒரு உரையாடலின் தொகுப்பினைக் காணலாம்.
உள்ளூரில் கிடைத்த தாவர மற்றும் விலங்கு இடுபொருட்களை கொண்டும், மண்ணை சரியான முறையில் கையாண்டும் மட்டுமே, நிலையான வலிமையை அடைய அறிந்திருந்த நம் முன்னோர்களுக்கு, சுண்ணாம்பு அரிதாகவே தேவைப்பட்டது!
ஒவ்வொரு சிக்கலுக்குள்ளும் ஒரு தீர்வு மறைந்திருக்கும். இந்தத் தொற்றுக்காலம் நம்மை தூக்கத்திலிருந்து விழிக்கச்சொல்லி காந்திய வழியில் மரபு நடைமுறையில் பயணிக்கச் சொல்கிறது.
சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம். அரண்மனைகளின் காணப்படும் ஆடம்பரமான நிறைவுகள்(Finishes) அல்லது பூச்சுகள் ஒன்று. மற்றொன்று சிக்கனமானப் பூச்சுகள். இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை.
எங்களிடம் நேர்காணல் எடுக்க விரும்பும் பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் FAQஐப் படிக்கவும் ஊடகங்களின் தேவையில்லாத பார்வை, விவாதம் அல்லது பொதுவெளிப்பிரச்சாரம் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம்.
பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.
இராஜஸ்தானில் படோடு எனப்படும் வீடுகள்
முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட மணற்பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டவை. அந்தக்கல்லுக்கு ஜோத்பூர் பட்டி என்ற பெயரும் இருக்கு. அதே கற்களை தூண்(column), விட்டம்(Beam) மற்றும் கூரையின் உறுப்புக்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆசான் அப்துல் ரசாக் அய்யா அவர்கள் இராஜஸ்தானின் சிறப்புமிக்க தாப்பிப் பூச்சுவைப் பற்றி எடுத்துரைக்கிறார். மேலும் பல வகையான சுண்ணாம்பு, இடுபொருட்கள் மற்றும் பலவகையான பரப்பில் எப்படிப் பூசுவது போன்றவற்றில் அவருக்குள்ள அனுபவத்தைத் தெரிந்து கொள்ள கட்டுரைத் தொடர்ந்து படிக்கவும்.