தணல் குழு

எங்களுடைய மண்கட்டுமான குழுவைப் பற்றித் தெரிந்துகொள்க

“ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் இப்புவி பூர்த்தி செய்கிறது. ஆனால் பேராசைகளை அல்ல”-காந்தி

பிஜு பாஸ்கர்

நிறுவனர்

அவரது வேர்கள் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தது. நவீனக்கட்டிடக்கலை கல்லூரியில் தனது படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியாவின் பல்வேறு கிராமங்களில் பல பயணம் மேற்கொண்டார். கல்லூரியை விட்டு வெளியேறியவுடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கஜ்ராகோவில் உள்ள பழங்குடியைச்சேர்ந்த ஒரு மரச்சிற்பியிடம் பணியாற்றினார். இந்தியக்கட்டிடக்கலை கல்லூரியால் 2009 ல் அவருக்குப் பட்டம் வழங்கப்பட்டது. அதே வருடம் தன்னை இயற்கையிடம் ஒப்படைப்புடன் அருணாச்சல மலை அடிவாரத்தில் தங்க ஆரம்பித்தார். பின்னர் 2011ல் தணல் இயற்கைக் கட்டுமான அமைப்பை நிறுவினார். சுயகற்றல் மற்றும் மண்வீடு என பயணித்துக்கொண்டிருக்கிறார். பிஜு பாஸ்கர் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

சிந்து பாஸ்கர்

இணை நிறுவனர்

தொடக்கத்தில் அங்கக ஆடை, தாவர மற்றும் விலங்குகள் தொடர்பாகப் பணியாற்றிவர். கணவருடன் இணைந்து 2011ல் தணலை நிறுவினார். தணலின் பலவிதமான பணிகளில் ஈடுபாடுள்ளவர். மென்மையான சாமான்கள் செய்வது, கையால் ஆபரணங்கள் செய்வது ஆகியன அடங்கும். செடிகள் மற்றும் மூலிகைகளிலிருந்து பெறப்படும் மூலங்களைக் கொண்டு இயற்கைப்பூச்சுக்கள் செய்வது தொடர்பாக ஆய்வுமேற்கொண்டு வருகிறார். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு அருகில் கேரளாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்திலிருந்து வந்து திருவண்ணாமலையில் 2010ம் ஆண்டு முதல் வசித்து வருகிறார்.

ஆதியா மற்றும் போதி விருக்ஷா

சிறிய ஒருங்கிணைப்பாளர்கள்

விருக்ஷா என்றால் மரம் என்று பொருள். ஆதி- முதல். இரண்டு விருக்ஷாக்களும் தணல் வீடுகள் உருவாக்கத்தின் உதவியாளர்கள். ஆதியா, தணல் வளாகத்தின் விவசாயப் பணிகளைக் கவனித்துக்கொள்கிறார். மாற்றுக்கல்வி பள்ளியில் உள்ள தனது நண்பர்களுடன் இணைந்து மலையில் மரக்கன்று நட்டி பராமரிக்கின்றார்.

ராமன் கௌதமன்

நிர்வாகி

இயற்கையை நேசிக்கும் குணம் கொண்ட இவர் 2014 முதல் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். தானே கணினி நிரலாக்கலைக் கற்றுக் கொண்டு தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்திவரும் ஒருவர்‌. தணல் இயற்கை கட்டுமானப் பள்ளியில் அவரது பயணம் தொடர்கிறது. .அவர் மாற்று ஆற்றல் மூலத்திற்கான தீர்வைச் சொல்லும் வழிகாட்டி. தொழிற்நுட்பத்தின் கீழ் மனிதமனம் ஒருபோதும் அடிமையாகக்கூடாது என்பதில் நிலைப்பாடுள்ள தொழில்நுட்பவாதி!

தரண் அசோக் & P.S.பிரசாந்த்

இயக்குனர்& இசையமைப்பாளர்/பாடகர்

கட்டிடக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டே திரைப்படம் மற்றும் இசை போன்ற கலைத் துறையிலும் பணியாற்றுகிறார்.தணலில் காணொளி உருவாக்கம் மற்றும் ஆவணப்படுத்துதல் பணிகளில் மிகுந்த உதவி புரிகின்றார். Adobe girl மற்றும் Khoj போன்ற இயற்கைக் கட்டுமானப் பாடல் உருவாக்கத்தில் உதவினார். பிரசாந்த், ரவிசங்கர் ஆசிரமத்தில் பருவ இதழ் பிரிவில் பத்து வருடங்களாக பணி செய்கிறார். நமது இயற்கைக் கட்டுமானப் பாடலுக்கான இசை அமைப்பாளர்.

தாவூத் இப்ராஹிம் முவால், அப்துல் ரசாக் முவால்& லியாகாட் முவால்

சுண்ணாம்பு வேளையில் திறன்மிக்கவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்

மும்பையில் பாரம்பரியத்தைக் காக்குக் வகையில் எழுப்பட்ட கட்டுமானங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உண்டு. 2016 முதல் தணலில் அறிமுகமாகி சிமெண்ட் இல்லாமலே நீர்த்தொட்டி கட்டி அத்தொழிற்நுட்பத்தைக் கற்றும் தருகின்றனர். இராஜஸ்தானிலும் திருவண்ணாமலையிலும் தாப்பி, அரைஷ் பூச்சு வகுப்பில் ஆசிரியராக இருந்தார்கள். அவர்கள், இராஜஸ்தானிய மரபை மற்றவருக்குப் பயிற்சி கொடுத்து அதன் மூலம் அக்கலையை மீட்டெடுக்கும் ஆசான்கள்.

முன்னுசாமி அண்ணா, அருணாச்சலம் அண்ணா, தணியசலம் அண்ணா

உள்ளூர் விவசாயிகள்

ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த மூன்று சகோதரர்கள் மண்மூட்டை வீடு, மண்வீடு மற்றும் கற்றல் மையம் போன்ற இயற்கை கட்டுமானங்களில் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். பல பயிற்சி வகுப்புகளில் உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்கள். கட்டுமான ஆசான்கள் உடன் பல சோதனைச் செயல்முறைகள் செய்த அனுபவம் உண்டு.

சேட் அண்ணா& செரினா அக்கா

உள்ளூர் விவசாயிகள்

தணல் வளாகத்தில் உள்ள கட்டுமானங்களிலும் விவசாய நிலத்திலும் பல வருடங்கள் பணி செய்து வருகிறார். இயற்கைக் கட்டுமானத் தொழில் நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு விவசாயி. கட்டுமான ஆசான்கள் சிலரிடம் இணைந்து பணியாற்றிய அனுபவம் உண்டு. செரினா அக்கா தணல் வளாகத்தில் நடைபெறும் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி வகுப்பில் உதவி செய்தும் மண் கட்டுமானங்கள் உருவாக்க தாவர மற்றும் விலங்கு மூலங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சிதம்பர ராஜா

இயற்கை விவசாய ஆலோசகர்

Art and Animation ல் படிப்பை முடித்த பின் நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் தொடர்பான கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். விவசாயம் கற்றபின் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய புரிதலை கொண்டு செல்வதில் பணியாற்றுகிறார். தணல் வளாகத்தில் இயற்கை விவசாயப் பணிகளை ஒருங்கிணைக்கவும் உள்ளூர் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தைக் கற்றுத்தரவும் செய்கிறார்.

நாராயண சுவாமி

கூரை வேய்பவர்

திருவண்ணாமலையின் ஒரு கிராமத்திலிருந்து வந்த அனுபவம் மிக்க கூரைவேயும் நபர். இளமைக் காலத்திலிருந்து அத்தொழிலைக் கற்றுத் தேர்ந்தவர். தணல் வீடுகளின் பல்வேறு கூரைகள் வேய்வதில் அவருக்கு அனுபவம் உண்டு.தென்னிந்தியாவில் கூரை வீடுகள் வழக்கத்தில் இருந்து ஒழிவதை அவர் உணர்ந்த பின், தணல் வளாகத்தில் பனை ஓலை , தென்னங்கீற்று, கோரைப் பற்கள் ஆகியனவற்றைக் கொண்டு சோதனை முறையில் பல்வேறு கோணங்களில் உருவாக்கப்படும் கூரைகளில் முக்கியப் பங்காற்றுகிறார்.

இணைய வழிக் காணொளி வகுப்பு

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

நூல்கள்& இ-நூல்கள்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் மூலம் 1500க்கும் மேற்பட்ட மக்கள் கற்றனர்

தணலின் சமூக ஊடங்கங்கள்

Scroll to Top