ஓர் இயற்கை வீடு கட்டுக

ஓர் இயற்கை வீடு கட்டுக

தணல் உதவியுடன் இயற்கை வீடு கட்டுக

ஓர் இயற்கை வீடு கட்டுக‘ என்பது ஒரு மண் வீட்டைத் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு கட்டுவது என்பதை முன்னெடுப்பதற்கான திட்டம். சுற்றுச்சூழலைச்சிதைக்காமல், மலிவு விலையில் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் எல்லோருக்கும் பொருந்தும் வகையில் ஒரு வீட்டைக் கட்ட முடியும் என்று நம்புகிறோம்.

மரபுக் கட்டுமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்த்து உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களை உபயோகிக்கலாம். ஒரு நல்ல மண்வீட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் முன்னெடுப்பாக இத்திட்டம் அமையும். தற்போது நிறைந்துள்ள சிமெண்ட் அல்லது காங்கிரீட் வீடுகளுக்கு மாற்றாக அமையும். சாமானிய மக்களுக்கான ஒரு நல்ல மண்வீட்டைக் கட்டுவதற்கும் இது உதவும். உங்களுடைய கனவு இல்லத்தை நீங்களே கட்டுவதற்குக் கீழ்க்கண்ட வகையில் உதவி செய்வோம்.

படிநிலை 1:

ஏதாவது ஒரு இயற்கைக் கட்டுமானப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதால் நீங்கள்,

 • வீட்டைக் கட்டுவதற்கு முன் ஒரு மண் வீட்டை முழுவதும் உணரலாம்.
 • நீங்கள் பயிற்சியில் பங்கேற்று, நண்பர்கள் அல்லது உறவினர்களையோ பயிற்சியில் பங்கு பெறச் செய்து நீங்களே இணைந்து கட்டிவிடலாம்.
 • உங்களது கொத்தனாரைக் கற்கச் செய்து அவர்மூலம் உங்களுக்கோ மற்றவருக்கோ கட்டலாம்.
 • தணலின் செயல்பாடுகளில் பங்களிப்புச் செய்யலாம் மற்றும் மண்ணை உணர்ந்து மண்வீடு பற்றி விழிப்புணர்வு செய்யலாம்.

வகை 1.

நாங்கள் ஒரு கட்டுமான நிறுவனம் அல்ல; விழிப்புணர்வுக் குழு.

பயிற்சிப்பட்டறைக்குப் பின், தணல் உங்களது கட்டுமானத்தை எடுத்துச் செய்வதாக இருந்தால்,

வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று கட்டுமானத்திட்டங்கள் மட்டும் எடுத்துச் செய்வோம். அப்படித் தேர்ந்தெடுக்கும் திட்டங்கள் அதன் மதிப்பு அடிப்படையில் இருக்கும். இத்திட்டங்கள் மண்வீடு பற்றிப் பரப்புரை செய்யும். இவை ‘கொடுக்கல்-வாங்கல் அல்லது அன்பளிப்பு அளித்தல்‘ முறையில் செய்து தரப்படும். அதாவது இத்திட்டங்களின் பயனாளிகள், தணல் இயற்கைக் கட்டுமானப் பள்ளிக்குப் புத்தகங்கள், கருவிகள் அல்லது உணவுத் தானியங்கள்(எங்கள் சமையலறைக்குத் தேவையான) போன்றவற்றைப் பரிமாற்றமாக வழங்கலாம். எங்களிடம் உள்ள கலைஞர்களுக்குச் ஒரு மாத சம்பளம் வழங்கலாம். அது சோதனைச் செயல்முறைகளுக்கு உதவும்.

இந்தத் திட்டங்கள் கற்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதாவது மரபு நுட்பங்கள் தற்போதைய காலத்திற்கு(நவீன கட்டுமான பொருட்களின் பற்றாக்குறை மற்றும் மிதமிஞ்சிய கட்டுமான செலவு) எவ்வாறு பொருந்துகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இத்திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீட்டின் வடிவமைப்புப்பணியை மட்டும் நாங்கள் செய்வோம். ஒவ்வொரு படிநிலையின் போதும் தணல் நிறுவனர்கள் அல்லது தணலர்கள்(தணல் மாணாக்கர்) கட்டுமான வேலை நடைபெறும்போது பார்வையிடுவார்கள். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அடிப்படைப் புரிதல் பெற்ற தன்னார்வலர்கள் கட்டுமான வேலைகளில் உதவலாம். உதாரணத்திற்குக் கேரளாவில் அட்டப்பாடியில் உள்ள ஒரு விவசாயின்வீடு மற்றும் திண்டுக்கல்லில் உள்ள சமூக விதை வங்கி.

விதிமுறைகள் & நிபந்தனைகள்:

 • தணல் மூலம் வருடத்திற்கு இரண்டு கட்டுமான திட்டங்கள் மட்டும் மதிப்பின் அடிப்படையில் எடுத்துச் செய்யப்படும்.
 • புறநகர்ப் பகுதியில் அல்லது கிராமப்பகுதியில் வணிகரீதியில்லாத் திட்டங்களே எடுத்துச்செய்யப்படும்.
 • முதன்முதலாகத் தேவையின் பொருட்டு வீடு கட்டும் மக்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறோம். வார இறுதியில் தங்குவதற்கோ அல்லது பண்ணை வீடோ அல்ல.
 • பழைய மண் வீடுகளைப் புதுப்பிக்கும் பணியையும் செய்வோம்.
 • கட்டுமான ஒப்பந்தக்காரர்கள் யாரும் இத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. வேலையாட்களை நிர்வகித்தல், பொருட்கள் தன்னகப்படுத்துதல் ஆகிய செயல்களைப் பயனாளி தானே அல்லது மற்றவர்மூலம் செய்ய வேண்டும். நாங்கள் வடிவமைப்பாளராக மட்டுமே செயல்படுவோம் ஒப்பந்தக்காரராக அல்ல.
 • பயிற்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் தேவைப்படும்போது அனுப்பி வைக்கப்படுவர்.

வகை 2: பயனாளியே தன் வீட்டைக் கட்டுதல்

கீழ்க்கண்ட காரணங்களால் உங்களது கட்டுமான திட்டத்தை தணல் எடுத்துச் செய்ய முடியாமல் போகலாம். விழிப்புணர்வு செய்தல், பயிற்சி கொடுத்தல், புத்தகங்கள் மற்றும் வெளியீடுகள் சார்ந்த வேலைகள் அல்லது ஏற்கனவே இரண்டு கட்டுமானத் திட்டங்களை எடுத்திருக்கலாம். அப்படி இருக்கையில், ‘பயனாளியே தன் வீட்டைக் கட்டுதல்‘ எனும் திட்டத்தின் கீழ் உங்களுக்குப் பயிற்சிப்பட்டறை வழியாக உதவுவோம்.

நாங்கள் ‘பயனாளியே தன் வீட்டைக் கட்டுதல்‘ திட்டத்தைப் பரிந்துரைக்கிறோம். அதிகக் கட்டுமானங்களை நாங்களே எழுப்ப விரும்பவில்லை. மாறாக அதிக இயற்கை கட்டிடக்கலைஞர்கள் உருவாக விரும்புகிறோம். அந்த வீடுகள் பயனாளிகள், அவர்களின் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் சில வேலையாட்கள் ஆகியோர் இணைந்து கட்டப்படுவதால் அந்த வீட்டிற்கும் அதில் வாழ்பவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே இருக்கும்.

இயற்கைக்கு நெருக்கமான கட்டுமானம் எழுப்புவதில் உங்களைப் பங்கேற்க வரவேற்கின்றோம்.

பயனாளியே கட்டிய வீட்டிற்குச் சிறந்த உதாரணம் காணொளியில் பார்க்க.

Natural builder around us video self trained
Play Video about Natural builder around us video self trained

பயனாளியே தன் வீட்டைக் கட்டுதல்‘ அல்லது ஒனர்ஸ் பில்ட் என்றால் என்ன?

 • பயனாளி தானே பயிற்சி பெறலாம் அல்லது மற்ற நபரைப் பயிற்சியில் பங்கேற்க செய்து ஒரு வீட்டைக்கட்டுவதற்கான திறமையை அவர்கள் பெற்ற பின் அவர்களே கட்டுமான பொருட்களின் தன்மையை ஆராயவும் சோதனை செய்யவும் இயலும். அது கட்டுமானத்தின் பல்வேறு படிநிலைகளில் உதவியாக இருக்கும்.
 • தங்களது வீட்டின் அல்லது மற்ற கட்டடத்தின் வடிமைப்புப் பணியைப் பயனாளியே ஆற்றுவார். அல்லது மற்றவர்களிடமிருந்து வடிவமைப்பைப் பெறலாம். எப்படியாயினும் வடிவமைப்பின் கூறுகள் மண் கட்டுமானத்திற்கு ஏற்றவனவாக இருத்தல் நல்லது.
 • கட்டுமானத்தின் பல்வேறு படி முறைகளான வேலையாட்கள் தயார் செய்தல் வேலையாட்களின் திறமையை உறுதிப்படுத்துதல் மற்றும் எளிதில் அணுகத் தக்க உள்ளூர் சார்ந்த கட்டுமானப் பொருட்களை அடையாளம் காணுதல் ஆகியனவற்றைப் பயனாளியே செய்ய வேண்டும்.
 • அவர்/அவள் அவரது குடும்பத்துடன் இணைந்து கட்டுமானப் பணியில் ஈடுபடுதல்
 • கட்டுமானப் பணியில் காலதாமதம் ஏற்படும்போது எதிர்பாராத செலவுகளைத் தவிர்ப்பதற்காக முன்கூட்டியே சரியான திட்டமிடல் பணியையும் அவர்/அவள் செய்ய வேண்டும்.

‘பயனாளியே தன் வீட்டைக் கட்டுதல்’ திட்டத்தின் கீழ் கட்ட விரும்பும் நபர்களுக்குத் துணை நிற்க விரும்புகிறோம். ஆனால் அவர்கள் .2 நாட்கள் இயற்கைக்கட்டுமான வகுப்பு+ 1 நாள் பூச்சு வகுப்பு அல்லது .10நாட்கள் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவராக இருக்க வேண்டும். எங்களிடமிருந்து கீழ்க்கண்ட உதவிகளை எதிர்பார்க்கலாம்.

 • கட்டுமானப் படிமுறைகளில் பரிந்துரை, கொத்தனார் மற்றும் வேலையாட்களுக்குப் பயிற்சிப்பட்டறை வழியாகப் பயிற்சி அளித்தல், கட்டுமானப் பொருட்கள் மற்றும் அவற்றின் இருப்பு பற்றிய பரிந்துரை, கட்டுமானச் செலவைக் குறைப்பதற்கான காரணிகளைப் பரிந்துரைத்தல், தணலுடன் இணைப்பில் உள்ள இயற்கைக் கட்டிடக்கலைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்தித் தருதல்.
 • கட்டுமானம் சார்ந்த புத்தகங்கள், காணொளிகள், பத்திரிக்கைகள் மற்றும் மற்ற ஆவணங்களைப் பகிர்வோம்.
 • பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்கள் கட்டுமானப்பணிக்கு உதவி செய்ய அனுப்பி வைக்கப்படுவர்.
 • பரிமாற்றமாக உங்கள் கட்டுமான வேலைகளின் ஆவணம், கட்டுமானப்படிமுறைகள், விலை நிலவரம் மற்றும் பொருட்களைப் பற்றிய விவரங்கள் ஆகியவற்றைப் பகிரலாம்.

தணலில் பயிற்சி பெற்றபின் ‘பயனாளியே தன் வீட்டைக் கட்டுதல்‘ திட்டத்தின் கீழ் ஒருவர் கட்டிய வீட்டைப் பற்றிய கட்டுரை பத்திரிக்கையில்:https://bit.ly/2HHBeSE

 

அதனால் ஒரு நல்ல மண் வீட்டை உருவாக்க எங்களுடைய ஏதாவது ஒரு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளவும்.

“வருங்காலத் திட்டங்கள்”பக்கத்தை வாசிப்பதன் மூலம் நாங்கள் எடுத்துச் செய்யப்போகும் கட்டுமான வேலைகளில் நோக்கம் மற்றும் மதிப்புகளைத் தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய கட்டுமான வேலைத்திட்டமும் குறிப்பிட்ட மதிப்புகளைக் கொண்டிருந்தால் மட்டும் எங்களுக்கு எழுதி அனுப்பவும்.

இணையவழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

யாக்கை-சுவர்கள்-மண் வீடுகட்ட கையேடு

செய்தி & டி‌வி

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

தணல் சமூக ஊடகம்

This post is also available in: English

Scroll to Top