செயல்-வழி

பயிற்சி பட்டறை

பலவிதமான பயிற்சிப் பட்டறைகள்

கட்டுமானக் கலையை களஅனுபவம் மூலம் நேரடியாகக் கற்கக் களரியகம் அழைக்கிறது

தணலில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பு, எந்த ஒரு மனிதரும் கட்டுமான மூலப்பொருட்களைத் தொட்டு உணர்ந்து இயற்கை கட்டுமானத்தின் முக்கியத்துவத்தைப் புரியவும், மரபு தொழில்நுட்பங்களில் செய்முறைப் பயிற்சி பெறவும், சோதனை முறைகள் மற்றும் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளை உற்று நோக்கவும், நாடெங்கும் சிறந்து விளங்கும் இயற்கை கட்டிடக்கலைஞர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் உதவும் ஒரு தளமாகச் செயல்படுகிறது. இதை விட மேலாக ஒத்த சிந்தனைகள் கொண்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும். அவர்கள் கடந்து வந்த பாதையின் மூலம் பெற்ற அனுபவங்கள் மற்றும் ஏன் இயற்கைக் கட்டுமானத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வயதுவரம்பு மற்றும் துறை சார்ந்து இல்லாமல் யார் வேண்டுமாயினும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். ஆர்வம் கொண்டவர் யாராயினும் பயிற்சியில் பங்கேற்று எளிய முறைகளைக் கற்றுக் கொள்ள முடியும். தங்களது குடும்பத்தாரும் குழந்தைகளும் பயிற்சியின் அங்கமாகப் பங்கேற்றால், அது அனைவரையும் ஒருங்கிணைந்து, சுற்றுச்சூழலைச் சிதைக்காமல் எப்படி ஒரு வீடு கட்டுவது என்பதற்கான வழியைக் காண்பிக்கும்.

வெவ்வேறு குழுக்களின் தேவைக்கேற்ப மற்றும் குறிப்பிட்ட பாடங்களின் அடிப்படையை நன்கு புரிந்து கொள்ள, வெவ்வேறு கால இடைவெளியில் நன்கு வரையறுக்கப்பட்ட நோக்கம் மற்றும் பாடத்திட்டத்துடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

இருநாட்கள்

சாமானியாருக்கானப் பயிற்சிப் பட்டறை

2 நாட்கள் அறிமுக வகுப்பின் மூலம் இயற்கைக் கட்டுமானத்தின் அறிமுகம், அத்திவாரம் அமைத்தல், சுவர் மற்றும் பூச்சுவகைகள்

இடம்: திருவண்ணாமலை

ஒருநாள்

பூச்சு மற்றும் தளம் பயிற்சிப் பட்டறை

மண், சுண்ணாம்பு, சுடுமண், இடுபொருட்கள் மற்றும் பசை பயன்படுத்தி 5வகையான பூச்சுகள் & சுண்ணாம்பு அடித்தல்

இடம்: திருவண்ணாமலை

10 நாட்கள்

10-நாட்கள் பயிற்சிப் பட்டறை

அத்திவாரம், சுவர் வகைகள், தளம், கூரை, மற்றும் பூச்சு வகைகள் பற்றிய விளக்கமான வகுப்பு. தணல் கட்டிய கட்டுமானங்களையும் பழைய வீடுகளையும் பார்க்கலாம்.

இடம்: திருவண்ணாமலை

மூன்று நாட்கள்

உழவருக்கான கட்டுமான பயிற்சி

இயற்கை வாழ்வியல் சார்ந்து கிராமத்தில் முழுநேரமாக ஆழ்ந்து செயல்படும் தாய்மொழி மட்டுமே தெரிந்தக் களச்செயற்பாட்டாளர்களுக்கான கட்டுமானப் பயிற்சி.

இடம்: திருவண்ணாமலை

மூன்று நாட்கள்

தாப்பி-அரைஷ் மீட்டுருவாக்கப் பயிற்சிப் பட்டறை

இந்தியாவின் பாரம்பரிய முறைகளை மீட்டெடுப்பதன் சிறிய தொடக்கம் தான் தணல் இயற்கை கட்டுமானப் பள்ளி நடத்தும் தாப்பி மற்றும் அரைஷ் பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பில் மூத்த கலைஞர்களே வந்து பூச்சு, தளம் அமைக்கப்பயிற்சி தருவார்கள்.

இடம்: திருவண்ணாமலை

இரண்டு நாட்கள்

மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பயிற்சிப் பட்டறை

கல்லூரி அல்லது நிறுவனத்தில் இருந்து குழுவாக வரும் மாணவர்களுக்கானது. கிராமத்தைப் பார்வையிடல், மண்சுவர், வரிச்சி சுவர், பச்சைக் கல், சிஎஸ்எம்பி மற்றும் பூச்சுகள் ஆகியன இடம்பெறும். மாணவர்கள் கள அனுபவம் பெறமுடியும்

இடம்: திருவண்ணாமலை

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50க்கும் மேலான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும்
1500க்கும் மேலான மக்கள் செயல் வழியாகக் கல்வி கற்றனர்.

இணையவழி காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

செய்தித்தாள்கள் & டிவி

தணலின் சமூக ஊடங்கங்கள்

This post is also available in: English

Scroll to Top