ஆன்லைனில் கற்று உங்களுக்கான இயற்கை வீடு கட்ட விருப்பமா?

வெளியிடப்பட்டது

மொழி மாற்றி

அறிமுகம்

வீடு திரும்புதல்என்பது இந்திய இயற்கைக் கட்டுமானங்களுடனான ஓர் உள்ளார்ந்த பயணம். அது டுடோரியல் வீடியோ தொடராகும். (காணொளி வழிகாட்டி) இந்தக் காணொளித் தொடர், நான்கு பாகங்களும் சேர்த்து 10+ மணி நேரக்காணொளிக் களஞ்சியம் கொண்டது. பாகம் 1- இயற்கைக் கட்டிடக்கலையின் ஐம்பெரும் பொருட்கள். அதில் மட்டுமே ஆங்கிலம் மற்றும் தமிழ் சேர்த்து 170 வழிக்காட்டிக்(டுடோரியல்) காணொளிகள். (ஒவ்வொரு மொழியிலும் 3.5மணி நேரக் காணொளிகள்) பாகம் 2- சுவர் வகைகள் & அடித்தளம், பாகம் 3- கூரை நுட்பங்கள், பாகம் 4- தளம் & பூச்சுகள் ஆகியன 2022 ல் வெளிவரும்.

தணல் வளாகத்திலும் மற்ற இடங்களிலும் நடந்த படிப்படியான கட்டுமான முறைகளைத் தொகுத்து வழங்குவதால் உங்களுக்கு எளிதில் பாடங்கள் புரியும். ஒரு வீடுகட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பாணியும் இத்தொடரில் அடங்கும். ஒரு வீடு இயற்கையான முறையில் கட்டவிரும்பினால் இத்தொடர் உங்களுக்கு ஒரு நல்ல களஞ்சியமாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. திருவண்ணாமலையில் வாழ்ந்து வரும் இயற்கைக் கட்டிடக்கலைஞர் திரு‌‌. பிஜு பாஸ்கரின் 12 வருட ஆய்வுத்தொகுப்பின் விளைபொருள் தான் இக்காணொளித்தொடர்.

ஆங்கிலவழியில் கற்க இங்கே சொடுக்க

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் பாகம் 1-4

பாகம் 1: இயற்கைக் கட்டிடக்கலையின் ஐம்பெரும்பொருட்கள்
( வெளியிடப்பட்டது)
பாகம் 2- சுவர் வகைகள் & அடித்தளம் - 7 க்கும் மேற்பட்ட சுவர் முறைகள்
(தயாராகிறது)
பாகம் 3- கூரை நுட்பங்கள்- ஓடு முதல் காரை வரை பன்மயக் கூரை வகைகள்
(அடுத்த நிலை)
பாகம் 4- இயற்கை நிறைவுகள்- தளம் அமைவுகள் மற்றும் பூச்சுகள்
(பிந்தைய நிலை)

களஞ்சியமாக வாங்கிப் பணத்தைச் சேமிக்க!

பாகம் 1 தொகுப்பு

இயற்கைக் கட்டிடக்கலையின் ஐம்பெரும்பொருட்கள்
 • ஆரம்பகாலச் சலுகை
 • பயில்காலம்: டிசம்பர் 2023 வரை
 • வாழ்நாள் படிக்கலாம்
 • 3.5 மணிநேரம் (85 காணொளிகள்)
 • ஆண்ட்ராய்டு செயலி
 • IOS App (விரைவில்)
 • கால இடைவெளியில் பாடங்கள் வெளியீடு

பாகம் 1-4 தொகுப்பு

இயற்கைக் கட்டுமானக் களஞ்சியம் - முழுவழிகாட்டி
 • ஆரம்பகாலச் சலுகை 15 %
 • பயில்காலம்: டிசம்பர் 2023 வரை
 • வாழ்நாள் படிக்கலாம்
 • + 10 மணிநேரம் பார்வை நேரம்
 • ஆண்ட்ராய்டு செயலி
 • IOS App (விரைவில்)
 • கால இடைவெளியில் பாடங்கள் வெளியீடு

ஒப்பீடு அட்டவணை

பாகம் 1 மட்டும் முழுக் களஞ்சியம்
அடங்கிய காணொளிகள் பாகம் 1 மட்டும் தொடரின்‌ அனைத்துப் பாகங்களும்
மேற்கோள்கள் மற்றும் ஆதாரங்கள் முதல் பாகத்திற்கு மட்டும் தொடரின்‌ அனைத்துப் பாகங்களுக்கும்
காலாவதிக் காலம் டிசம்பர் 2023 வரை/ வாழ்நாள் அணுகல் இல்லை டிசம்பர் 2023 வரை/ கூடுதல் கட்டணத்தில் வாழ்நாளும் படிக்கலாம்
தணல் செய்த கூடுதல் ஆய்வுகளின் விளக்கங்கள் இத்திட்டத்தில் அடங்காது இத்திட்டத்தில் அடங்கும்.
கட்டுமான ஆலோசனை இத்திட்டத்தில் அடங்காது இரண்டாம் பாகம்- சுவர் வகைகள் வெளிவந்த பின் கூடுதல் தொகை செலுத்தி இந்தச் சேவையைப் பெறலாம்
நூல்கள் மற்றும் பயிற்சிப்பட்டறைக்கான முன்பதிவு முன்னுரிமை இத்திட்டத்தில் அடங்காது பொதுத் தளத்தில் வெளியிடப்படுவதற்கு ஒருவாரம் முன்பே உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.
அஃபிலியெட்ஸ் தெரிந்தோருக்கு விழிப்பு/விளம்பரம் செய்து ஊதியம் பெறுதல் தெரிந்தோருக்கு விழிப்பு/விளம்பரம் செய்து ஊதியம் பெறுதல்
எதிர்காலத்தில் தணல் நடத்தும் நேரலை நிகழ்வுகள் கட்டணத்தின் முழுத்தொகையும் செலுத்திப் பங்கேற்கலாம் கட்டணச் சலுகை மற்றும் முன்பதிவு முன்னுரிமை உண்டு
மேலும் பாடங்கள் பாகம் 1 ல் அடங்கிய காணொளிகள் மட்டும், பாகம் 2, 3& 4 ஐத்தனியாக வாங்கிக் கொள்ளவும். பாகம் 2, 3& 4ன் பாடங்களும் போனஸ் வீடியோக்களும் காலஇடைவெளியில் வெளியிடப்படும்

முந்தையப் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்றவருக்கான சலுகை அவர்களது வாட்சப் குழுவில் பகிரப்படும். ‘Thannal News’ வாட்சப் குழு உறுப்பினர்கள், யூடியூப் சேனல், இன்ஸ்டாக்ரம், முகநூல் பின் தொடர்பாளர்களுக்கும் சலுகை உண்டு.

5/5

பாட்டி சமையல் வீடியோக்கள் போல கட்டிடம் கட்ட எளிய காணொளி வழிகாட்டி

நீங்கள் இந்தக் காணொளித் தொடர் வழியாக என்ன பெறலாம்?

இயற்கைக் கட்டுமானம் என்றால் என்ன?

மண், சுண்ணாம்பு, கல், மூங்கில், தாவர மற்றும் விலங்கு இடுபொருட்கள் பயன்படுத்திக் கட்டப்பட்ட பாரம்பரியக் கட்டுமானங்கள் இயற்கைக் கட்டுமானம் ஆகும். சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருளைக் கொண்டு அவைக் கட்டப்பட்டன. நம்முன்னோர்கள் சமூகமாகக்கூடி கட்டிக்கொண்டனர். சுற்றுச்சூழலை சேதப்படுத்தாமல் கட்டிடம் கட்டும் வழிமுறைகள் தான் அவை. இயற்கைப் பொருள் கொண்டு கட்டப்பட்ட வீட்டிற்குள் நலமுடன் வாழலாம்.

இயற்கைக் கட்டுமானத்தின் முக்கியத்துவம் என்ன?

வாழ்நாளில் சேமித்த பணத்தைக் கொண்டு தீஞ்சுதையால்(சிமெண்ட்) வீடு கட்டிப் பதிலுக்கு என்ன கிடைக்கிறது?

 • நம் ஆறுகளின் முக்கிய வளமான மணலை இழக்கக்காரணமாகிறது
 • காற்று மண்டலத்தில் இருக்கும் அதிகப்படியான கரிம வாயுக்கு 10விழுக்காடு பங்கு தீஞ்சுதைக்கும் கான்கிரீட்டுக்கும் உண்டு.
 • சிமெண்ட் கற்காரை(கான்கிரீட்) நனைக்க அதிகப்படியான தண்ணீர்ப் பயன்பாடு
 • தீஞ்சுதை, கம்பி தயாரிக்கும் போது எரிபொருள் தேவை
 • நச்சுவண்ணங்கள்(பெயிண்ட்), மற்ற நவீனக்கட்டுமானப் பொருட்களால் உடல்நலனை இழந்து மருத்துவம் பார்க்கவேண்டியிருக்கிறது.

அப்படி இல்லாமல், வேறுவிதமான கட்டுமான முறையில்

 • கரிம வாயு வெளியீட்டுக் குறியீடு குறைவாகக் கொண்ட இயற்கைப் பொருளைப் பயன்படுத்தலாமா?
 • நீங்கள் வசிக்க நச்சுப்பொருள் இல்லாத ஒரு இடம் உருவாக்கலாமா?
 • எதிர்காலத்தலைமுறையினர் எளிதில் மறுபயன்பாடு செய்யத்தக்க பொருட்களைப் பயன்படுத்தலாமா?
 • பல ஆண்டுகள் நிலைத்த பாரம்பரிய முறைகளை மீட்டுருவாக்கம் செய்யலாமா?

நாங்கள் யார்?

இயற்கைக் கட்டிடக்கலைஞர் திரு‌. பிஜு பாஸ்கர் மற்றும் திருமதி.சிந்து பாஸ்கர் இணைந்து தணல் ஐ நிறுவினர்.

 • 12 வருடங்களுக்கும் மேலான இயற்கைக்கட்டுமான அனுபவம்
 • 50+ பயிற்சிப் பட்டறைகள் மூலம் 1500+ மக்களுக்குக் கல்வி கற்பித்துள்ளனர்
 • 75+ இயற்கைக் கட்டிடங்கள் கற்றுச்சென்ற மக்களால் நாடெங்கும் எழுப்பப்பட்டுள்ளது.
 • ‘வீவ்விங் வால்’ எனும் ஆங்கில இ-நூல் 2016ல் வெளியிடப்பட்டு 1000+ பிரதிகள் விற்பனையானது
 • யூடியூப் சேனலில் 42000+ மக்கள் பின்தொடர்கின்றனர் மற்றும் மொத்தம் 30இலட்சம் வியூஸ் உள்ளன.
 • தணல் முகநூல் பக்கத்தை 27000+ மக்கள் பின்தொடர்கின்றனர். வாட்சப் குழுவில் 5000+ மக்கள் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 8000+ பின்தொடர்பாளர்கள். மேற்கண்ட தளங்களின் மூலம் இயற்கைக் கட்டுமான தொடர்பான அறிவை வெளியிட்டு வருகிறோம்.

இந்தக் காணொளித்தொடர் உருவாக்கத்தின் பின்னால் உள்ள செய்முறை என்ன?

தணல் இன் நிறுவனர்களான பிஜு பாஸ்கர் மற்றும் சிந்து பாஸ்கர் 2009ல் இருந்து இயற்கைக் கட்டுமான வேலைகளைச் செய்து வருகின்றனர். 2014முதல் பயிற்சிப்பட்டறைகள் நடத்தி அதைக் கற்பித்து வருகின்றனர். இயற்கைக் கட்டுமானத்தைப் பரந்த அளவில் எடுத்துச்செல்ல ஒரு சிந்தனை எழுந்தது. அதனாலே இந்த ஆன்லைன் தொடர் உருவாக்க எண்ணினோம்‌. டிசம்பர் 2018 ல் அதன் தொடக்கப்பணிகள் நடைபெற்றது. பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டுத் தற்போது முதல் பாகம் வெளியிடுகிறோம். மீதமுள்ள பாகங்களுக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவை 2022ல் விரைவில் வெளியிடப்படும்.

போனஸ் வீடியோ

இயற்கைக் கட்டுமானக் குறிப்புகள்

5/5

வளங்குன்றா முறையில் இயற்கை வீடு கட்டுவோம். புவியின் இயற்கைச் சூழலைப் பாதுகாப்போம்

கற்றவர் மற்றும் வாசகர்களின் விமர்சனங்கள்

4/5
தாரா சப்ரு
தாரா சப்ரு
திரைக்கதை எழுத்தாளர் / நாடகக் கலைஞர்
Read More
உள்ளுர்ப் பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் இயற்கைப் பொருட்களை வைத்துக் கட்டிடம் கட்டும், பரந்த பாரம்பரியக் கட்டுமான முறை இப்பொழுது புறக்கணிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிட்டன. சீமெண்டு, கம்பி, விலை அதிகமான பில்டிங்க், ஊழல் நிறைந்த அரசுகள், பேராசைகள் நிரம்பிய சிட்டியில் சிக்கிக்கொண்டு இருக்கையில் தணல் ஒரு நிம்மதியா மூச்சு விடும் இடமா இருந்துச்சு. உங்களுக்கு இதப் படிக்கணும் னு ஆசை இருந்தாலோ அல்லது உமக்கு ஒரு வீடு நீரே கட்டணும்னு நினைச்சாலோ இந்த வொர்க்சாப் உதவும். அவங்ககிட்ட மறுமலர்ச்சியும் புரட்சியும் ஏற்படுத்தும் விதைகள் இருக்குது
கார்டர் ஜோசப்
கார்டர் ஜோசப்
ஆர்க்கிடெக்ட்
Read More
What an experience….. “Thannal” is not just about constructing Mud buildings, but a bold caption in paving a way to simplistic living in harmony with nature…..”Thannal” is a great place to start one’s journey towards natural building as it targets almost all aspects about managing & constructing buildings in most natural ways. I sincerely thank Biju Anna for his dedication, sincerity, attention and research, he has devoted in planning and executing such valuable courses and wish great success to the “Thannal Team” in inspiring greater crowds and communities.
அனு
அனு
ஒரு பெரிய தொடக்கம்
Read More
இயற்கைக் கட்டுமானப் பயணத்தைத் தொடங்க உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இயற்கை வழியில் வீடு கட்டுவதன் சாத்தியக்கூறுகளை புதியவர்களுக்கும் புரியும் வகையில் அறிமுகப்படுத்துகிறது. தணல், இந்தியாவில் ஓர் இயற்கைக் கட்டுமானப் புரட்சியை உருவாக்குகிறது.
ஆண்ட்ரூ மோர்கன்
ஆண்ட்ரூ மோர்கன்
பள்ளி ஆசிரியர், ஆஸ்ட்ரேலியா
Read More
Wow - where do I start? Our family flew in from the UK and had the best ten days with the Thannal crew at the natural building workshop. We learned, we laughed, we listened, we worked, we ate, we played and we shared. Thanks so much to everyone at Thannal and keep up the good work in spreading your message. We are just embarking on our own natural building in Australia and will try to keep all of the Thannal principles in mind. Thanks again, the Morgan Waters Family Andrew Morgan Hannah Waters, Felix and Ollie.
உமா வைஜ்நாத்
உமா வைஜ்நாத்
கலைஞர்
Read More
மட் பில்டிங்க் ஆழமா கத்துகிறனும் னா இந்தியாவில இவங்கல தவிர்த்து சொல்லித்தர ஆளுங்க இருக்காங்களானு தெரியல. ஒரு ஆளு வீடு கட்ட, பிஜு குடும்பத்தில் உள்ள எல்லாருமே 15 வயசுப் பையன் கூட முழு ஈடுபாட்டுடன் சொல்லித்தாரங்க. இந்த 10 நாள் பயிற்சி வகுப்பு, டெக்னிக்கலா தெரியாதவங்களுக்கும் புரியும். சாதாரண ஆளும் கத்துகிட்டு ஒரு வீடு டிசைன் பண்ணிக் கட்டலாம்.
ராஜீவ்
ராஜீவ்
சூழலுக்கு நெருக்கமான வீடு கட்டுவதை விளக்கியுள்ள நூல்
Read More
எக்கோ- பில்டிங்க் தொடர்பாக விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. தானே தன் வீட்டை இயற்கை முறையில் கட்ட விரும்புவர்களுக்கானது. கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டிய நூல்
R Sheela
R Sheela
Accountant General (A&E)
Read More
After a lot of research they have found a variety if ways to build your natural houses! excellent job!
ஆனந்தக்குமார்
ஆனந்தக்குமார்யோகா ஆசிரியர்
Read More
Excited to learn foundations of eco friendly, natural way of building .. ☺️ And how we can sculpt with natural materials like bamboo, soil, lime … Kudos to passionate Thannal team for researching, documenting various indigenous natural building resources and making very useful hands on training 👌 Admire the good mix of useful information, hands on training, clarifying doubts, open to consult ! Happy to see alternate architects who live what they teach and glad to hear stories of surviving flood in their hand crafted home 💚🤗.
நடராஜன் கிருஷ்ணசாமி
நடராஜன் கிருஷ்ணசாமி
கான்ட்ராக்டர்
Read More
மனநிறைவான வகுப்பு! மண் கொண்டு வளங்குன்றா முறையில் வீடு கட்ட தேடுதலில் இருந்தேன். தணலின் செயற்பாடுகள் என்னுடைய கவனத்தை ஈர்த்தன. கடல் அளவு உற்சாகத்துடன் பணி செய்யும் சிறுகுழு. இந்த மரபு முறை மேலும் மேலும் வலிமைபெறும். இயற்கையின் ஆற்றல் பெற்று தொடந்து பயணிக்க வேண்டுகிறேன்!
Previous
Next

உள்ளடக்கம்

குறிப்பு: தற்சமயம் பாகம் 1 மட்டும் காணலாம். பாகம் 5 ஏற்கனவே யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. மற்ற பாகங்கள் 2022ல் வெளிவரும்.

 • பாகம் 1 – இயற்கைக் கட்டிடக்கலையின் ஐம்பெரும்பொருட்கள் (தொடங்கப்பட்டது)
 1. இயற்கைக் கட்டுமானம் அறிமுகம்
 2. மண்
 3. மூங்கில்
 4. சுண்ணாம்பு
 5. சுடுமண் (சுர்கி)
 6. இடுபொருட்கள்
 • பாகம் 2 – சுவர் வகைகள் & அடித்தளம் – 7 க்கும் மேற்பட்ட சுவர் முறைகள் (தயாராகிறது)
 1. சுவர் வகைகள் அறிமுகம்
 2. மண்சுவர்(Cob)
 3. பச்சைக்கல்(Adobe)
 4. வரிச்சி சுவர்(வாட்டல் அண்ட் டாப்)
 5. மண் மூட்டை
 6. அமுக்கத்துள்ளாக்கப்பட்டு நிலைப்படுத்திய மண்கற்கள்(சிஎஸ்இபி)
 7. கற்கள், மண்மூட்டை, செங்கற்கள் பயன்படுத்தி அடித்தளம்
 • பாகம் 3- கூரை நுட்பங்கள்- ஓடு முதல் காரை வரை உள்ள பன்மயக் கூரை வகைகள் (அடுத்த நிலை)
 1. கூரை வகைகள்-அறிமுகம்
 2. சமதள மண் கூரை
 3. கிரு ரூஃப்
 4. கற்காரைக் கூரை (லைம்கிரீட் ரூஃப்)
 5. பச்சைக்கல் கூரை (அடோபி ரூஃப்)

இதரப் பாடங்கள்-

 1. மின் இணைப்பு & குழாய் இணைப்பு

   

 • பாகம் 4 – இயற்கை நிறைவுகள்- தளம் அமைவுகள் மற்றும் பூச்சுகள் (பிந்தைய நிலை)
 1. மண் பூச்சு
 2. சுண்ணாம்புப் பூச்சு
 3. மண்+ சுண்ணாம்புப் பூச்சு
 4. தள அமைத்தல்- மண், சுண்ணாம்பு மற்றும் ஓடுகள்
 • பாகம் 5– நம்மைச் சுற்றிய இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள் (ஏற்கனவே இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டது)

இயற்கை வீடு கட்டிய பயனாளிகள், கட்டிடக்கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களின் அனுபவங்களிடமிருந்துக் கற்றுக்கொள்ளலாம்.

5/5

ஓர் இயற்கைக் கட்டிடக்கலைஞராகப் பயணத்தைத் தொடங்குக

100% ஆன்லைன்

உங்கள் தோதுக்கேற்ற இயற்கைக் கட்டுமானப் பள்ளி. எங்கிருந்தும் ஸ்மார்ட்போன் மூலம் பார்த்துக் கட்டுமானச் செயலில் ஈடுபடலாம்

0% சிமெண்ட்

அடித்தளம் முதல் கூரை வரை சிமெண்ட் இல்லாமல் கட்டுமானம் எழுப்பக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

கரும்பலகைப் பாடம் அல்ல

அனைத்து முறைகளும் படிப்படியான விளக்கப்பட்டுள்ளது களத்தில் நடைபெற்ற நடைமுறைகளைப் படம் பிடித்துத் தொகுத்துள்ளதைக் காணலாம்

தொடர் ஆக்கத்திற்கு நன்கொடை உதவி

124 க்கும் மேற்பட்டோரின் நிதிப்பங்களிப்பால் எங்களது வேலைத் தொடர்ந்து நடைபெற்றது. இந்தப் பெரும்பொருள் உருவாக்கத்தில் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு தங்களை ஈடுபடுத்திய ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மதிப்பிட இயலாத ஆதரவால் தான் கோவிட்-19 தொற்றுக்காலத்திலும் காணொளி உருவாக்க வேலையில் ஈடுபட முடிந்தது‌.
இணைப்பு இங்கேயுள்ளது.

வீடு திரும்புதல் தொடரில் பணிசெய்யும் குழுவினர்

பிஜு பாஸ்கர் இயற்கைக் கட்டிடக் கலைஞர்

பிஜு பாஸ்கர்

நிறுவனர், ஆர்கிடெக்ட்
இயக்குனர், ஆசிரியர்

தணல் சிந்து பாஸ்கர்

சிந்து பாஸ்கர்

தணல் நிறுவனர்
திட்ட மேலாளர்

ஆர்க்கிடெக்ட் தரன் அசோக்

தரன் அசோக்

ஆர்கிடெக்ட், எடிட்டிங்
இயக்கம், ஒளிப்பதிவு 

அகில் சாஜன்

ஆர்கிடெக்ட்
ஆசிரியர்

கருப்பசாமி பாண்டி

து. கருப்பசாமி

சிவில் பொறியாளர்
ஆசிரியர், தமிழாக்கம்

நெ. ரமணி ராஜம்

ஆர்கிடெக்ட்
குரலொலி, ஓவியம்

அனுதீப்தி அருள்

ஆர்கிடெக்ட்
குரலொலி, ஓவியம்

முசம்மில் முகமது

முசம்மில்

ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆவணம்செய்தல்

5/5

உலகில் எங்கிருந்தும் இந்திய இயற்கைக் கட்டிடக்கலையின் பாடத்தை உங்கள் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு அதைக் கற்கலாம். 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இத்தொடர் சிறிது நேரம் ஒதுக்கி மண்ணில் கைவைத்துப் பயிற்சி செய்ய விரும்பும் யாவருக்குமானது. இந்தக் காணொளித்தொடர் பார்த்துக் கற்றபின் நீங்களே உங்கள் வீட்டை உங்கள் தேவைக்கேற்ப நீங்களே (DIY- style) வடிவமைத்துக் கட்டமுடியும்.

இயற்கை வீடு வேண்டும் பயனாளிகள்: இயற்கையாக வீடு கட்ட நினைக்கும் ஒருவருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் வகையில் இந்தத் தொடர் இருக்கும்‌‌. கட்டுமான முறைகள் மற்றும் பொருட்கள் பற்றிய புரிதல் பொருத்தமானக் கட்டுமான முறைகளை நடைமுறைப்படுத்துவதில் உங்களுக்கு உதவும். வீடுகட்டும் செலவைக் கட்டுக்குள் வைக்கலாம். இயற்கை வீடு கட்ட விரும்பும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கடைக்காரர்கள், இல்லத்தரசிகள் என எல்லா வகை மக்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொழில் வல்லுனர்கள்:தொழில் வல்லுனர்களான ஆர்க்கிடெக்ட், சிவில் இன்ஜினியர்ஸ், கலைஞர்கள், டிசைனர்கள், புராடெக்ட் டிசைனர்கள், கான்ட்ராக்டர், கொத்தனார் மற்றும் வேலையாட்கள் என யாவரும் செயல் வழியாக மண் கட்டுமானத்தைக் கற்கலாம். மாற்று வீடுகள் இக்காலத்திற்குத் தேவையானவை. அதனால் தொழில் வல்லுனர்கள் இதைக் கற்றுக் கொண்டால் தங்களது திட்டங்களில் செயற்படுத்தி பெரிய‌மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

கலைஞர்கள் மற்றும் தொழிலாளிகள்: கலைஞர்கள் மற்றும் தொழிலாளிகளுக்குப் திறன்மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதன் மூலம் அதிக வேலை வாய்ப்பும் மாற்றுக்கட்டுமானத்தில் தேவையான ஆட்களும் கிடைக்கும்.

மாணவர்கள்: ஆர்க்கிடெக்சர், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் ‘வளங்குன்றா கட்டுமானம்’ எனப் பாடமாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் செயல்வழிப் புரிதல் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி வடிவமைத்துக்கட்டுவதில் மாணவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும்‌. அதனால் அவர்கள் திறம்படச் செயற்பட்டு ஆக்கப்பூர்வமான தொழில் வல்லுனர்களாக உருவெடுக்கலாம்.

ஆய்வாளர்கள்: மாற்றுக் கட்டுமானம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் செய்யக்காத்திருக்கும் அனைத்து ஆய்வாளர்களுக்கும் இது ஒரு அடிப்படை மேற்கோளாகச் செயற்படும். தணல் செய்த ஆய்வுகள், மண், சுண்ணாம்பு, மூங்கில் மற்றும் இடுபொருட்கள் பற்றி ஆய்வுசெய்பவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமைய வாய்ப்பிருக்கிறது.

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மாற்று வாழ்வியல் ஆர்வலர்கள்: புவியைப் பாழ்படுத்தாம வீடு கட்ட நினைக்கும் விவசாயிகள், மரபு மருத்துவர்கள், மாற்று வாழ்வியல் மேற்கொள்பவர்கள், யோகா ஆசிரியர் என யாவரும் இந்தத் தொடர் மூலம் பயனடையலாம். மாற்று வாழ்வியல் நடைமுறை முழுமை பெற இயற்கைக் கட்டுமானமும் தேவையானது என்பதை நீங்களே அறிவீர்கள் Traditional medicine practitioners, yoga teachers, and people concerned about climate change who wish to live closer to nature can learn about mud homes.

தொழில் செய்ய விரும்புவோர்: இயற்கைக் கட்டுமானத்தைக் கற்று மற்ற பயனாளிகளுக்குக் கட்டுமானத்தில் உதவிசெய்ய இது ஒரு வாய்ப்பு. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இதைக் கற்றபின் செயல்வழிப் பயிற்சி செய்து தொழில் வல்லுனராகலாம்.

மாற்றுக் கல்வி பயிலும் சிறுவர்கள்: வாழ்வியலின் ஒரு அங்கம் தான் வீடு கட்டுதல். எனவே வீட்டிலே பயிலும் மாணவர்கள் அல்லது மாற்றுக்கல்வி பயிலும் மாணவர்கள் மண் கொண்டு வீடுகட்டுவதைப் பயிலமுடியும்.

சமையல் வழிகாட்டிக் காணொளிகள் போல வீடுகட்டுவதில் உள்ள செய்முறைகளையும் படிப்படியாக விளக்கியுள்ளோம்‌. பல்வேறு முறைகளைப் புரிந்துகொள்வதற்கு தாங்களே மாதிரிகள்(Samples) செய்வது முதல் அதைச் சோதித்து, பொருத்தமானது? பொருத்தமற்றதா? பொருத்தமற்றது என்றால் சரிசெய்வது எப்படி? என அனைத்துக் கோணங்களிலும் பாடங்கள் உள்ளன. அதனால் அது எந்தவகை மக்களுக்கும் புரியும்‌.

இந்தக் காணொளித்தொடர் பார்த்துக் கற்றபின் நீங்களே சோதனை செய்ய இதில் போதிய வழிகாட்டல்கள் உள்ளன. எதும் தவறு நேருமோ என்ற அச்சத்தை அதுப்போக்கி உங்கள் திறமையை வளர்க்கச் செய்யும்.
முதலில் சிறிய அளவில் கட்டுமானம் செய்து அதில் கிடைக்கும் பாடங்களுக்குப்பின்னர் உங்கள் தேவைக்கேற்ப வீட்டைக்கட்டலாம். உதாரணத்துக்கு சிறிய அளவு என்பது மட் அவண், 6*6 அடி அறை அல்லது மண்திண்ணை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை முழுத்தொடரும் கண்டபின் கட்டலாம்‌. காணொளியில் கொடுக்கப்பட்ட தகவல்கள் உங்கள் இடத்திற்கேற்ப மாற்றம் செய்து பயன்படுத்தவேண்டும்.

 1. இயற்கை கட்டுமானம் என்றால் என்ன என்பதே தெரியாதவரும் கற்றுக்கொள்ள எளிதாக இருக்கும்.
 2. வளங்குன்றா முறையில் கட்டிடம் கட்டுவதைக் கற்கலாம்.
 3. இணையவழி வகுப்பின் வழியாகக் கற்றுக்கொண்டு உங்கள் நிலத்திலேயே எண்ணற்ற சோதனைகள் செய்வதற்கானத் தொடக்கப்புள்ளி இது‌.
 4. இயற்கை வீடு கட்டுவது சாத்தியமா என்ற குழப்பத்தில் உள்ளவர்களுக்குப் போதிய புரிதல் ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்‌. இதில் இயற்கை கட்டுமானம் தேர்ந்தெடுப்பதற்கான போதிய விளக்கங்கள் உள்ளன.
 5. ஏற்கனவே இயற்கை கட்டுமானம் தொடர்பான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருந்தால் அந்தப் புரிதலுக்கு இந்த வகுப்பு வலுசேர்க்கும்.
 6. பல விதமான இடங்களைக்குறிப்பிட்டு அங்கே பயன்படுத்தப்பட்ட முறைகள் விளக்கப்பட்டுள்ளன. வழக்கமான பயிற்சி வகுப்பில் இது சாத்தியமல்ல. ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட கட்டுமானத்தேவைக்கேற்பதான் முறைகள் கற்றுத்தரப்படும்.
 7. ஏதேனும் குறிப்புகள் அல்லது விளக்கங்களை மறந்தால் திரும்பப் பார்த்துக்கொள்ளலாம். கோர்ஸ் காலாவாதியாகும் வரை இவ்வாறு காணலாம். ஏதேனும் குறிப்புகள் அல்லது விளக்கங்களை மறந்தால் திரும்பப் பார்த்துக்கொள்ளலாம். கோர்ஸ் காலாவாதியாகும் வரை இவ்வாறு காணலாம்.
 8. உள்ளூர் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் பாரம்பரியக்கட்டுமானத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கரும்பலகை முன்பு நின்று எடுக்கும் பாடம் அல்ல. அனைத்து முறைகளையும் படிப்படியாக விளக்கி இருக்கிறோம். கட்டிடம் கட்டும் இடத்தில் என்ன நடக்குமோ அதை நேரில் பார்ப்பது போல் காணொளியில் உணர்வீர்கள். அதனுடன் சேர்த்து குரல் பதிவும் உங்களுக்குச் செய்முறையைப் படிப்படியாக விளக்கும்‌. ஒரு பொருள் அல்லது தொழில்நுட்பத்தின் வெவ்வேறு பார்வையும் காணொளியிலே விளக்கப்படும்.

பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் படியாக எந்தவொரு நபரும் திரையில் வரமாட்டார்கள். ஆனால் காணொளியுடன் குரலொலி உங்களுக்கு வழிகாட்டும். காணொளி உருவாக்கம் என்பது சற்றே கூடுதல் பணிநிறைந்த ஒன்று. ஒரு நபரைத் தொடர் முழுவதுக்கும் திரையில் பேசச் செய்வது கொஞ்சம் கடினம். இந்தத் தொடருக்கான எழுத்து எழுதப்பட்டு பல மாற்றங்களை அடைந்து திருத்தம் செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டது. முக்கியமான படிநிலைகளைத் தவர விடக் கூடாது என்பதில் நிலைப்பாடு கொண்டிருந்தோம்‌‌. மூடிய அறையிலும் கட்டுமான வேலை நடைபெறும் களத்திலும் படப்பிடிப்பு செய்யப்பட்டது. இந்தச் செயல்முறை, காணொளி வழிக்கற்றுக் கொள்ளும் போது சிறந்தமுறையாக இருக்கும்.
சில கொள்கைகள் விளக்கப்படும் போது வண்ண ஓவியங்களால் அது தெளிபடுத்தப்பட்டிருக்கும். அதனால் கவனச்சிதறல் இன்றி காணொளியைப் பார்க்கலாம். நுட்பமானப் பாடங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ள அது உதவும். யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களுடன் தொடர்பு படுத்தி இதைக் குழப்பக்கூடாது. ஏனென்றால் அதன் தரம் மாறுபடும்; முறையாக எழுதாக்கம் செய்யாமல் விழிப்புணர்வுக்காக அவை வெளிடப்பட்டிருக்கும்

வீடியோ பார்ப்பதற்கென்ற கால அட்டவணை இல்லை. பணம் செலுத்தி வாங்கிய பின், கோர்ஸ் காலாவதியாகும் காலத்திற்கு முன்பு எத்தனை முறை வேண்டுமானாலும் காணலாம். வாராவாரம் பார்க்கவேண்டும் என்பது கிடையாது‌. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம். கோர்ஸில் வழிநடத்துபவர் யாரும் கிடையாது. ஒவ்வொரு வீடியோவாகக் கவனமாகப் பார்த்துப் பின்னர் மேற்கோள்களையும் படித்துவிட்டு ஒவ்வொரு இயல் முடிந்தபின்னும் செய்முறைப் பயிற்சி செய்யுங்கள். பாடம் நன்கு புரிவதற்கு அதில் குறிப்பிட்ட பயிற்சிகளைச் செய்துபார்ப்பது அவசியம்.

உங்களுக்குக் கட்டுமானம்பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் பயில்வதற்கு ஏற்ற வழிகாட்டிக் காணொளிகள் உள்ளன. அது கற்கும் முறையை எளிமைப் படுத்தும். சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தான் முறைகளைப் பிரித்து வகைப்படுத்தி நேரிடியாக எளிமையான விளக்கம் கொடுத்திருக்கிறோம்‌. நீங்களே உங்கள் கையால் செய்து பார்த்துக்கற்றுக்கொள்ள உதவும் வகையில் காணொளிகள் இருக்கும். இதன்மூலம் சிறிய வீடுகட்டி உங்கள் பயணம் துவங்கலாம்.

தற்போதைய நிலவரப்படி இப்பொழுது வாங்குபவர்கள் காணொளிகளை டிசம்பர் 2023 வரைப் பார்க்கலாம்‌. எதிர்காலத்தில் வாங்குவர்களுக்கு அப்போது உள்ள சூழ்நிலையைப் பொறுத்து காலாவதிக்காலம் மாறுபடும். இந்தக் காலம் பயின்று செயல்படுவதற்குப் போதுமானதாக இருக்கும் என்று கருதுகிறோம்.  கூடுதல் கட்டணத்தில் வாங்குவதன் மூலம் வாழ்நாள் முழுக்க இப்பாடங்களைப் பார்த்துப் படிக்கவும் செய்யலாம்.

உங்களது கணினி, மடிக்கணினி மற்றும் கைபேசி ஆகியவற்றில் இணையதள வசதியுடன் பிரவுசர் அல்லது செயலியில்(ஆண்ட்ராய்டு & IOS) பாடங்களைக்காணலாம். (IOS ஆஃப் விரைவில் வரும்) வகுப்பு ஆரம்பித்தபிறகு கட்டுமானப் பொருளான மண், மூங்கில், சுண்ணாம்பு, தாவர மற்றும் விலங்கு இடுபொருட்கள் மற்றும் கட்டுமானக் கருவிகள் ஆகியன செயல்வழிக் கற்றலுக்குத்(நீங்களே உங்கள் இடத்தில் வேலை செய்ய) தேவைப்படும்.

4 பாகங்களும் இணைந்து மொத்தமாக 9-10 மணி நேரம் எடுக்கும். முதல் பாகம் 3.5 மணி நேரம் கால அளவைக் கொண்டது. முதல் பாகம் இப்பொழுது நீங்கள் காணலாம்.

பாடங்கள் அனைத்தும் போதிய விளக்கங்கள் கொண்டது. ஏதும் சந்தேகம் இருந்தால் இணையவழிப் போர்டல் மூலம் எங்கள் குழுவைத்தொடர்பு கொள்ளலாம். இது இணைய வழித்தொடரின் முதல் பாகம் மட்டுமே. ஒரு வீடு கட்டுவதைப் பற்றிய முழுத்தகவலும் அனைத்துப் பாகங்களையும் பார்த்தாலே பெற முடியும். மீதிப் பாகங்கள் அடுத்த வருடம் 2022ல் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. சில வரம்புகளின் காரணமாக நேரலையில் சந்தேகம் தீர்க்கும் அமர்வுகள் இப்பொழுது இருக்காது

இந்த வகுப்பிற்குச் செலுத்திய பணம் திருப்பிக்கொடுக்கும் வசதி இல்லை. ஆனால் காணொளிப்பாடங்களில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முன்னோட்டம் இருக்கும்.

தற்சமயம் அந்த வாய்ப்பு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவர்களுக்கான குழு பின்னர் ஏற்படுத்தப்படும்.

ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்கும் நாள்  அக்டோபர் 8, 2021 யுடன் முடிவுற்றது. 

அப்படி மாற முடியாது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்குத் தனித்தனியானக் காணொளித்தொகுப்புகள் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒவ்வொரு இயலிலும் இலவசமான முன்னோட்டக் காணொளிகள் இருக்கும். அதைப்பார்த்துவிட்டு கோர்ஸை வாங்கவும். மொழிமாற்றி என்ற வசதி இல்லை.

இயற்கைக் கட்டுமானக் களஞ்சியம் - முழுவழிகாட்டி

வெளியிடப்பட்டது

Copyright © 2021 Thannal Natural Homes Pvt.Ltd

Scroll to Top