பணிப்பயிற்சி

ஆர்வத்துடன் கற்கவும் பயிற்சி பெறவும் இயற்கைக்கட்டிடக் கலைஞராகவும் விரும்புவோர், பணிப் பயிற்சி(Apprenticeship) மற்றும் உள்ளீட்டுப்பயிற்சிக்கு(Intership) விண்ணப்பிக்கலாம். தணலின் கொள்கைகளை நன்றாகப் புரிந்து கொண்டவர்களையும் தணலின் வளர்ச்சியில் ஈடுபடுபவர்களையும் எதிர்நோக்கிக்காத்திருக்கிறோம்.

தணல், ஆய்வு மற்றும் ஆவண படுத்துதல் வழியாகத்தான் கற்றுக்கொள்கிறது. எனவே பணிப்பயிற்சி பெறுபவர் எங்களுடைய கட்டுமானத்திட்டங்களைப் பற்றியும் மற்ற மரபு வீட்டைப் பற்றியும் அதிக ஆவணம் செய்ய வேண்டும். நிழற் படக் கலை, ஓவியக்கலை மற்றும் எழுத்துத் திறன்மூலம் எங்களுடைய ஆவணப்படுத்துதல் பணிக்கு உதவலாம். மக்கள் தங்கள் கைகளில் மூலமே வேலை செய்து செய்முறைப் பயிற்சி பெறுவதை விரும்புகிறோம். இது இயற்கைக் கட்டுமானப் பொருட்களை நேர்த்தியாகப் பயன்படுத்த உதவும். இந்தப் பாடத்திட்டத்தில் கள ஆய்வும் ஒரு பகுதியாக இருக்கும். நமது மரபுத்தொழில்நுட்பங்களை பல்வேறு சூழலில் எப்படிப் பொருத்துவது என்பதற்குத் திறவுகோலாக அது அமைகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தைப்பூர்வீகமாகக்கொண்ட தொழில்நுட்பங்கள் நடைமுறையில் சாத்தியமான தீர்வாக எப்படி அமையும் என்பதைக் கள ஆய்வு வழிக் கற்றுக் கொள்ளலாம்.

இயற்கை கட்டுமானத்தின் துவக்க நிலையைக் கற்ற பின்னர் அம்மக்கள், தேர்ந்தெடுத்து செய்யும் கட்டுமானத் திட்டங்களில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுவர். பொதுவாகக் கிராமப்பகுதியில் அத்திட்டங்கள் நடைபெறும். நகரங்களைவிட அதிக கிராமங்கள் உருவாக விரும்புகிறோம். நுகர்வு கலாச்சாரத்தில் இருப்பவர்களைத் தவிர்ப்பது நன்று. அதனால் பேராசைப் படுவோரைத் தவிர்த்துத் தேவைப்படுவோருக்கு தணலின் சேவை போய்ச் சேரும். இந்த மாதிரியான சூழ்நிலையில் வேலை செய்வதால் இயற்கை வழி வாழ்வியலின் அடிப்படையைக் கற்றுக்கொள்ளலாம்.

இயற்கைக் கட்டுமானக் கல்வி என்பது மெதுவானச் செயல்முறை என்பதால் பொறுமையுடன் எங்களின் கால அட்டவணையின்படி வேலை செய்ய முடியும் என்பவர்களையே எதிர்ப்பார்க்கிறோம். இயற்கை வழி வாழ்வியல் மற்றும் பொருட்கள் தொடர்பாக ஒத்த எண்ணங்கள் கொண்டவர்களிடம் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். அது தணலில் உள்ள ஒவ்வொருவரும் கற்பதற்கு வாய்ப்பை நல்கும்.

தணல் மேலும் இலக்கியம் மற்றும் இசை ஆகியன மூலம் இயற்கை வழி வாழ்வியலைப் பற்றிப் பரப்புரை செய்யத்திட்டமிடுகிறது. அதனால் கட்டிட வடிவமைப்பியல் துறைக்கு அப்பாற்பட்ட பல துறைகளிலும் ஆர்வமிக்கவரை எதிர்பார்க்கிறோம்.

சிமெண்ட் மற்றும் மற்ற தொழிற்சாலைப் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்த்துக் கட்டுமான மூலப்பொருட்களைக் கிடைக்கும் நிலையிலேயே பயன்படுத்தி, ஆய்வு செய்து சோதனை செய்து, மரபுக் கட்டுமானத்தைப் பல பரிணாமங்களில் எடுத்துச்செல்ல விரும்புகிறோம். தணல் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு என்பதால் எங்களால் எந்த ஒரு உதவித் தொகையும் பணிப்பயிற்சி பெறுபவருக்கும் உள்ளீட்டுப்பயிற்சி பெறுபவருக்கும் தர இயலாது. பணிப் பயிற்சி அல்லது உள்ளீட்டுப்பயிற்சிக்கு  காலிப்பணியிடங்கள் பக்கங்களில் உள்ள விண்ணப்பம் வழியாக மட்டுமே விண்ணப்பித்து 2 வாரங்களுக்கு எங்களுடைய பதிலுக்குக் காத்திருக்கவும்.

பணிப்பயிற்சி/உள்ளீட்டுபயிற்சிக்கு விண்ணப்பிக்க முக்கிய விதிமுறைகள் 
10 நாட்கள் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர் அல்லது இணையவழி வகுப்பில் முழுக்களஞ்சியம் அல்லது முழுப்பாடத்தொகுப்பு வாங்கிக் கற்றுக் கொண்டவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை எந்தப் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்றால்  வரக்கூடிய 10 நாட்கள் பயிற்சிப்பட்டறைக்கு முழுக் கட்டணம் செலுத்தி அதில் கலந்துகொள்ளப் பரிந்துரைக்கிறோம். அது உங்களுக்குத் தணலைப் பற்றியும் தணல் பின்பற்றும் கொள்கைகளைப் பற்றியும் புரிந்து கொள்ள உதவும்.

இயற்கைக் கட்டுமானப் பணிப்பயிற்சிக்கு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்

எங்களுடைய பயிற்சிப்பட்டறை அல்லது இணையவழி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 

 இயற்கை வழியில் கட்டுமானத்தை எழுப்ப ஆர்வமிக்க ஒவ்வொருக்கும் திறந்ததே! எங்களுடன் வேலை செய்ய முறையான கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லை. கல்லூரி இடைநிறுத்தம் பெற்றவர்கள், ஏதாவது ஒரு துறையின் வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். கட்டிட வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும் கூடப் பணிப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

களத்தில் முழுக்கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.  உற்று நோக்குதல் உடன் கற்கவும் பகுப்பாய்வு செய்யவும் மற்றும் சோதனை செய்யவும் ஆர்வமுள்ளவர்கள் எங்களுடைய குழுவில் இணைய தகுதி பெற்றவர்.

சரியான கேள்வி. ஏதேனும் ஒரு பயிற்சிப்பட்டறை அல்லது இணையவழி வகுப்பில்  கலந்து கொள்ள ஆரம்பியுங்கள். அங்கே நாங்கள், உங்களது  மனம், ஆவி, குணத்தைப் புரிந்து  கொள்ள முடியும்.

கண்டிப்பாக உங்களது அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் இல்லை என்றால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்.

ஒவ்வொருவரின் புரிதலும் வேறுபடும் என்பதால் கால அளவு மாறுபடும். குறைந்தபட்சம் 1.5 வருடங்கள் தணலுடன் வேலை செய்வது அல்லது இரண்டு கட்டுமானத் திட்டங்களில் பணிபுரிவதால் இயற்கை கட்டுமானம் பற்றிய புரிதலைப் பெற முடியும். கட்டுமானத்துடன் நீங்களும் வளருவீர்கள். உங்களுடைய பிழைகள் மூலமும் கற்றுக் கொள்வீர்கள்.

 குறைந்தபட்சம் 1வருட கால அளவில் எங்களுடன் இணைந்து பணியாற்றிக்கட்டுமானச் செயல்முறையின் பல்வேறு படிநிலைகளிலிருந்து கற்றுக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 6 மாத கால அளவு கிடையாது.

ஒருபோதும் நீங்கள் அறிய மாட்டீர்கள். நேர்காணல் ஒன்றை வைத்து ஒருவரைப் புரிந்து கொள்ள முடியாது. தணலின் வேலை செய்யும் விதம் வழக்கத்தில் உள்ள முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஒரு குழுவாக வேலை செய்து ஒவ்வொருவரின் இடத்திற்கும் கருத்திற்கும் மதிப்பளிக்கப்படும்.

கற்றல் என்பது மெதுவான செயல்முறை. பொறுமை தேவைப்படும். மனமார களத்தில் இறங்கி வேலை செய்யவும், உடன் நிகழ்வாக நடப்பில் உள்ள வேலைகளை ஆவணப்படுத்தவும் செய்ய வேண்டும். நகைப்புத்திறன் கொண்டிருந்தால் வரவேற்கதக்கது.

பணிப்பயிற்சி பெறுபவர் மற்றும் உள்ளீட்டுப்பயிற்சி பெறுபவர்  காலிப்பணியிடங்கள் பற்றித் தெரிந்து கொள்ள காலிப்பணியிடங்கள்  பக்கத்திற்குச் செல்லவும்.

இணையவழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

செய்தி & டி‌வி

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

This post is also available in: English

Scroll to Top