ராஜஸ்தானின் பூச்சுகள்.

ராஜஸ்தானின் பூச்சுகள்.

ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம். அரண்மனைகளின் காணப்படும் ஆடம்பரமான நிறைவுகள்(Finishes) அல்லது பூச்சுகள் ஒன்று. மற்றொன்று சிக்கனமானப் பூச்சுகள். இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை. ஜெய்ப்பூர் அரண்மனைகளில் காணப்படும் நிறவமைவுகள் மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்டவை மற்றும் விலை உயர்ந்தவை. இதைச் செய்வதற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டாலும் அதற்கேட்ப மிக நீண்ட காலம் நீடிக்கும் தன்மைகொண்டது. மென்மையான அரைஷ்(Araish) பூச்சு முதல் பலவிதமான சுண்ணாம்பு வண்ணங்கள்வரை பலவிதமான சாத்தியங்களை வழங்குகின்றன. இதற்கு மாறாக, இங்குள்ள கிராமங்களின் காணப்படும் பூச்சுகள் பொதுவாக, உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை, தயார் செய்வதும் எளிது, மறுபயன்பாடுக்கும் உரியது.

அரைஷ்: அரைஷ் என்ற நிறைவை ஒருமுறைப் பார்த்தால் அது கண்ணிலிருந்து நீங்காது‌. அவ்வளவு கவர்ச்சி வாய்ந்த அந்தப் பூச்சுத் தடவிப் பார்த்தால் அவ்வளவு மென்மையாகயாகப் பளபளப்பாக இருப்பதை உணர முடியும். மேற்கத்திய நாடுகளில் செய்யும் “டேடலாக்ட” பூச்சுவைப் போல இதுவும் நீர்த்தடுப்பு திறன்‌கொண்டது‌. அப்பூச்சு செய்யச் சூளைகளின் பொருட்களும் சமையல் பொருட்களும் போதும். நட்பமும் துல்லியமும் தெரிந்த கலைஞரால் கவனமாகச் செய்யப்படுகிறது. இறுதியாக நாம் பார்க்கும் மென்மையானப் பூச்சுக்கு முன்பு பல அடுக்குகளாகப் பூச்சுகள் பூசப்படுகின்றன. அந்த ஒவ்வொரு அடுக்கின் செயல்பாடும் மாறுபடும். அதனால் அதன் மூலப் பொருட்களும் அதன் விகிதமும் மாறுபடும்.

சுர்கி– கல் சுவர்களுக்கு மேல் உள்ள முதல் அடுக்கு, நீர்த்த சுண்ணாம்பு, சுடுமண் பொடி(சுர்கி), குக்குலு (Commiphora wightii), இயற்கை பசை, வெந்தயக் கரைசல், வெல்லம், மற்றும் பலாசு(புரசு) ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிற அடிப்படைப் பூச்சு ஆகும். இந்த பொருட்களைக் கலந்து சில மாதங்கள் புளிக்க வைத்துப் பின் பூசப்படுகிறது.

ஜிக்கிபூச்சு – சமமான அளவில் சுண்ணாம்பு மற்றும் மார்பில்பொடி ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படுகிறது, இது அரேஷ் பூச்சுக்கான அடித்தளமாக விளங்குகிறது.

கடைசி அடுக்கு- ஆறு மாதம் நீருக்கடியில் சேமித்து வைத்த பக்குவம் அடைந்த சுண்ணாம்புடன் தயிர் சேர்த்து மேலும் ஆறு மாதங்களுக்குப் புளிக்க வைக்கப்படுகிறது. இந்தப் பசைபொருளை இறுதியாகப் பூசுவார்கள். பின்னர் பளபளப்பான தன்மை அடையும் வரை வட்டமான கல்லைக் கொண்டு மெருகூட்டப்படுகிறது

ண்ணப் பூச்சு: இது அரைஷ் பூச்சைப் போலவே செய்யப்படுகிறது. வேறுபாடு என்னவென்றால், விரும்பிய வண்ணங்களை அடைய ஒரு வர்ணப்பொடி சேர்க்கப்படுகிறது. பொதுவான மஞ்சள் வண்ணத்தில் முலாம்(Paint) பூச சுண்ணாம்பு மஞ்சள் நிற மண்ணைக் கலந்து பின் தூரிகை மூலம் இரண்டு முறை பூசப்படும்.

மண் பூச்சு – குளங்களின் கரையிலிருந்து சிக்னி மிட்டி அல்லது களிமண் மண் 3 பங்கும் நாட்டுப் பசுவிலிருந்து பெறப்பட்ட சாணம் ஒரு பங்கும் கலக்கப்படுகின்றன. இவை இரண்டும் பிசையப்பட்டு, பயன்படுத்துவதற்கான சரியான பதம் அடைய போதிய நீர் சேர்க்கப்படுகிறது. இவை கைகள்மூலம் பூசப்படுவன. சுவாரஸ்யமான வடிவங்களை உருவாக்கக் கல் சுவர்கள் அல்லது மண் சுவர்களில் தேவையான பாங்கில் பயன்படுத்தப்படும். இந்தச் சுவர்கள் தேவைக்கேற்ப மீண்டும் மறு பூச்சு பூசப்படலாம்.

சுண்ணாம்புக் கழிவுப் பூச்சுகள்– இரண்டு பங்கு ஆற்று மணலுடன் சுண்ணாம்பு தூள் கழிவுகள் ஒரு பங்கு சேர்க்கப்பட்டு நன்கு கலக்கப்படுகின்றன. வலிமையை மேம்படுத்துவதற்கு, ஒரு இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தயம் விதை நீர் மற்றும் வெல்லம் நீர், கலவையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அவை சுவர்களில் பூசப்படுகிறது.

Musharaff Hebballi

This article is by Natural builder Biju Bhaskar & Musharaff Hebballi

This post is part of our Natural finishes series.

This post is also available in: English

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on email

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

Cementum athan mohamum
இயற்கை நிறைவுகள்

தீஞ்சுதையும்(சிமெண்டும்), அதன் மோகமும்

சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.

இயற்கை நிறைவுகள்

ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.

பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top