ராஜஸ்தானின் பூச்சுகள்

இயற்கை பூச்சுகள் -தொடர் 6

ராஜஸ்தானில் நீங்கள் இரு வகையான வரம்புகளையும் காணலாம்.அரண்மனைகளின் காணபடும் ஆடம்பரமான பூச்சுகள் ஒன்று மற்றும் கிராமங்களின் காணப்படும் சிக்கனமான பூச்சுகள், இவை இரண்டுமே இயற்கை பொருட்களைப் கொண்டு உருவாக்கப்பட்டவை.ஜெய்ப்பூர் அரண்மனைகளில் காணப்படும் பூச்சுகள் மிகவும் விரிவாவை மற்றும் விலை உயர்ந்தவை. இவை நுட்பமான திறனுடன் முடிக்கப்பெற்றவை, நேரத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்கேட்ப மிக நீண்ட காலம் நீடிக்கும் தன்மைகொண்டது.மென்மையான அரேஷ் பூச்சு முதல் பலவிதமான சுண்ணாம்பு வண்ணங்கள் வரை பலவிதமான சாத்தியங்களை வழங்குகின்றன. இதற்கு மாறாக, இங்குள்ள கிராமங்களின் காணபடும் பூச்சுகள் பொதுவாக
உள்ளூரில் கிடைக்கும் மூல பொருட்கலைக் கொண்டு உருவாக்கப்பட்டவை, பயன்படுத்தவும் எளிது மற்றும் மறுபயன்பாட்டீற்கு உரியது.
அரேஷ்: இந்த கண்கவர் பூச்சு, பிரதிபலிக்கும் மேற்பரப்பைக் கொண்டு,பார்ப்பவர்களின் கண்களை மட்டுமல்லாது, அவர்களின் தொடு உணர்வையும் கவர்ந்திழுக்கும் வகை அதன் மேற்பரப்பு மென்மையான தோற்றம் கொண்டது. இது இந்தியாவின் ததேலாக்(நீர்புகா மேற்பரப்பு பூச்சு) சூளை மற்றும் சமையலறையிலிருந்து கிடைகும் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கவனமாகவும் துல்லியமாகவும் பயன்படுத்தினால் இந்த பூச்சு வேலை ஒரு கலை.இறுதி தோற்றத்தைப் பெறுவதற்கு முன்பு, மெல்லிய வெளிப்புறத்திற்குள் நிறைய அடுக்குகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தரமும் செயல்பாடும் கொண்டவை.
சுர்கி- கல் சுவர்களுக்கு மேல் உள்ள இந்த அடுக்கு, வெட்டப்பட்ட சுண்ணாம்பு, எரிந்த களிமண் தூள் (சுர்கி), கோகோல் (தூப), இயற்கை பசை, வெந்தய விதையின் நீர், வெல்லம், மற்றும் கெசுலே கே புல்(கோட்டை மலர்) ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிற அடிப்படை பூச்சு ஆகும். இந்த பொருட்களை கலந்து பயன்படுத்துவதற்கு முன் சில மாதங்கள் புளிக்க வைக்கப்படுகின்றன.
ஜிக்கிபூச்சு – சமமான சுண்ணாம்பு மற்றும் பளிங்கு தூசி ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது, , இது அரேஷ் பூச்சுக்கான அடித்தளமாக விளங்குகிறது.
கடைசி அடுக்கு- ஆறு மாதம் முதிர்ச்சியடைந்த மக்குலிருந்து சுண்ணாம்பு பால் எடுத்து தயிரில் சேர்த்து மேலும் ஆறு மாதங்களுக்கு புளிக்க வைக்கப்படுகிறது. இந்த பசை அடித்தளத்தின் மீது பூசப்பட்டு பின்னர் ஒரு பளபளப்பான தன்மை அடையும் வரை வட்டமான கல்லைக் கொண்டு மெருகூட்டப்படுகிறது.

வண்ணமுட்டப்பட்ட சுண்ணாம்பு பூச்சு: இது அரேஷ் பூச்சை போலவே செய்யப்படுகிறது, வித்தியாசம் என்னவென்றால், விரும்பிய வண்ணங்களை அடைய ஒரு வர்ணம் சேர்க்கப்படுகிறது. பொதுவான மஞ்சள் வண்ணம் பெறுவதற்கு, சுண்ணாம்பு கலவையில் மஞ்சள் மண்ணை கலந்தப் பின் தூரிகை மூலம் இரண்டு முறை பூசபடும்.
மண் பூச்சு – குளங்களின் கரையிலிருந்து சிக்னி மிட்டி அல்லது களிமண் மண் 3 பங்கிள் நாட்டின பசுவிலிருந்து பெறப்பட்ட 1 பகுதி புதிய சாணத்துடன் கலக்கப்படுகின்றன. இவை இரண்டும் பிசையப்பட்டு, பயன்படுத்துவதற்கான சரியான நிலைத்தன்மையை அடைய போதிய நீர் சேர்க்கப்படுகிறது.இவை கைகள் மூலம் பூசப்படுவன.சுவாரஸ்யமான வடிவங்களை உருவாக்க கல் சுவர்கள் அல்லது மண் சுவர்களில் அடர்த்தியான அடுக்குகளில் பயன்படுத்தப்படும். இந்த சுவர்கள் தேவைக்கேட்ப மீண்டும் மறு பூச்சல் பூசப்படலாம்.
சுண்ணாம்பு கழிவு பூச்சுகள்- இரண்டு பங்கு ஆற்று மணலுடன் சுண்ணாம்பு தூள் கழிவுகளின் ஒரு பகுதியில் சேர்க்கப்பட்டு நன்கு கலக்கப்படுகின்றன. வலிமையை மேம்படுத்துவதற்கும் மேலும் வழுக்குட்டுவதற்ம் ஒரு இரவு முலுவதும் ஊறவைத்த மெதி (வெந்தயம்) விதை நீர் மற்றும் வெல்லம் நீர் கலவையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அவை சுவர்களில் பூசப்படுகிறது.
மற்ற சுவாரஸ்யமான இணைப்புகள்:
வழக்கமான சொல்லியல்- சுண்ணாம்பு பூச்சு/கலவை/முன் கலவை பொருட்கள்/விகிதம்/கண்ணாடி

பாரம்பரிய சுண்ணாம்பு அரேஷ் புகைப்படங்கள் மற்றும் பட்டறைகள்

This article is by  Natural builder Musharaff Hebballi ,One of the founders of Natural Builders of India . This post is part of our Speaking Natural Finishes series.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *