படோடு கல் வீடு

படோடு கல் வீடு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான்

பிங்க் நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரின் புறநகர்ப் பகுதிகளில் ஒருவர் இவ்வகையான வீட்டைக் கடக்காமல் வந்திருக்க முடியாது. அவை தான் கல் கூரை வீடுகள். இத்தகைய வீடுகள் ஓலை,மண், மற்றும் கல் வீடுகளுக்கு இணையாக அப்பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது.தொலைவில் இருந்து பார்க்கையில் இவ்வீட்டின் கட்டமைப்பானது ஒன்றோடு ஒன்று இணைந்தது போல் தோற்றம் அளிக்கிறது. தூண்கள்(column), விட்டங்கள்(Beams) மற்றும் கூரை உறுப்புகள்(Roofing members) ஆகிய அனைத்துக்கும் ஒரே விதமான கல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. படோடு என்று அழைக்கப்படும் இந்த வீடுகள் ஜோத்புரி பட்டி எனப்படும் இளஞ்சிவப்பு மணற்பாறையின் கற்களால் ஆனவை.

இவ்வகையான வீட்டின் தனி அழகு என்னவென்றால், அடிப்படைக் கட்டமைப்பானது முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இந்தச் சட்டகத்தை மறைத்து தடுப்பமைவு செய்ய அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருளைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தப்படும் பொருட்கள் அவற்றின் இருப்பு நிலை மற்றும் கிடைக்கும் சாத்தியக்கூறுகளைப் பொறுத்து மாறுபடும். கற்கள், மண், செங்கற்கள்,நாணல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சுவர் கட்டப்பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒவ்வொரு வீடும் தனித்துவம் அடைகிறது.

கட்டுமான முறை:

  • தேவைக்கேற்ப கற்களை வெட்டி வடிவம் கொடுத்துப் பின்னர் வீடு கட்டும் இடத்திற்குக் கொண்டுவரப்படும்.
  • நிலத்தினுள் 2 அடி ஆழத்தில் கற்தூண்களை நட்டி செங்குத்தாக நிறுத்தி நன்கு பொருத்த வேண்டும்.
  • தூண்களின் மீது விட்டம்(Beam) உட்காருவதற்கு ஏதுவாகப் பள்ளம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மையத்தில் உள்ள தூண்கள் இரண்டு விட்டங்களும் இணையும் இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும்

இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?

இயற்கைக் கட்டுமானத்தை உலகில் எங்கிருந்தும் எப்பொழுதும் தணலுடன் சேர்ந்து கற்கலாம்.

கூரை:

  • விட்டங்களின் மீது பலகைக்கல் மேற்பொருத்தி அதாவது இணைப்பில் உள்ள கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக பொருத்தப்படுகிறது. கல் பலகையைப் பொறுத்தும் இடத்தில் அதாவது தூலத்தின் மேற்பரப்பைத் தேய்த்து சொரசொரப்பாக மாற்றுவதால் இரண்டும் நன்கு பிணைந்துவிடும். தேவைப்பட்டால் விட்டத்திற்கும் பலகைக்கல்லுக்கும் இடையில் உள்ள இடைவெளியை சிறு கற்களைக் கொண்டு அடைக்கலாம். இந்தக்கூரைகள் ஒற்றைக்கல் அமைப்பைக் கொண்டதால், 45டிகிரி சாய்வு தேவையில்லை; அதனால் குறைவான பொருட்களே தேவைப்படும்.
  • பலகைக்கற்களுக்கு இடையே சிறு இடைவெளி காணப்படும்‌. இந்த இடைவெளியை நிரப்பி நீர்க்கசிவைத்தடுக்க ‘பக்ரா’ எனும் சுண்ணாம்புக்கலவை பயன்படுகிறது. சில நேரங்களில் இந்தக் கற்பலகையின் மீது குஞ்சா நாணல்(saccharum munja) கொண்டு மூடப்படும்.

கட்டமைப்பு:

தூண்களின் எண்ணிக்கை-9, விட்டங்களின் எண்ணிக்கை- 6 பலகைக்கற்களின் எண்ணிக்கை- 11 -13

தூண்கள் மற்றும் விட்டங்களின் அளவு: தடிமன் -4″ அகலம்-1′ நீளம்- 12 அடி வரை

பலகைக் கற்களின் அளவுகள்: தடிமன் -2″ அகலம்-1அடி நீளம்-12′ அடி வரை

ஒரு படோடு வீடு, 2நாட்களில் கட்ட 5 ஆட்கள் தேவைப்படும்; 30000ரூபாய் வரை செலவாகும்‌.

இவ்வகை வீடுகள் விரைவில் கட்டி முடிக்கக்கூடியது என்பதால் பேரழிவிற்குப் பின் உடனடியாகக் கட்டி மேலாண்மைப்பணி செய்யலாம்; அவசரமாக வீடு கட்ட வேண்டும் என்ற நிலையிலும் தீர்வாக அமையும். இந்த வகையான‌ கற்கள் அபரிமிதமாகக் கிடைத்தாலும் இயற்கையை பாழ்படுத்தாதவாறு சிறிய அளவில் வீடுகட்டுக. இது துரிதமாகக் கட்டி எழுப்பும் கான்கிரீட் காடுகளுக்கு மாற்றாக அமையும். அரசு, கிராமங்களில் செயல்படுத்தும் யோஜனா திட்டங்கள் மூலம் நவீன வீடுகளாக மாற்றிவருகிறது.. இத்திட்டத்தின் கீழ் படோடு வீடுகளைக் குறைவான விலையில் கட்டித்தரலாமே!

ஒரு வீட்டின் அனைத்துப் பாகங்களையும் ஒரே வகையான பொருளை வைத்துக் கட்டமுடியும் என்பது பலருக்கும் புதுத்தகவலாக இருக்கும். ஆம், ஒரு வீட்டின் தூண்கள், விட்டங்கள், சாளர விட்டம், தளம், கூரை உறுப்புகள், இருக்கைகள், தாழ்வாரம் என அனைத்தும் ஒரே வகையான பொருளை வைத்து அமைக்கலாம்.

மேற்கண்ட கட்டுமான முறையில் அடிப்படையான கட்டமைப்பு(structure) எளிமையானது; அதன் உறுப்புகளுக்கு(members) இடைப்பட்ட இடைவெளியை எப்படி வேண்டுமானாலும் விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம் என்பது அதன் தனிச்சிறப்பு. ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பிலும் கட்டுமான முறையிலும் இந்தமாதிரியான தனிச்சிறப்பை உணர வேண்டும் என்றால் கிராமங்களில் மட்டுமே முடியும். உள்ளூரில் தாராளமாகக் கிடைக்கும் பொருட்களின் முழுதிறனையும் அறிந்து பயன்படுத்தியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். கட்டுமானப் பொருட்களின் கட்டமைத்தொகுதிறன்(Structural Integrity) மற்றும் மதிப்புகளைப் புரிந்து கொண்டால் தேவைக்கேற்ப அளவான வீட்டை அழகாகக் கட்டலாம்.

தமிழாக்கம்: இ.குகப்பிரியா & து.கருப்பசாமிபாண்டி
ஆங்கிலத்தில் எழுதியவர்: முஷாரஃப் ஹெப்பலி
இக்கட்டுரை கிராமத்தின் பழம்பெரும் வீடுகள் தொடரின் ஒன்று.

All Posts

This post is also available in: English

1 thought on “படோடு கல் வீடு”

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on email

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

இயற்கை நிறைவுகள்

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.

கிராமத்தின் பழம்பெரும் வீடுகள்:

இயற்கை வேலிகளும் உயிர் வேலிகளும்

ஒருவரின் வேலியை வைத்தே, அவரின் மனதைத் தீர்மானிக்கலாம். நவீன வேலிகளுக்கு மாறாக, இயற்கை மற்றும் உயிர் வேலிகள் வளமானதும், ஆரோக்கியமானதும் கூட.

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top