3 நாட்கள் செயல்-வழியில்

உழவர்களுக்கான இயற்கைக் கட்டுமான வகுப்பு

உழவர்களுக்கான இயற்கைக் கட்டுமான வகுப்பு

மூன்று நாட்கள் வகுப்பு – இயற்கைக் கட்டிடக் கலை திருவண்ணாமலை, தமிழ்நாடு நாள் : தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை

இயற்கை வாழ்வியல் சார்ந்து கிராமத்தில் முழுநேரமாக ஆழ்ந்து செயல்படும் தாய்மொழி மட்டுமே தெரிந்தக் களச்செயற்பாட்டாளர்களுக்குக் கட்டுமானப் பயிற்சி.

இம்மண்ணில் விதையாய் விதைக்கப்பட்ட அய்யா நம்மாழ்வாரும், அவரின் வழி வந்த ஒத்திசைந்த இயற்கைச் சிந்தனையுள்ளவர்களால், தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மையும், உணவு முறையும் செழுமையடையத்துவங்கியுள்ளது. மாற்றுக்கல்வி, மரபு வழி மருத்துவம், சூழலுக்கு ஏற்ற இயற்கை உடை என்று இயற்கை வாழ்வுக்கான பல நல்ல மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேயுள்ளது. அதேபோல இயற்கைக் கட்டுமான முறைகளை அறச்சிந்தனையுள்ளவர்களின் மனதில் விதைக்க இதுவே சரியான நேரமாகும்.

மரபு விதைகளும், நஞ்சில்லா உழவாண்மையும் இயற்கை வழி வேளாண்மைக்கு எவ்வளவு அடிப்படையானதோ, அவ்வளவு முதன்மையாக கட்டுமானங்களில் தவிர்க்கப்படவேண்டியவை ஆற்றுமணல், உற்பத்தியாகும் சூழலை கெடுக்கும் சிமெண்ட், அளவு மீறும் கணிமக்கொள்ளையான இரும்புக்கம்பிகள். இவை இல்லாமல் எழுப்பப்படுவதே தூய இயற்கைக் கட்டுமானங்கள்.

Play Video

நச்சுப்பொருட்கள் கலப்படமின்றி, எளிதில் கட்டுமானம் எழுப்பும் இடத்திலேயே அதன் சுற்றத்திலேயோ கிடைக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து தூய இயற்கை கட்டுமானங்களை எழுப்புவதே தணலின் நோக்கம்.செடிகளும், கொடிகளும், மூலிகைகளும், புற்பூண்டுகளும், மரங்களும், இவைதரும் பூக்களும், காய்கனிகளும், விதைகளும், பட்டைகளும், கால்நடைகளிடமிருந்து கிட்டும் பொருட்களும் இயற்கைக் கட்டுமானங்களில் பரிசோதித்து பயன்படுத்துவதே தணலின் கொள்கை. இயற்கைக் கட்டுமானத்திற்கு உதவும் தாவரங்களை, மரங்களை உழவர்களே நடவு செய்து, கட்டுமானங்களிலும் அவர்கள் தற்சார்பு அடைய வேண்டும் என்பது தணலின் ஆழ்ந்த விருப்பம்.

இயற்கை கட்டுமான விழிப்புணர்வுக் குழுவான தணல், சாமானிய மக்களை சென்றடையவே பல முயற்சிகளை எடுத்துவருகின்றது. இவ்வகுப்பு சிற்றூர் உழவர்களை சென்றடையும் அடுத்த படியாகும். இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளும் உழவர்களுக்கு, இயற்கைவழிக் கட்டுமானங்கள் இன்றி வாழ்வில் முழுமையான தற்சார்பை அடைய இயலாது. தற்சார்புப்பாதையில் முன்னோக்கி செல்லும் உழவர்களுக்கு தேவையான கட்டிடங்களை அவர்களே கட்டி எழுப்புவதற்கான விழிப்புணர்வு போதுமான அளவு இங்கே இல்லை. அவர்களுக்கு நமது மரபையும், இயற்கைக் கட்டுமான அறிவையும் கொண்டு சேர்ப்பதே தணலின் முதற்பணி. இயற்கைக் கட்டுமான முறைகள் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கும் இயற்கைவழி வேளாண்மை செய்யும் சிற்றூர் உழவர்களுக்கான வகுப்பு இது. தமிழகம் எங்கும் உள்ள சிற்றூர் உழவர்களுக்காக, கார்த்திகை 5ஆம் நாள்(நவம்பர் 21), முதல் அறிமுக வகுப்பு நடைபெற்றது. அதில் குறிப்பிட்ட சில உழவர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களின் வழியே மற்ற சாமானிய உழவர்களை தேர்வு செய்து அடுத்த வகுப்பில் இணைப்போம்.

வகுப்பு நடைபெறும் இடம் – தணல் வளாகம், திருவண்ணாமலை, தமிழ்நாடு

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகள் மூலம் 1500 க்கும் மேற்பட்டோர் கற்றுச் சென்றுள்ளனர்.

இணைய
வழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

யாக்கை-சுவர்கள்-மண் வீடுகட்ட கையேடு

செய்தி & டி‌வி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top