3 நாள் செயல்-வழியில்

தாப்பி-அரைஷ் மீட்டுருவாக்க பயிற்சி

கண்ணோட்டம்

ராஜஸ்தானிய பூச்சு முறைகளான தாப்பி, லோஹி மற்றும் அரைஷ் பூச்சுகள் மற்றும் தளம் பற்றிய வகுப்பு இரண்டாவது முறையாக திருவண்ணாமலையில் நடைபெற இருக்கிறது. இதைச் சொல்லித்தருவதற்கு இராஜஸ்தான் கொத்தனார் வரவழைக்கப்படுவார்‌. இவை பொறுமையாகவும் நேர்த்தியுடன் செய்யக்கூடிய இயற்கைப் பூச்சுகள். (மொரோக்கோ டேடலாக்ட் பூச்சுவைப்போல இதற்கும் நீர்த்தடுப்புத்திறன் உள்ளது). இந்த வகுப்பில் மாணவர்கள், தொழிலர்கள், கலைஞர்கள் மற்றும் வேலையாட்கள் யாவரும் விரும்பம் கொண்ட எவரும் கலந்து கொள்ளலாம். தணல் வளாகத்தில் ஆசான்கள் செய்த பல சோதனைகளுக்குப் பின் இத்தகைய செயல்முறைகளை பயிற்சி வகுப்பின் வழியாகக் கற்றுத்தருகிறோம்‌.

சுவர் அல்லது தளத்தில் பூச்சுகள் செய்த பின் அதைத் தட்டிக்கொடுக்கப் பயன்படுத்தும் கருவிதான் தாப்பி. சுவரில் மண்ணும் சுண்ணாம்பும் சேர்த்துப்பூசியபிறகு அல்லது தளத்தில் கற்களும் சுண்ணாம்பும் சேர்த்து அடி அடுக்குப் போட்டபின் , சுடுமண் சுண்ணாம்புக் கலவையால் பூசப்படும்‌. பின்னர் தாப்பிக் கட்டையால் அடித்து அடித்து சுண்ணாம்புக் கடினமடையச் செய்வார்கள். இது, பூச்சு அடிஅடுக்குடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்த உதவும்‌, சுண்ணாம்புக் கடினமடையும் போது பூச்சுவில் விரிசல் ஏற்படுவதைத்தடுக்கும்‌. சுண்ணாம்புக் கடினமாகும் வரைத் தாப்பி கவனமாகக் கொடுக்கப்படும். அடித்த தடங்களை அப்படியே விட்டுவிடலாம்  அல்லது மேலும் பல வகையான வண்ணப் பூச்சுகளைப் பூசலாம்‌.

Play Video


லோஹி என்பது நுண்ணிய சல்லடையில் சலித்த சுடுமண் மற்றும் சுண்ணாம்பை அரைத்து தாப்பிப் பூச்சுமேல் பூசும் முறை‌. இதனுடன் நிறுத்திக்கொள்ளலாம் அல்லது மேலும் அரைஷ் பூச்சு செய்யலாம்‌‌.

அரைஷ் என்பது மார்பில் பொடி மற்றும் நுண்ணிய வடிகட்டியில் வடித்த சுண்ணாம்பு கலந்து தேவையான வண்ணம் சேர்த்துப் பூசுவதாகும். தாப்பி, லோஹி மற்றும் அரைஷ் ஆகிய பூச்சுகள் நீர்த்தடுப்புதிறன் கொண்டவை‌. லோஹி பூச்சுவின் மேலே பல தடவை சுண்ணாம்பு அடித்து அதன் நீர்த்தடுப்புத்திறனைக் கூட்டலாம்‌.

இந்த பயிற்சி வகுப்பின் வழியாக பூச்சுகள் மற்றும் தளமமைப்பதில் உள்ள பாரம்பரிய முறைகளை மீட்டெடுக்கிறோம்‌. அவை ஏற்கனவே தண்ணீர்த் தொட்டி கட்டுவதில் வெற்றிகரமாக ஆய்வு செய்த பூச்சுகள். சமகாலத்தில் உள்ள விலைஅதிகமான மணலுக்குப் பதில் சுடுமண் பயன்படுத்தலாம் என்பது நாங்கள் முன்வைக்கும் தீர்வு‌. நாமே வீட்டில் சுடுமண் அல்லது சுர்கி தயாரிப்பதும் பூச்சுவில் கலக்கும் இடுபொருட்கள் தயாரிப்பும் இந்தப் பயிற்சி வகுப்பில் விளக்கப்படும்.

வகுப்பு விவரங்கள்:

குறிப்பு: ஒவ்வொரு நாளும் நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. காலையில் இரு அமர்வுகளும் மாலை இரு அமர்வுகளும் நடக்கும். கால அட்டவணைப் பருவநிலையைப் பொறுத்து மாறுபடும்.

முதல் நாள்

1அ: தாப்பி மற்றும் அரைஷ் பூச்சு அறிமுகம்

1ஆ: சுவர்ப் பூச்சு: அடியடுக்கு அடுக்குப் பூச்சு- சாந்து தயாரிப்பு மற்றும் பூசுதல்

2அ: முதல் அடுக்குப் பூச்சு: சுடுமண் & சுண்ணாம்பு ஆயத்தம் செய்தல்

2ஆ: முதல் அடுக்குப் பூசுதல் மற்றும் தாப்பி கொடுத்தல்

மதிய உணவு

3அ. தளம்: அடி அடுக்கு(மாதிரி காண்பித்தல்)

4அ:வீட்டிலே சுடுமண் தயாரிப்பு &லோஹி

4ஆ: விரிசல்களைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் தாப்பி கொடுத்தல்

இரண்டாம் நாள்

01& 02 : சுடுமண் மற்றும் சுண்ணாம்பால் ஆன முதல் அடுக்கின் மீதுத் தாப்பி கொடுத்தல்

மதிய உணவு

3. லோஹி பூசுதல்

4. அரைஷ்- அறிமுகம் & தயார்செய்தல்

மூன்றாம் நாள்

01& 02 . அரைஷ் பூசுதல்

மதிய உணவு

03. அரைஷில் இயற்கை வண்ணங்கள்

04. வண்ணம் சேர்த்து சுண்ணாம்பு அடித்தல், தளம் இறுதி அடுக்கு & தள ஓடு ஒட்டுதல்

பயிற்சியாளர்கள்:

அப்துல் ரசாக் முவால்: அவரது நேர்காணல் பார்க்க.

தாவூத் இப்ராஹிம்: அவரது நேர்காணல் பார்க்க

லியாகத் முவால் 

பயிற்சி நடைபெறும் இடம்

திருவண்ணாமலை

பயணத்தடம்

அருகில் உள்ள ரயில் நிலையம்: திருவண்ணாமலை, காட்பாடி மற்றும் விழுப்புரம்.

பயிற்சிக்கட்டணம்

தேதி அறிவிக்கப்படும் போது பயிற்சிக்கட்டணம் தெரிவிக்கப்படும்.

இந்த வகுப்பில் கற்றுத்தரப்படும் கருத்துக்கள் கலைஞர்களின் பல ஆண்டுகள் காலம்  உழைப்பில் விளைந்த ஒன்று. பயிற்சிக்கட்டணத்தின் பெரும்பாலான பங்கு அந்தக் கலைஞர்களின் குடும்பத்திற்கேச் சென்றடைகிறது. அத்தகைய கலைஞர்களின் திறமை மதிக்கப்பட்டால் தான் அடுத்தடுத்த கலைஞர்களும் பராம்பரிய முறைக்குத்திரும்புவர்‌.  இந்தப்பயிற்சி வகுப்பு தணலின் அடுத்தடுத்த மீட்டுருவாக்கத் தொடருக்கும் பங்களிப்பு செய்கிறது.

முன்பதிவு:

பயிற்சியில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது. எனவே கீழ்க்கண்ட இணைப்பில் சென்று முன்பதிவு செய்யவும்.

பலகட்ட அனுபவம் பெற்ற பங்கேற்பாளர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மிக முக்கியமாக விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மிகுந்த விருப்பத்துடனும் நற்குணத்துடன் தாங்களே வேலை செய்து அதிலிருந்து கற்க வேண்டும் என்ற தூண்டுதலையும் பெற்றிருக்க வேண்டும். (உங்களுக்கு உதவித்தொகை வழங்குபவரை நீங்களே கண்டறிந்து எங்களுக்குப் பங்களிப்பு செய்யலாம்).

தங்குமிடம்

தணலில் தங்குமிட வசதி இல்லை. எனவே பங்கேற்பாளர்கள் தங்களுக்கான தங்குமிடத்தை அவர்களே தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கான செலவு பயிற்சிக்கட்டணத்தில் உள்ளடங்காது. தங்குமிடத்திலிருந்து தணல் வளாகத்திற்கு(ரமணா ஆஷ்ராமத்திலிருந்து 6கிமீ தொலைவில்) தினமும் வந்து செல்வது அவரவர் பொறுப்பு.

தங்குமிட விடுதிகள் தொடர்பாக தகவல்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கப்படும்.

பயிற்சிக்குத் தயாராதல் :

பயிற்சியில் பங்கேற்கத் தேவையான பொருட்கள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் கீழ்க்கண்ட இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். பயிற்சி வகுப்புக்கு ஆயத்தமாதல்

பதிவு ரத்து செய்தல்/பணத்தை திரும்பப் பெறும் வசதி:

தணல் மட் ஹோம் அறக்கட்டளையின் கொள்கைப்படி முன்பதிவை திரும்பப் பெற விரும்பினால், பயிற்சி வகுப்பு நடைபெறுவதற்கு 30 நாட்களுக்கு முன் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்(குறுகிய கால இடைவெளியில் காலியிடங்களை நிரப்ப வேறு நபர்களைத் தேடுவது கடினம்) அவ்வாறு முன்பதிவை ரத்து செய்தால் முன்பதிவுக் கட்டணத்தில் 75 விழுக்காடு பணம் திரும்பக் கொடுக்கப்படும்.

வகுப்பு நடைபெற, 30நாட்களுக்கு குறைவாகக் கால அவகாசம் இருக்கும் பட்சத்தில் பதிவு ரத்து செய்தால் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது.

நீங்கள் பதிவு செய்த பயிற்சி வகுப்பில் உங்களால் பங்கேற்ப இயலவில்லை என்றால், மற்ற பயிற்சி வகுப்புக்குப் பரிமாற்றம் செய்யலாம். உங்களுடைய பணம் நீங்கள் பங்கேற்க இருக்கும் மற்ற பயிற்சி வகுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்தப்பரிமாற்றம் வகுப்புநடைபெறுவதற்கு 30நாட்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும்.

வகுப்பு நடைபெற 30நாட்களுக்கும் குறைவாகக் கால அவகாசம் இருந்தால், வகுப்புப் பரிமாற்றம் செய்ய இயலாது.

வகுப்பு நடைபெற 30நாட்களுக்கும் குறைவாகக் கால அவகாசம் இருக்கும் பட்சத்தில், உங்களால் பயிற்சியில் பங்கேற்க இயலவில்லை எனில், உங்களுக்குப் பதில் வேறு நபரைப் பங்கேற்கச் செய்யலாம். உங்களின் பணம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் அளித்த முன்பதிவு பணமாக எடுத்துக்கொள்ளப்படும்.

அனைத்து அபராத பணமும் தணலின் வருங்கால வெளியீடுகளுக்கும், தணல் இயற்கைக் கட்டுமானப் பள்ளியின் செயற்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படும்.

முக்கியக் குறிப்புகள்:

 • குடும்பத்துடன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க பரிந்துரைக்கிறோம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டணமின்றி பெற்றோருடன் பங்கேற்கலாம்.10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50 விழுக்காடு பயிற்சிக் கட்டணம்  செலுத்த வேண்டி இருக்கும்.
 • பயிற்சியில் பங்கேற்காதவர்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இங்கே தவிர்க்கப்படுகிறது. அதாவது பயிற்சி நடைபெறும் நேரத்தில் உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.
 • அருகில் கள ஆய்வுக்குச் செல்லும்போது மற்றவர்களுடைய தனிமை விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
 • செய்முறைப் பயிற்சி வகுப்பு என்பதால் தங்களை உடலுழைப்பில் ஈடுபடுத்திக் கொள்ள தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
 • மிருதுவான பருத்தி ஆடைகள் (பழையன) வெப்பத்தை தாங்கும் வகையில் அணிந்து வரலாம். எப்படியும் உங்களது ஆடையில் கறை  படியத்தான் போகிறது.
 • வெயிலின் தாக்கம் சற்று அதிகம் என்பதால் வெப்பத் தடுப்பு களிம்புகள், தலைப்பாகை அல்லது தொப்பி கொண்டு வருவது சிறந்தது.
 • உங்களை எப்பொழுதும் ஆற்றல் நிறைந்த நபராக வைத்துக் கொள்ள தேவையான பானங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு வரலாம்.
 • எளிமையாக அணிந்து கழட்டக்கூடியக் காலணிகளைக் கொண்டு வர வேண்டும். தணல் வளாகத்தில் மண் உடற்பயிற்சி கூடத்தில் வெறும் கால்களை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.
 • நல்ல கையுறைகள் கொண்டுவர பரிந்துரைக்கிறோம்.
 • அவசரகால மருந்து பொருட்களும் உடன் வைத்து இருந்தால் நல்லது.
 • மிக முக்கியமாகக் கைபேசியின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. விரிவுரை வகுப்பின் போதும் செய்முறைப் பயிற்சி வகுப்பின் போதும் காணொலிப் பதிவு செய்வதை தடை செய்கிறோம்.
 • இயற்கை கட்டுமானம் சார்ந்த பெயர்கள் மற்றும் சொல்லாடல்களை மறக்க நேரிட்டால் குறிப்பு எடுப்பது சிறந்தது.  விரிவுரை வகுப்பின்போது குறிப்புகளைப் பதிவு செய்யக் குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருள் கொண்டு வரலாம்.
 • களநிலவரம், களத்தில் நிலவும் பருவ நிலை ஆகியவற்றைப் பொறுத்து வகுப்பின் போக்கில் மாற்றம் நேரிடலாம்.
 • மேலும் சந்தேகங்களுக்கு thannalroots[@]gmail.com

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50க்கும் மேற்பட்ட பயிற்சிப் பட்டறைகள் மூலம் 1500 க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

இணைய
வழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

யாக்கை-சுவர்கள்-மண் வீடுகட்ட கையேடு

செய்தி & டி‌வி

This post is also available in: English

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top