Meeting

ஒரு பயிற்சி வகுப்புக்கு ஆயத்தமாதல்

வணக்கம்,

இப்பொழுது நீங்கள் பயிற்சி வகுப்பிற்குப் பதிவு செய்துள்ளீர்கள். ஆர்வத்துடன் வேலை செய்ய ஆரம்பிக்கும் முன் சில வழிகாட்டுதலைத் தெரிந்துக் கொள்ளவும்.

இது பொதுவாகச் செய்முறைப் பயிற்சி அதிகம் கொண்டுள்ளதால் உடல் உழைப்பு செலுத்த தயார் நிலையில் இருக்கவும். இங்கே நடைபெறும் அனைத்து வகுப்பும் குறிப்பிட்ட தொழில்நுட்பத்திற்குக் குறிப்பிட்ட நேரம் என்ற வகையில் கால அட்டவணையில் நடைபெறும். அதனால் அதிகம் பேசுவதைத் தவிர்த்து உங்களுடைய நேரத்தை அர்த்தமுள்ளதாக வளாகத்தில் பயன்படுத்துங்கள். அதிகமான கொள்கைவகுப்புகளை விடச் செய்முறைப்பயிற்சியின் மூலம் அனுபவம் பெறுதலை விரும்புகிறோம். வெறுமனே வகுப்புகளைக் கவனிப்பது அல்லது கொத்தனார் மாதிரி செய்து காட்டும் போது காணொளிப்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்.

ஒருவேளை வயதில் மூத்தோரோ அல்லது ஓய்வு தேவைப்படுவோரோ ஓய்வெடுக்கப் போதுமான இடவசதி வளாகத்தில் உள்ளது.

மிருதுவான பருத்தி ஆடைகள் ( பழையன) வெப்பத்தைத் தாங்கும் வகையில் அணிந்து வரலாம். எப்படியும் உங்களது ஆடையில் கறை படியத்தான் போகிறது. மழைக்காலத்தில் நீரத்தடுப்புஆடைகள் கொண்டு வரலாம். ஏனெனில் திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டி இருக்கும்.

வெயிலின் தாக்கம் சற்று அதிகம் என்பதால் வெப்பத் தடுப்புக் களிம்புகள், தலைப்பாகை அல்லது தொப்பிக் கொண்டு வருவது சிறந்தது.

உங்களை எப்பொழுதும் ஆற்றல் நிறைந்த நபராக வைத்துக் கொள்ளத் தேவையான பானங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு வரலாம்.

எளிமையாக அணிந்துக் கழட்டக் கூடிய காலணிகளைக் கொண்டு வர வேண்டும். தணல் வளாகத்தில் மண் உடற்பயிற்சி கூடத்தில் வெறும் கால்களை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.

களப்பயிற்சியில் ஈடுபடும் போது உள்ளங்கையில் தேய்மானம் ஏற்படலாம்.நல்லக் கையுறைகள் கொண்டுவரப் பரிந்துரைக்கிறோம்.

அவசரகால மருந்துப் பொருட்களும் உடன் வைத்து இருந்தால் நல்லது.

மிக முக்கியமாகக் கைபேசியின் பயன்பாடுத் தடைசெய்யப்பட்டுள்ளது. விரிவுரை வகுப்பின் போதும் செய்முறைப் பயிற்சி வகுப்பின் போதும் காணொளிப் பதிவு செய்வதைத் தடை செய்கிறோம். பின்னர்த் தவறாகப் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும். நீங்களே செய்து பார்க்கும்போதும் நகைப்புத் தன்மையுடன் வேலை செய்யும் போதும் காணொளிப் பதிவு செய்யலாம்.

இயற்கைக் கட்டுமானம் சார்ந்த பெயர்கள் மற்றும் சொல்லாடல்களை மறக்க நேரிட்டால் குறிப்பு எடுப்பது சிறந்தது. விரிவுரை வகுப்பின் போது குறிப்புகளைப் பதிவு செய்யக் குறிப்பேடுகள் மற்றும் எழுதுப் பொருள் கொண்டு வரலாம்.

தணலின் காணொளிப் பதிவுக்காக ஆவணப்படுத்தும் போது பல ஒளிப்பதிவுகள் மற்றும் நிழற்படங்கள் நாங்கள் எடுக்கலாம். நாங்கள் வெளியிடும் படங்கள் வளையொலி மற்றும் முகநூலில் பகிரப்படும். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும்.

எங்களது வளாகத்தில் ஒரே ஒரு கழிப்பறை மட்டும் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்க நேரிடும். மேலும் நினைவுபடுத்த விரும்புவது, கழிப்பறை உபயோகப்படுத்தும்முன் சகதி நிறைந்த கை கால்களைக் கழுவிய பிறகு கழிப்பறையில் நுழையுமாறு தெரிவிக்கிறோம்.

பயிற்சி நடக்கும் நாட்களில் அருகில் உள்ள வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகள் மதிய வேளைக்கு வழங்கப்படும். அவ்வுணவு இந்திய உணவுப் பொருட்கள் மற்றும் அரிசிக் கொண்டு செய்யப்பட்டதாக இருக்கும். பல குழம்புகள்,காரம் சார்ந்த உணவு, காரம் சாராத உணர்வு ஆகியன இடம் பெறும்.பலவகை மக்களின் தேர்வு மாறுபடும் என்பதால் உங்களுக்கு விருப்பமான உணவு மற்றும் அதன் வகைகள் பற்றி எங்களிடம் தெரியப்படுத்துங்கள்.

எங்களது வளாகத்திற்கு அருகாமையில் உள்ள விடுதிகள் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்தால் சிரமம் நேரிடுவதைத் தவிர்க்கலாம்.

காலா சேத்ரா விடுதி-9965635036, ஆணாய்ப் பிறந்தான், பெரும்பாக்கம் சாலை.

ரமணா டவர்ஸ்-04175 235 437, செங்கம் சாலை

சேஷாத்ரி ஆஸ்ரமம்

ரமணா ஆஸ்ரமம்

ஹோட்டல் தமிழ்நாடு-04175 238 444, அத்தியாந்தல், செங்கம் சாலை.

மேலும் பல (மலிவான, நடுத்தர, உயர்ந்த) தங்குமிடம் மற்றும் அதன் தொடர்புகள் பற்றித் தெரிந்து கொள்ளக் கீழ்க்கண்ட இணைப்பில் தேடவும்.

https://goo.gl/maps/KDNVwsCm21n

விரைவில் சந்திப்போம். மண்ணுடன் விளையாடுவோம்!

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50க்கும் மேலான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும்
1500க்கும் மேலான மக்கள் செயல் வழியாகக் கல்வி கற்றனர்.

இணைய
வழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

செய்திகள் & டி‌வி

This post is also available in: English

Scroll to Top