செயல்-வழியில்

மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் பயிற்சி

மாணவர்களுக்கு இயற்கை கட்டுமான விழிப்புணர்வு பயிற்சி

உங்களுக்கு பொருத்தமான தேதிகளைக் குறிப்பிட்டு விண்ணப்பித்துக் காத்திருக்கவும்

குறிப்பு: கவின் கலைக்கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் பொறியியல் துறை சார்ந்த கல்லூரி/நிறுவனம்/ பல்கலைக்கழகத்தின் குழுவாக உள்ள மாணவர்களுக்கே உரித்தான பயிற்சிவகுப்பு இது.

நோக்கம்:

உள்ளூரில் கிடைக்கும் பொருட்களான மண், மூங்கில், சுண்ணாம்பு, கற்கள், தாவர மற்றும் விலங்கு மூலப்பொருட்கள் பயன்படுத்தி வீடு கட்டுவதைக் கற்றுக்கொள்ளும் வகையில் இவ்வகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது‌. அது வெறுமனே தொழில்நுட்பங்களாக இல்லாமல் வாழ்வியலின் ஒரு அங்கமாக மாணவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். சுற்றுச்சூழலை சிதைக்காமல், குறைந்த செலவில், அதிக ஆயுள் கொண்ட கட்டுமானம் எழுப்புமுடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்கிறது‌. எனவே நாங்கள், தொழிற்சாலைப் பொருட்களான சிமெண்ட், கம்பி, எம் சேண்ட் மற்றும் பெயிண்ட் ஆகியன இல்லாமல் வீடு கட்டமுடியும் என்பதை செய்து காண்பித்திருக்கிறோம். கட்டிடக்கலை என்பது கான்கிரீட் என்ற வார்த்தைக்குள் அடங்காமல் நம் மனம் மற்றும் உடலுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பது நல்லது. இந்தப் பயிற்சி வகுப்புகள் எங்களது அனுபவங்களைப் பகிரும் தளமாக இருக்கின்றன.

பயிற்சி பற்றி:

பயிற்சியில் பங்கேற்கும் நபர்கள் தங்களைக் களப்பணியில் ஈடுபடுத்திப் பொருட்களைத் தொட்டுணர்ந்து கற்றுக்கொள்ளலாம். மேலும் தணல் வளாகத்தில் செய்த பல சோதனைகளையும் பார்த்துப் புரிந்து கொள்ள இயலும். விளைவாகத் தங்களுக்குள்ள பல கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இந்தப் பயிற்சி வகுப்பு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கொள்கை விளக்கம், செயல்வழி, மாதிரி காண்பித்தல் மற்றும் கள ஆய்வு.  பலகட்ட அனுபவம் பெற்ற பங்கேற்பாளர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மிக முக்கியமாக விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மிகுந்த விருப்பத்துடனும் நற்குணத்துடன் தாங்களே வேலை செய்து அதிலிருந்து கற்க வேண்டும் என்ற தூண்டுதலையும் பெற்றிருக்க வேண்டும்.

தணல் வளாகத்தில் கிடைக்கப்போகும் அனுபவம்:

 • பாடும் அந்தணரின் வீடு, மண்சுவர் முறை
 • பரண் கொண்ட மண் மூட்டை வீடு
 • பயிலரங்கம்- பல சுவர் வகைகள்- மண்சுவர்,
 • பச்சைக் கல், வரிச்சி சுவர்
 • கிராமத்து மண் சமையலறை- மண்சுவர்,
 • பச்சைக்கல், வரிச்சி சுவர்
 • கூரை வகைகள்- ஓலை, பலகை, சுடுமண் ஓடுகள்,
 • பசுமைக்கூரை, கற்காரை கூரை
 • இயற்கை வாழ்வியல்
 • மண் சுண்ணாம்பு கொண்டு கட்டிய தண்ணீர்த்தொட்டி

பயிற்சியில் காணவிருக்கும் இயற்கை கட்டுமான சிறப்புக்கூறுகள்

 • கற்களால் அடித்தளம்
 • மண் சுவர்-மண் மற்றும் நார்ப்பொருள் பயன்படுத்தி ஒற்றைக்கூறு சுவர்
 • வரிச்சி சுவர்- தட்டியும் மண்பூச்சும் விரும்பிய வடிவில் சுவர் செய்யலாம்
 • பச்சைக்கல்-சூரிய ஒளியில் காய்ந்த கல்
 • சிஎஸ்எம்பி, மண்ணுடன் நீர் தெளித்து அமுக்கத்துள்ளாக்கப்பட்ட மண்கற்கள்
 • மூங்கிலைப் பயன்படுத்தி விட்டம் மற்றும் சாளர விட்டம்
 • தாவர மற்றும் விலங்கு இடுபொருள் பயன்படுத்திப் பூச்சுகள்
 • மண் சுவரின் மீது சிற்பவேலையும் சுவரோவியங்களும்.
 • சுண்ணாம்பு தயார் செய்தல் மற்றும் பயன்பாடு
 • நிலைப்படுத்துதலின் வகைகள்
 • தாவர மற்றும் விலங்கு மூலப்பொருட்களால் பாதுகாப்பு முறைமைகள்
 • இயற்கைப் பசைகள்

வகுப்பில் இடம்பெறும் அமர்வுகள்(Sessions):

 • விரிவுரை வகுப்பும் காணொளி வழி வகுப்பும்- கொள்கை விளக்கங்கள்
 • செயல்-வழி( பொருட்களையும் தொழிற்நுட்பங்களையும் ஐம்புலங்களால் புரிந்து கொள்ளுதல் )
 • முன்மாதிரிகள் காண்பித்தல்(கலைஞர் ஒருவர் மாதிரிமூலம் விளக்கம் தருவார்)
 • கள ஆய்வு- தணல் வளாகத்தில் உள்ள கட்டுமானங்கள் விளக்கப்படும். 
 • கேள்வி மற்றும் பதிலுக்கான அமர்வு

பயிற்சியில் காணவிருக்கும் முக்கியத் தலைப்புகள்:

 • இயற்கை கட்டுமானம் அறிமுகம்
 • இந்தியாவில் இயற்கை கட்டுமானம் வந்த பாதைகள்
 • கட்டுமானப் பொருட்கள்
 • இயற்கைப் பசை, மூலிகைகள், மாவுப் பொருள்
 • இந்தியாவிலும் உலகம் சுற்றியுள்ள இயற்கை கட்டிடக்கலைஞர்
 • பயனாளியே கட்டுதல் மற்றும் செலவு விவரங்கள் .
 • தணலின் தற்போதைய/முடிந்த கட்டுமானங்கள்
 • மரபு முறைகளின் மீட்டுருவாக்கம்
Play Video

பயிற்சியாளர்கள்:

Ar. பிஜு பாஸ்கர் & தணல் குழுவினர்

தேதி:

பயிற்சி வகுப்புக்கு முன்பதிவு செய்யக் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் உங்களுக்கு வசதியான தேதிகளைக்குறிப்பிட்டு விண்ணப்பிக்கமாறு அன்படன் வேண்டுகிறோம்.

வகுப்பு நடைபெறும் இடம்

Thannal campus, Pandithapattu village, Tiruvannamalai, Tamil Nadu – 606603.

பயணம்

அருகில் உள்ள ரயில் நிலையம்: திருவண்ணாமலை, காட்பாடி மற்றும் விழுப்புரம்..

பயிற்சிக்கட்டணம்:

குறைந்தபட்சம் 2 ஆசிரிய உறுப்பினர்களுடன் 50 மாணவர்களைக் கொண்ட ஒரு மாணவருக்கு இரண்டு நாட்களுக்கு தொழில்முறை கட்டணம் ரூ.1500 ஆகும்.

தங்குமிடம்:

தணல் வளாகத்தில் தங்குமிட வசதி இல்லை. தங்குமிட விடுதிகள் பற்றித் தகவல் தெரிவிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் நபர்களே விடுதி தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து கொள்ளவும். தங்கும் செலவு, காலை மற்றும் மாலை உணவுக்கான செலவுப்பயிற்சிக்கட்டணத்தில் உள்ளடங்காது. பயிற்சி நாட்களில் தினமும் தணல் வளாகத்திற்கு வந்து செல்வதற்கான(ரமணா ஆஷ்ரமத்திலிருந்து 6கி.மீ) வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

முக்கியக் குறிப்புகள்:

 1. செய்முறைப் பயிற்சி வகுப்பு என்பதால் தங்களை உடலுழைப்பில் ஈடுபடுத்திக் கொள்ளத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
 2. மிருதுவான பருத்தி ஆடைகள் (பழையன) வெப்பத்தைத் தாங்கும் வகையில் அணிந்து வரலாம். எப்படியும் உங்களது ஆடையில் கறைப் படியத்தான் போகிறது.
 3. வெயிலின் தாக்கம் சற்று அதிகம் என்பதால் வெப்பத் தடுப்புக் களிம்புகள், தலைப்பாகை அல்லது தொப்பிக் கொண்டு வருவது சிறந்தது.
 4. உங்களை எப்பொழுதும் ஆற்றல் நிறைந்த நபராக வைத்துக் கொள்ளத் தேவையான பானங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு வரலாம்.
 5. எளிமையாக அணிந்துக் கழட்டக்கூடியக் காலணிகளைக் கொண்டு வர வேண்டும். தணல் வளாகத்தில் மண் உடற்பயிற்சிக் கூடத்தில் வெறும் கால்களை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.
 6. நல்ல கையுறைகள் கொண்டுவரப் பரிந்துரைக்கிறோம்.
 7. அவசரகால மருந்துப் பொருட்களும் உடன் வைத்து இருந்தால் நல்லது.
 8. மிக முக்கியமாகக் கைபேசியின் பயன்பாடுத் தடைசெய்யப்பட்டுள்ளது. விரிவுரை வகுப்பின் போதும் செய்முறைப் பயிற்சி வகுப்பின் போதும் காணொலிப் பதிவு செய்வதைத் தடை செய்கிறோம்.
 9. இயற்கைக் கட்டுமானம் சார்ந்த பெயர்கள் மற்றும் சொல்லாடல்களை மறக்க நேரிட்டால் குறிப்பு எடுப்பது சிறந்தது. விரிவுரை வகுப்பின்போது குறிப்புகளைப் பதிவு செய்யக் குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருள் கொண்டு வரலாம்.
 10. களநிலவரம், களத்தில் நிலவும் பருவ நிலை ஆகியவற்றைப் பொறுத்து வகுப்பின் போக்கில் மாற்றம் நேரிடலாம்.
 11. அருகில் கள ஆய்வுக்குச் செல்லும்போது மற்றவர்களுடைய தனிமை விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
 12. பயிற்சியில் பங்கேற்காதவர்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இங்கே தவிர்க்கப்படுகிறது. அதாவது பயிற்சி நடைபெறும் நேரத்தில் உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.

மேலும் சந்தேகங்களுக்கு thannalroots@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புக.

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50க்கும் மேலான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும் 1500க்கும் மேலான மக்கள் செயல் வழியாகக் கல்வி கற்றனர்.

இணைய
வழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

யாக்கை-சுவர்கள்-மண் வீடுகட்ட கையேடு

செய்தி & டி‌வி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top