தொடர்பு கொள்ள

தொடர்பு கொள்ள

தொடர்பு கொள்ள

எங்களுடன் தொடர்பில் இருக்க கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கி எங்களது வாட்சாப் குழு அல்லது டெலகிராம் குழுவில் இணைந்து வாரந்தோறும் செய்திகளைப் பெறுங்கள்.
வாட்சப்குழு
டெலகிராம் குழு
அல்லது கீழே உள்ள புகைப்படத்தைச் சொடுக்கியும் குழுவில் இணையலாம். டெலகிராம் இணைப்பு கைபேசியில் மட்டுமே வேலைசெய்யும்.

தணல் நெச்சுரல் ஹோம்ஸ் ஐ வாட்சப்பில் அணுக

தணல் வளாகத்தைக் காணொளி வழியாகப் பார்வையிடுங்கள். தணல் வளாகம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.

தணல் நெச்சுரல் ஹோம்ஸ் தொடர்பு காணொளி
Play Video about Contact us Thannal Natural home Video FI

வளாகப் பார்வை

அடுத்த பார்வை நாள்: கொரோனா நெருக்கடிச்சூழலால் தற்போது வளாகத்தைப் பார்வையிட முடியாது. சூழ்நிலை சரியான பின் பார்வை நாள் குழுவில் தெரியப்படுத்தப்படும்‌.

வளாகப் பார்வை பற்றிய விவரங்கள்

குறிப்பிட்ட தேதியில் மட்டுமே பார்வையாளர்கள் தணல் வளாகத்தில் அனுமதிக்கப்படுவர். தணல் நிறுவனர்களின் தனிப்பட்ட வீடும் வளாகத்தில் இருப்பதால் அதை மதிக்கும் வகையில் அவர்களின் இருப்பிடம் கூகுள் வரைபடத்தில் பதிவேற்றப்படவில்லை. எனவே அவர்களின் தனியுரிமையைக் கருத்தில்கொண்டு முன்அனுமதி பெறாமல் வளாகப் பார்வைக்கு வர வேண்டாம். எங்களது வளாகம் திருவண்ணாமலைக்கு அருகில் ஒரு கிராமத்தில் அமைந்துள்ளது.

தணல் வளாகத்தில் உள்ள கட்டுமானங்களைப் பற்றி எடுத்துரைப்பது மாலை 3.00 மணி அளவில் தொடங்கும்.

ஒவ்வொரு மாதத்தின் பார்வைநாளும் இணையத்தில் புதுபிக்கப்படும்‌.

தணல் வளாகத்தைப் பார்வையிட விரும்புவோர் தணல் வாட்சாப் எண்ணில் செய்தி அனுப்பி முன்அனுமதி பெறவும்‌. செய்தி அனுப்பி குறைந்தது 7 நாட்கள் வரைப் பதிலுக்குக் காத்திருக்கவும். எங்கள் வளாகத்திற்கு வர வழிக்காட்டுவோம். தணல் வளாகத்தைப் பார்வையிட விரும்புவோர் தணல் வாட்சாப் எண்ணில் செய்தி அனுப்பி முன்அனுமதி பெறவும்‌. மற்ற நாட்களில் வந்து பொழுதுபோக்கும் இடம் அல்ல இது‌. எங்கள் வளாகத்திற்கு வரும் முன் தணல் செய்த வேலைகளைப் பற்றிப் படிக்கவும்.

கல்லூரி மாணவர்கள் தங்களுடைய புராஜெக்ட், ஆய்வு தொடர்பாகத் தணலைப் பார்வையிட விரும்பினால் மேற்கூறிய நாட்களில் வரவும். எங்கள் வலைப்பதிவு(Blog) பக்கத்தில் உள்ள கட்டுரைகளையும் யூடியூப் சேனலில் உள்ள காணொளிகளையும் மாணவர்கள் படிக்கக் கேட்டுக்கொள்கிறறோம். நீங்கள்அவற்றைப் படித்துவிட்டு எங்களிடம் தொடர்பு கொள்ளும்பொது உங்களுக்கு நல்ல முறையில் வழிகாட்ட முடியும். உங்களை நீங்களே தயார்ப்படுத்தாமல் எங்களைத் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்‌‌.

தணலைத் தொடர்பு கொள்ளும் முன் கீழ்க்கண்ட கேள்வி பதில்களைப் படித்துவிட்டு சந்தேகங்களைக் கேட்கவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்
ஏதும் விடுபட்டிருந்தால் தயக்கம் இல்லாமல் சந்தேகங்களைக் கேட்கவும். பதில் அளிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தான்.

தணல் என்பதற்கு நிழல் என்பது பொருள். தணல் நேச்சுரல் ஹோம்ஸ் என்பது இயற்கைக் கட்டுமானப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கும் பள்ளி; கட்டுமான நிறுவனம் அல்ல. தணலைப் பற்றி பக்கத்தைப் படித்து மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்‌.

கொரோனா நெருக்கடிச் சூழலால் 2021 வருடத்தில் நடைபெற இருந்த பயிற்சிப்பட்டறைகளின் தேதிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இயல்புநிலைத் திரும்பிய பின் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படும்‌. அதனால் இணையவழிக் காணொளி வகுப்பு உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறோம். புதிய பயிற்சிப் பட்டறைகளின் தேதி உறுதி செய்யப்பட்டால் பயிற்சிப்பட்டறைப் பக்கத்தில் கால அட்டவணை புதுப்பிக்கப்பட்டு வாட்சாப் குழுவில் பகிரப்படும்.

பார்வையாளர்கள் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அனுமதிக்கப்படுவர்‌. கொரோனா நெருக்கடிச் சூழலால் அனைவரின் நலன் கருதி பார்வையிட அனுமதி இல்லை. வளாகப்பார்வை நாள் இணையத்தில் தொடர்பு எனும் பக்கத்தில் புதுப்பிக்கப்படும். வாட்சாப் குழுவிலும் தெரியப்படுத்தப் படும்.

வீடு திரும்புதல் எனும் இணையவழிக் காணொளி வகுப்பு உருவாக்கப்பணியில் ஈடுபடுவதால் டிசம்பர் 2021 வரை எந்தவொரு புதிய புராஜெக்ட்டும் எடுத்துச் செய்வதில்லை. அதிக எண்ணிக்கையில் புராஜெக்ட் செய்வதை விடக் காணொளிகள் மற்றும் புத்தகம் வழியாகப் பலரும் கற்றுக்கொள்ள ஒரு தளத்தை ஏற்படுத்துவதான் முக்கியம் எனக் கருதுகிறோம். மேலும் தணல் எவ்வாறு புராஜெக்ட் எடுத்துச் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வருங்கால கட்டுமான வேலைகள் எனும் பக்கத்தைப் படிக்கவும். இயற்கை வீடு கட்டுக எனும் திட்டத்தைப் பற்றி மேலும் வாசிக்க அதில் பொதிந்துள்ள இணைப்பில் செல்லவும்.

வேலைஆட்கள் மற்றும் பொருட்கள் ஆகிய இரண்டும் தான் செலவை நிர்ணயிக்கும் முதன்மைக்காரணிகள். உங்கள் களத்திலே கட்டும் பொருட்கள் கிடைத்தால் செலவு குறையும். மேலும் சில காரணிகள் கீழே

புதிய கதவு மற்றும் சன்னல் பயன்பாடா? & பழைய கதவுச் சன்னல் பயன்பாடா?

மூன்று கொத்தனார் வேலை செய்தலும் ஒரு கொத்தனார் உதவியுடன் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் இணைந்து செய்தலும்

இதுவரைக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்குச் சதுர அடிக்கு 700முதல் 1400ரூபாய் வரை செலவாகியிருக்கிறது.

செலவுபற்றிய விரிவான தகவல்கள் சேகரித்துக்கொண்டிருக்கிறோம்‌. எங்களது வெளியீடுகளில் அது இடம்பெறும்.

அனைத்து புதன்கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மட்டுமே அலைபேசி அழைப்புகளுக்கு எங்களால் பதில் அளிக்க இயலும். சிரமத்திற்கு மன்னிக்கவும், மற்ற நாட்களில் தயவுசெய்து எங்களுக்கு வாட்ஸ்அப்பில்- +91-9385620884. செய்தி அனுப்புங்கள். எங்களுக்கும் சில வரம்புகள் இருந்தாலும் எங்களது சிறிய குழு அனைவருக்கும் சிறந்த முறையில் உதவுவ முயற்சி செய்கிறது.

தணல் மற்றும் மற்றவர்களின் இயற்கைக் கட்டுமானம் தொடர்பான கட்டுரைகள், காணொளிகள், பயிற்சி வகுப்புகள் மற்றும் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து பெற வாட்சப் குழுவில் இணையலாம். குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை நிறைவடைந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.

குறிப்பிட்ட வேறு எதும் சந்தேகங்கள் இருந்தால், தணல் நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரியான thannalroots<@>gmail.com க்கு எழுதி அனுப்பவும். ஒரு வாரத்திற்குள் பதில் எதிர்பார்க்கலாம்.

You can study Natural building techniques through our Workshops, Articles, free Videos, Online Courses and Books.
Kindly read the respective pages to know about Apprenticeships & Internships and Volunteering.

தணலுடன் பணி செய்ய வேண்டும் என்றால் பணிப்பயிற்சி, உள்ளீட்டுப்பயிற்சி, தன்னார்வப் பணி, மொழிபெயர்ப்பு, காணொளிக்குக் குரல் பதிவு செய்தல் மற்றும் வீடியோ எடிட்டர் எனப் பலவகையில் பணி செய்யலாம். புதுப்பணியிடங்கள் உருவாகும்போது பணியிடங்கள் என்ற பக்கத்தில் தெரியப்படுத்துவோம்‌. அதனால் பணிப்பயிற்சி& உள்ளீட்டுப் பயிற்சி மற்றும் தன்னார்வப் பணிப் பற்றித் தெரிந்து கொள்ள அதற்கென உள்ள பக்கத்தை வாசிக்கவும்.

உண்மையில் சிமெண்ட் கட்டிடங்களைவிட ஆயுள் அதிகம்‌. இந்தியா முழுக்க உள்ள பல ஆண்டுகள் நிலைத்த பல வீடுகளில் 7 தேர்ந்தெடுந்த வீடுகளைப் பற்றி ஏற்கனவே காணொளி மற்றும் கட்டுரைகள்வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடுகளின் ஆயுட்காலம், பராமரிப்பு, இடத்துக்குத் தகுந்த முறைகள், செயல்திறன், அழகியல் மற்றும் பலவன குறித்து அதில் விளக்கப்பட்டுள்ளன

செய்தி அனுப்ப

If the form isn’t working, please get in touch with us:
If you’d like to visit our campus, please contact us in advance to schedule your visit.

  • Workshop, campus visit or General Inquiries: thannalroots<@>gmail.com
  • Self-paced Online Back-home Course Support: thannalbhm<@>gmail.com
  • Construction Inquiries: mudandlime.thannal<@>gmail.com

இணையவழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

செய்தி & டி‌வி

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

தணல் சமூக ஊடகம்

Scroll to Top