தன்னார்வப்பணி
தணலுடன் தன்னார்வப்பணி
தணல் சுய நோக்கம் அற்ற ஒரு விழிப்புணர்வு அமைப்பு. எங்களுடைய கட்டுமான வேலைகளில் மக்களை ஈடுபடச் செய்து, கற்பிக்கும் வேலையைத் தீவிர முயற்சிகள்மூலம் செய்கிறோம். அதற்குச் சில சேவைகளைச் செய்து பரிமாற்றம் ஆகக் கற்க விரும்புவனவற்றைக் கற்றுக்கொள்ளலாம். அது ‘கொடுக்கல்-வாங்கல்’ முறையின் செயலாக்கமாக இருக்கும். அது மதிப்புகள் மற்றும் அறிவு சார்ந்த தகவலின் பண்டமாற்று முறை ஆகும். தன்னார்வப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் இத்தகைய பொறுப்புணர்வை எதிர்பார்க்கிறோம்.
தணலின் கட்டுமான வேலைத் திட்டம் கிராமப்புறப்பகுதியில் நடக்கும் என்பதால், தன்னார்வலர்கள் பரபரப்பான மாநகர வாழ்வை விடுத்து எளிய வாழ்வை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நகரப்புற பகுதியுடன் ஒப்பிடுகையில் கிராமபுறப்பகுதியின் வசதி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அச்சூழலுக்குப் பொருந்தும் நபர்கள் மட்டும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். தூய காற்றும் பசுமையான இயற்கைச்சிறப்பு நிறைந்த நிலத்தையும் இழந்து கொண்டு வருகிறோம். அவர்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, ஆடை முறை போன்றவற்றை மதிப்பளித்து அத்துடன் ஒத்துப்போவதால் கற்பதற்கு ஊக்கமூட்டுவதாக இருக்கும்.
பயனாளியே தங்கள் வீட்டைக் கட்டுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதாவது பயனாளி தானே பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை எங்களிடமிருந்து கற்று நடைமுறைப் படுத்துகின்றனர். அதனால் நாங்கள் வடிவமைப்பில் அறிவுரை யாளராகவும் மற்றும் கட்டுமானத்தின் பல்வேறு நிலைகளில் உதவியாகவும் திரையின் பின்புறம் இருப்போம். தன்னார்வலர்கள் கட்டிட வேலைகளில் செயல் வழியாக ஈடுபட்டு அவற்றை ஒருங்கிணைக்கும் செயலையும் செய்வார்கள். அங்கே நடைபெறும் வேலைகளை ஆவணப்படுத்துதல்(நிழற்படம் எடுத்தல், எழுதுதல், காணொளிப்பதிவு) மற்றும் மூலப்பொருட்களின் அளவீடு சார்ந்த கணக்கு எடுத்தல்(excel sheets), பகுப்பாய்வு செய்தல் ஆகியனவற்றைச் செய்ய வேண்டும். அது பலருக்கும் உதவியாக இருக்கும். வேறு ஏதும் கூடுதல் திறன் இருந்தால் அதைக்கொண்டும் உதவலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தன்னார்வப்பணி குறித்து அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்
ஏதும் விடுபட்டிருந்தால் தயக்கம் இல்லாமல் சந்தேகங்களைக் கேட்கவும். பதில் அளிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தான்.
எப்படித் தன்னார்வலர்ப் பணிக்கு விண்ணப்பிப்பது?
தன்னார்வலர்கள் தணலின் பிரதிநிதியாகச் செயல்படுவதால் கையால் வேலை செய்த அனுபவம் மற்றும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மற்றும் தணல் கொள்கைகளைப் புரிந்து கொண்டவர்கள் ஆகிய விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்போம். விண்ணப்பம் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற நபர்களின் குழுவில் மட்டுமே பகிரப்படும். பயிற்சி வகுப்பில் பங்கேற்க இந்தப்பக்கம் செல்லவும்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்க இந்தப்பக்கம் செல்லவும்.
தன்னார்வலர்ப் பணிக்கான குறைந்த பட்ச கால அளவு என்ன?
குறைந்தது 20 நாட்கள் பணியாற்ற வேண்டும். அது எந்த ஒரு செயல்முறையையும் முழுமையாகக் கற்றுக் கொள்ள உதவும்.
உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான முன்னேற்பாடுகளுக்கு என்ன செய்வது?
வீடு கட்டுபவரின் அறிவுரைக்கேற்ப உணவு மற்றும் தங்குமிடம் நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். இவையாவும் பயனாளியின் வசதியைப் பொறுத்தது. நீங்கள் விரும்பினால், உங்களுடைய சொந்த சிறிய வீடான முகாம் அமைக்கும் கூடாரம் கொண்டுவரலாம். பெரும்பாலான நேரங்களில் வீடு கட்டுபவரே உறைவிடம் மற்றும் உணவு தருவார்கள்.
கட்டுமானத்தின் எந்தப் படிநிலைகளில் தன்னார்வப் பணி ஆற்றலாம்? அதற்கு ஏதும் முன்அனுபவம் தேவைப்படுமா?
கட்டுமான வேலைகளில் எந்தப் படிநிலையிலும் தன்னார்வ தொண்டு செய்யலாம். எனினும் உண்மையான பிரதிபலன் படிநிலையில் ஆரம்பத்தில் பங்கேற்றால் தான் கிடைக்கும். வெவ்வேறு நிலைகளான அடித்தளம் அமைத்தல், சுவர் எழுப்புதல்(மண், பச்சைக்கல், வரிச்சிச் சுவர்), கூரை அமைத்தல், பூச்சு மேற்கொள்ளுதல் மற்றும் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளில் பங்கேற்கலாம். மாணவராக இருந்து மட்டுமல்லாமல் ஆசிரியராகவும் இருந்து கற்றுக்கொள்ளலாம். கலந்துரையாடலை ஊக்கப்படுத்துவதன் மூலம் பரிந்துரைகளும் சிந்தனைகளும் பகிர்ந்தளிக்கப்படும். முன்னேறுக, கற்றுக்கொள்க
நான் ஒரு மாணவன். குறைந்த கால அளவில் தன்னார்வப் பணி செய்ய .விரும்புகிறேன். நான் விண்ணப்பிக்க முடியுமா?
கற்றுக் கொள்ளவும் உதவி செய்யவும் விரும்பினால் ஒரு வருட இடைவெளி எடுத்து முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எங்களது பயிற்சிவகுப்பில் கலந்து கொண்டு தன்னார்வப்பணி செய்யத் தொடங்குக.
அல்லது எங்களது இணைய வழிக்காணொளி வகுப்பு வழியாகவும் கற்கலாம்.
தன்னார்வப்பணி ஆற்றியதற்காகப் பங்கேற்புச்சான்றிதழ் வழங்கப்படுமா?
எங்களுடன் பணிப்பயிற்சி/உள்ளீட்டுபயிற்சி வழியாகப் பங்கேற்பு செய்தால் சான்றிதழ் வழங்கப்படும். 10 நாட்கள் பயிற்சி வகுப்பில் அல்லது இணைய வழிக் காணொளி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.