1 நாள் செயல்-வழியில்
பூச்சு மற்றும் தளம் பயிற்சி பட்டறை
குறிப்பு: நிபந்தனைகளை முழுவதும் படித்துவிட்டு கட்டணம் செலுத்தவும்.
மண் கட்டுமானத்தின் அடிப்படையைப் பற்றிய 2 நாள் பயிற்சியுடன் சேர்ந்தே ஒருநாள் பூச்சு வகுப்பு நடப்பதால் பங்கேற்பாளர்கள் விரும்பினால் இரண்டிலும் பங்கேற்கலாம். இணைப்பு- சாமானிய மக்களுக்கான இயற்கைக் கட்டுமான வகுப்பு
தேதி:
தேதி அறிவிக்கப்படவில்லை
கண்ணோட்டம்
பூச்சுகள் பற்றிய ஒருநாள் வகுப்பில் கலந்துகொள்வதால் சுவரில் எப்படிப் பலவகையான பூச்சுகள் செய்யலாம் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். கொத்தனாரும் இயற்கை கட்டிடக்கலைஞர்களும் இதைக்கற்றுத்தருவர்.
தணல் வளாகத்தில் செய்த பல்வேறு வண்ணப் பூச்சுகளை உற்றுநோக்கலாம். மண், சுண்ணாம்பு, சுடுமண், தாவர மற்றும் விலங்கு இடுபொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பூச்சுகள் எப்படிச்செய்வதெனக் கற்றுக்கொள்ளலாம்.
இந்த இயற்கைப்பூச்சுவில் எந்த நச்சுப்பொருளும் இல்லாததால் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் பூசலாம். அது வீட்டினுள் மாசற்ற வெளியை உருவாக்குகிறது.
இந்த வகுப்பில் ஐந்து விதமான பூச்சுகள் இடம்பெறும்.
இரண்டு மண் பூச்சுகள்
இரண்டு மண்+சுண்ணாம்பு பூச்சுகள்
ஒரு சுண்ணாம்புப் பூச்சு
இது ஒரு முழுக்க மாதிரி காண்பித்தல் வகுப்பு. இதில் பலவிதமான பூச்சுகளை எப்படிப் பூசுவது என்று கொத்தனார் செய்து காண்பிப்பார். விதவிதமான மண்ணைக் கொண்டு எப்படி வண்ணமயமான பூச்சுச் செய்வது, அப்பூச்சுகளை நிலைப்படுத்த தாவர மற்றும் இடுபொருட்கள் தயாரிப்பது பற்றியும் விளக்கமளிக்கப்படும்.
வகுப்பில் இடம்பெறும் அமர்வுகள்(Sessions):
- பலவகையான மண்ணைப் பரிசோதனைமூலம் அடையாளம் காணுதல்
- இயற்கைப் பூச்சுகள் ஓர் அறிமுகம்
- சுண்ணாம்புச் சுழற்சி
- தாவர மூலப்பொருட்கள்
- சுவர்ப்பரப்பைத் தயார்செய்தல்
- பூச்சுக்கள்- சோதனை
- அடிஅடுக்கு
- மண் பூச்சு முதல் அடுக்கு
- மண் பூச்சு இரண்டாவது அடுக்கு
- மண்+சுண்ணாம்பு முதல் அடுக்கு
- மண்+சுண்ணாம்பு இரண்டாவது அடுக்கு
- சுண்ணாம்பு பூச்சு முதல் அடுக்கு
- சுண்ணாம்பு பூச்சு இரண்டாவது அடுக்கு
பயிற்சியாளர்:
பிஜு பாஸ்கர் மற்றும் தணல் குழுவினர்
இடம்:
தணல் வளாகம், திருவண்ணாமலை, தமிழ்நாடு.
பயணம்:
அருகில் உள்ள ரயில் நிலையம்: திருவண்ணாமலை, காட்பாடி மற்றும் விழுப்புரம்.
பயிற்சிக் கட்டணம்:
தேதி அறிவிக்கப்படும் போது பயிற்சிக்கட்டணம் தெரிவிக்கப்படும்.
(மதிய உணவு மற்றும் சிற்றுண்டி உட்பட)
*பயிற்சி கட்டணங்களின் மூலம் மட்டுமே கிடைக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு தணல், ஆய்வுகள், ஆவணப்படுத்துதல் மற்றும் பயணங்கள் மேற்கொண்டு தகவல் சேகரித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. இதற்கென்று வெளியில் நிதி பங்களிப்பாளர்கள் அல்லது நன்கொடை வழங்குபவர்கள் இதுவரை கிடையாது. மேலும் வருடத்திற்கு இரண்டு கட்டிடங்கள் வெறும் பணம் நோக்கில் அல்லாது அன்பளிப்பாக எவ்வித ஆலோசனைக் கட்டணமின்றிக் கட்டித் தரப்படுகிறது. அவ்வாறு கட்டப்படும் கட்டிடங்கள் நாங்கள் கற்றறிந்த இயற்கை கட்டுமானம் முறைகளின் தொகுப்புகளின் வெளிப்பாடாக இருக்கும். எங்களிடமிருந்து கற்க விரும்பும் நபர்கள் இச்சூழ்நிலைகளைக்கருத்தில் கொண்டு பயிற்சிக் கட்டணம் குறைப்பில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கும் ஒருவரைக் கண்டறிந்து அதன் மூலம் பயிற்சியில் பங்கேற்கலாம்.
பதிவுசெய்தல்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பயிற்சி வகுப்பிற்குப் பதிவு செய்யலாம்..
பலகட்ட அனுபவம் பெற்ற பங்கேற்பாளர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மிக முக்கியமாக விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மிகுந்த விருப்பத்துடனும் நற்குணத்துடன் தாங்களே வேலை செய்து அதிலிருந்து கற்க வேண்டும் என்ற தூண்டுதலையும் பெற்றிருக்க வேண்டும்.!
பயிற்சிக்குத் தயாராதல் :
பயிற்சியில் பங்கேற்கத் தேவையான பொருட்கள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழ்க்கண்ட இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். இணைப்பு- பயிற்சி வகுப்புக்கு ஆயத்தமாதல்
பதிவு ரத்து செய்தல்/பணத்தை திரும்பப் பெறும் வசதி:
தணல் மட் ஹோம் அறக்கட்டளையின் கொள்கைப்படி முன்பதிவை திரும்பப் பெற விரும்பினால், பயிற்சி வகுப்பு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்(குறுகிய கால இடைவெளியில் காலியிடங்களை நிரப்ப வேறு நபர்களைத் தேடுவது கடினம்) அவ்வாறு முன்பதிவை ரத்து செய்தால் முன்பதிவுக் கட்டணத்தில் 75 விழுக்காடு பணம் திரும்பக் கொடுக்கப்படும்.
வகுப்பு நடைபெற, 15 நாட்களுக்குக் குறைவாகக் கால அவகாசம் இருக்கும் பட்சத்தில் பதிவு ரத்து செய்தால் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது.
நீங்கள் பதிவு செய்த பயிற்சி வகுப்பில் உங்களால் பங்கேற்ப இயலவில்லை என்றால், மற்ற பயிற்சி வகுப்புக்குப் பரிமாற்றம் செய்யலாம். உங்களுடைய பணம் நீங்கள் பங்கேற்க இருக்கும் மற்ற பயிற்சி வகுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்தப்பரிமாற்றம் வகுப்புநடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும்..
வகுப்பு நடைபெற 15 நாட்களுக்கும் குறைவாகக் கால அவகாசம் இருந்தால், வகுப்புப் பரிமாற்றம் செய்ய இயலாது.
வகுப்பு நடைபெற 15 நாட்களுக்கும் குறைவாகக் கால அவகாசம் இருக்கும் பட்சத்தில், உங்களால் பயிற்சியில் பங்கேற்க இயலவில்லை எனில், உங்களுக்குப் பதில் வேறு நபரைப் பங்கேற்கச் செய்யலாம். உங்களின் பணம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் அளித்த முன்பதிவு பணமாக எடுத்துக்கொள்ளப்படும்.
அனைத்து அபராத பணமும் தணலின் வருங்கால வெளியீடுகளுக்கும், தணல் இயற்கைக் கட்டுமானப் பள்ளியின் செயற்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படும்
முக்கியக் குறிப்புகள்:
- வயது வரம்பு, தொழில் வரம்பின்றி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
- பயிற்சியில் பங்கேற்காதவர்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இங்கே தவிர்க்கப்படுகிறது. அதாவது பயிற்சி நடைபெறும் நேரத்தில் உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.
- குடும்பத்துடன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க பரிந்துரைக்கிறோம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டணமின்றிப் பெற்றோருடன் பங்கேற்கலாம்.10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50 விழுக்காடு பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
- அருகில் கள ஆய்வுக்குச் செல்லும்போது மற்றவர்களுடைய தனிமை விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
- செய்முறை பயிற்சி வகுப்பு என்பதால் தங்களை உடலுழைப்பில் ஈடுபடுத்திக் கொள்ளத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
- மிருதுவான பருத்தி ஆடைகள் (பழையன) வெப்பத்தைத் தாங்கும் வகையில் அணிந்து வரலாம். எப்படியும் உங்களது ஆடையில் கறை படியத்தான் போகிறது.
- வெயிலின் தாக்கம் சற்று அதிகம் என்பதால் வெப்பத் தடுப்புக் களிம்புகள், தலைப்பாகை அல்லது தொப்பிக் கொண்டு வருவது சிறந்தது.
- உங்களை எப்பொழுதும் ஆற்றல் நிறைந்த நபராக வைத்துக் கொள்ளத் தேவையான பானங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு வரலாம்.
- எளிமையாக அணிந்து கழட்டக்கூடிய காலணிகளைக் கொண்டு வர வேண்டும். தணல் வளாகத்தில் மண் உடற்பயிற்சி கூடத்தில் வெறும் கால்களை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.
- நல்ல கையுறைகள் கொண்டுவர பரிந்துரைக்கிறோம்!
- அவசரகால மருந்து பொருட்களும் உடன் வைத்து இருந்தால் நல்லது.
- மிக முக்கியமாகக் கைபேசியின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. விரிவுரை வகுப்பின் போதும் செய்முறைப் பயிற்சி வகுப்பின் போதும் காணொளிப் பதிவு செய்வதைத் தடை செய்கிறோம்.
- இயற்கை கட்டுமானம் சார்ந்த பெயர்கள் மற்றும் சொல்லாடல்களை மறக்க நேரிட்டால் குறிப்பு எடுப்பது சிறந்தது. விரிவுரை வகுப்பின்போது குறிப்புகளைப் பதிவு செய்யக் குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருள் கொண்டு வரலாம்.
- களநிலவரம், களத்தில் நிலவும் பருவ நிலை ஆகியவற்றைப் பொறுத்து வகுப்பின் போக்கில் மாற்றம் நேரிடலாம்.
- மேலும் சந்தேகங்களுக்கு thannalroots[@]gmail.com
முந்தைய பயிற்சி பட்டறைகள்
50க்கும் மேலான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும்
1500க்கும் மேலான மக்கள் செயல் வழியாகக் கல்வி கற்றனர்.
Vannakam Dr Ramalingam,
Dates are not fixed, we will update and announce in our WhatsApp group – Link https://rebrand.ly/whatsapp-dccdd
Vannakam, Dates are not fixed, we will update and announce in our WhatsApp group – Link https://rebrand.ly/whatsapp-dccdd
This is Dr Ramalingam Suresh Kannan, Ph D., from Chennai. Would be glad to join your 2+1 day training planned on September 2021. Kindly share the link to enroll the same. Thanks
This is Dr Ramalingam Suresh Kannan, Ph.D., from Chennai. Would be glad to enroll in the coming September month 2+1 day training. Looking forward your intimation on the same to proceed further on this regards. Thanks