2 நாட்கள் செயல்-வழி

சாமானியர்களுக்கான பயிற்சிபட்டறை

குறிப்பு: பயிற்சி வகுப்புபற்றிய முழுவிபரங்களையும் நிபந்தனைகளையும் படித்துவிட்டு கட்டணம் செலுத்தும் இணைப்பில் சென்று பதிவு செய்க.

இரண்டு நாள் பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் ஒரு நாள் பூச்சு வகுப்பும் நடத்தப்படுகிறது. விரும்பியோர் அதற்கும் பதிவுசெய்யலாம். இணைப்பு-ஒருநாள் பூச்சு வகுப்பு


நிகழ்நிலை:
தேதி அறிவிக்கப்படவில்லை

கண்ணோட்டம்

இயற்கையாகக் கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இயற்கைப் பொருட்களைப் பற்றிய புரிதல் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆர்க்கிடெக் அல்லது இன்ஜினியர் தான் கட்ட முடியும் என்பதல்ல. இந்த இரண்டு நாட்கபார்த்துக் கருத்துக்களை உள்வாங்கலாம். மேலும் இயற்கையுடன் ஒத்திசைந்து வாழவேண்டும் என ஒத்த எண்ணம் கொண்ட பலரின் அனுபவப் பகிர்வுக்கான இடமாகவும் தணல் வளாகம் திகழும்‌.
இந்த இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறை இயற்கை கட்டுமானத் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்களைப் பற்றியது‌. திருவண்ணாமலையில் உள்ள தணல் வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெறும். பங்கேற்பதற்கு வயது வரம்போ தொழில் வரம்போ கிடையாது. அனைவரும் கலந்து கொள்ளலாம்.

வகுப்பில் இடம்பெறும் அமர்வுகள்

 • விரிவுரை வகுப்பும் காணொளி வழி வகுப்பும்- கொள்கை விளக்கங்கள்
 • செய்முறைப் பயிற்சி (பொருட்கள் மற்றும் தொழிற்நுட்பங்களை ஐம்புலன்களால் உள்வாங்குதல்).
 • முன்மாதிரிகள் காண்பித்தல்(கலைஞர் ஒருவர் மாதிரிமூலம் விளக்கம் தருவார்)
 • கேள்வி மற்றும் பதிலுக்கான அமர்வு.

வகுப்பில் கற்பிக்கப்படும் இயற்கை கட்டுமானத் தொழில்நுட்பங்கள்:

 • கற்களால் அடித்தளம்.
 • மண் சுவர்-மண் மற்றும் நார்ப்பொருள் பயன்படுத்தி ஒற்றைக்கூறு சுவர்.
 • வரிச்சி சுவர்- தட்டியும் மண்பூச்சும், விரும்பிய வடிவில் சுவர் செய்யலாம்
 • பச்சைக்கல்-சூரிய ஒளியில் காய்ந்த கல்.
 • சிஎஸ்எம்பி, மண்ணுடன் நீர் தெளித்து அமுக்கத்துள்ளாக்கப்பட்ட மண்கற்கள்.
 • தாவர மற்றும் விலங்கு இடுபொருள் பயன்படுத்திப் பூச்சுகள்
 • மண் சுவரின் மீது சிற்பவேலையும் சுவரோவியங்களும்.
Play Video

வகுப்பு நடைபெறும் இடம்:

தணல் வளாகம், திருவண்ணாமலை

பயணம்:

அருகில் உள்ள ரயில் நிலையம்: திருவண்ணாமலை, காட்பாடி மற்றும் விழுப்புரம்.

தங்குமிடம்:

தணலில் தங்குமிட வசதி இல்லை. எனவே பங்கேற்பாளர்கள் தங்களுக்கான தங்குமிடத்தை அவர்களே தயார் செய்து கொள்ள வேண்டும். இதற்கான செலவு பயிற்சிக்கட்டணத்தில் உள்ளடங்காது. தங்குமிடத்திலிருந்து தணல் வளாகத்திற்கு(ரமணா ஆஷ்ராமத்திலிருந்து 6கிமீ தொலைவில்) தினமும் வந்து செல்வது அவரவர் பொறுப்பு.

பயிற்சிக்கட்டணம்:

தேதி அறிவிக்கப்படும் போது பயிற்சிக்கட்டணம் தெரிவிக்கப்படும்.

இந்தக் கட்டணத்தொகையில் வகுப்பின் இடையே வழங்கபப்படும் மதிய உணவு, நீராகாரம் மற்றும் சிற்றுண்டி ஆகியவற்றின் செலவு அடங்கும். தங்குமிடம் மற்றும் காலை, இரவு உணவு ஆகியன எல்லாம் தங்கள் பொறுப்பு.

*பயிற்சி கட்டணங்களின் மூலம் மட்டுமே கிடைக்கும் பொருளாதாரத்தைக் கொண்டு தணல், ஆய்வுகள், ஆவணப்படுத்துதல் மற்றும் பயணங்கள் மேற்கொண்டு தகவல் சேகரித்தல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடுகிறது. இதற்கென்று வெளியில் நிதிப்பங்களிப்பாளர்கள் அல்லது நன்கொடை வழங்குபவர்கள் இதுவரை கிடையாது. மேலும் வருடத்திற்கு இரண்டு கட்டிடங்கள் வெறும் பணம் நோக்கில் அல்லாது அன்பளிப்பாக எவ்வித ஆலோசனைக் கட்டணமின்றி கட்டித் தரப்படுகிறது. அவ்வாறு கட்டப்படும் கட்டிடங்கள் நாங்கள் கற்றறிந்த இயற்கை கட்டுமானம் முறைகளின் தொகுப்புகளின் வெளிப்பாடாக இருக்கும். எங்களிடமிருந்து கற்க விரும்பும் நபர்கள் இச்சூழ்நிலைகளைக்கருத்தில் கொண்டு பயிற்சிக் கட்டணம் குறைப்பில்ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் விரும்பினால் பயிற்சியில் பங்கேற்கக் காத்திருக்கும் மாணவர்களுக்காக உதவித்தொகை அளிக்கலாம்‌. எங்களிடம் உதவித்தொகை கோரி நிறைய விண்ணப்பங்கள் உள்ளன.

முன்பதிவு:

பயிற்சிவகுப்பின் வகையைப் பொறுத்து பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்துகொள்ளவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டணம் செலுத்தும் இணைப்பில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவுக் கட்டணமாகப் பாதித் தொகை மட்டும் செலுத்தி உங்கள் பங்கேற்பை உறுதி செய்து கொள்க. மீதமுள்ள தொகை பயிற்சி நடைபெறும் முதல் இரண்டு நாட்களில் பணமாகத் தர வேண்டும். பதிவு செய்தபின் வாட்சாப் குழுவில் நீங்கள் இணைக்கப்பட்டுத் தங்குமிட விடுதிகள்பற்றிய பரிந்துரைகளும் தணல் வளாகத்தின் அமைவிடமும் பொதுவாகத் தெரிவிக்கப்படும்.

பலகட்ட அனுபவம் பெற்ற பங்கேற்பாளர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மிக முக்கியமாக விண்ணப்பதாரர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மிகுந்த விருப்பத்துடனும் நற்குணத்துடன் தாங்களே வேலை செய்து அதிலிருந்து கற்க வேண்டும் என்ற தூண்டுதலையும் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக்குத் தயாராதல் :

பயிற்சியில் பங்கேற்கத் தேவையான பொருட்கள் மற்றும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழ்க்கண்ட இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். பயிற்சி வகுப்புக்கு ஆயத்தமாதல்

பதிவு ரத்து செய்தல்/பணத்தை திரும்பப் பெறும் வசதி:

தணல் மட் ஹோம் அறக்கட்டளையின் கொள்கைப்படி முன்பதிவை திரும்பப் பெற விரும்பினால், பயிற்சி வகுப்பு நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன் எங்களுக்குத் தெரியப்படுத்தவும்(குறுகிய கால இடைவெளியில் காலியிடங்களை நிரப்ப வேறு நபர்களைத் தேடுவது கடினம்) அவ்வாறு முன்பதிவை ரத்து செய்தால் முன்பதிவுக் கட்டணத்தில் 75 விழுக்காடு பணம் திரும்பக் கொடுக்கப்படும்.

வகுப்பு நடைபெற, 15 நாட்களுக்குக் குறைவாகக் கால அவகாசம் இருக்கும் பட்சத்தில் பதிவு ரத்து செய்தால் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாது.

நீங்கள் பதிவு செய்த பயிற்சி வகுப்பில் உங்களால் பங்கேற்ப இயலவில்லை என்றால், மற்ற பயிற்சி வகுப்புக்குப் பரிமாற்றம் செய்யலாம். உங்களுடைய பணம் நீங்கள் பங்கேற்க இருக்கும் மற்ற பயிற்சி வகுப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்தப்பரிமாற்றம் வகுப்புநடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன் தெரியப்படுத்த வேண்டும்.

வகுப்பு நடைபெற 15 நாட்களுக்கும் குறைவாகக் கால அவகாசம் இருந்தால், வகுப்புப் பரிமாற்றம் செய்ய இயலாது.

வகுப்பு நடைபெற 15 நாட்களுக்கும் குறைவாகக் கால அவகாசம் இருக்கும் பட்சத்தில், உங்களால் பயிற்சியில் பங்கேற்க இயலவில்லை எனில், உங்களுக்குப் பதில் வேறு நபரைப் பங்கேற்கச் செய்யலாம். உங்களின் பணம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் அளித்த முன்பதிவு பணமாக எடுத்துக்கொள்ளப்படும்.

அனைத்து அபராத பணமும் தணலின் வருங்கால வெளியீடுகளுக்கும், தணல் இயற்கைக் கட்டுமானப் பள்ளியின் செயற்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படும்

முக்கியக் குறிப்புகள்:

 • குடும்பத்துடன் பயிற்சி வகுப்பில் பங்கேற்க பரிந்துரைக்கிறோம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டணமின்றி பெற்றோருடன் பங்கேற்கலாம்.10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 50 விழுக்காடு பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
 • பயிற்சியில் பங்கேற்காதவர்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இங்கே தவிர்க்கப்படுகிறது. அதாவது பயிற்சி நடைபெறும் நேரத்தில் உங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தெரியப்படுத்தவும்.
 • அருகில் கள ஆய்வுக்குச் செல்லும்போது மற்றவர்களுடைய தனிமை விஷயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்..
 • செய்முறைப் பயிற்சி வகுப்பு என்பதால் தங்களை உடலுழைப்பில் ஈடுபடுத்திக் கொள்ள தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
 • மிருதுவான பருத்தி ஆடைகள் (பழையன) வெப்பத்தை தாங்கும் வகையில் அணிந்து வரலாம். எப்படியும் உங்களது ஆடையில் கறை படியத்தான் போகிறது.
 • வெயிலின் தாக்கம் சற்று அதிகம் என்பதால் வெப்பத் தடுப்பு களிம்புகள், தலைப்பாகை அல்லது தொப்பி கொண்டு வருவது சிறந்தது.
 • உங்களை எப்பொழுதும் ஆற்றல் நிறைந்த நபராக வைத்துக் கொள்ள தேவையான பானங்கள், உணவுப் பொருட்கள் கொண்டு வரலாம்.
 • எளிமையாக அணிந்து கழட்டக்கூடியக் காலணிகளைக் கொண்டு வர வேண்டும். தணல் வளாகத்தில் மண் உடற்பயிற்சி கூடத்தில் வெறும் கால்களை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.!
 • நல்ல கையுறைகள் கொண்டுவர பரிந்துரைக்கிறோம்.!
 • அவசரகால மருந்து பொருட்களும் உடன் வைத்து இருந்தால் நல்லது.
 • மிக முக்கியமாகக் கைபேசியின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.விரிவுரை வகுப்பின் போதும் செய்முறைப் பயிற்சி வகுப்பின் போதும் காணொலிப் பதிவு செய்வதை தடை செய்கிறோம். இயற்கை கட்டுமானம் சார்ந்த பெயர்கள் மற்றும் சொல்லாடல்களை மறக்க நேரிட்டால் குறிப்பு எடுப்பது சிறந்தது. விரிவுரை வகுப்பின்போது குறிப்புகளைப் பதிவு செய்யக் குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருள் கொண்டு வரலாம்.
 • களநிலவரம், களத்தில் நிலவும் பருவ நிலை ஆகியவற்றைப் பொறுத்து வகுப்பின் போக்கில் மாற்றம் நேரிடலாம்.
 • மேலும் சந்தேகங்களுக்கு thannalroots[@]gmail.com என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50க்கும் மேலான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும்
1500க்கும் மேலான மக்கள் செயல் வழியாகக் கல்வி கற்றனர்.

இணைய
வழிக் காணொளி வகுப்பு

தமிழ் & ஆங்கிலத்தில் இயற்கைக் கட்டுமானப் பயிற்சி

நூல்கள்& இ-நூல்கள்

செய்திகள் & டி‌வி

This post is also available in: English

2 thoughts on “சாமானிய மக்களுக்கான இயற்கை கட்டுமான முகாம்”

 1. வணக்கம்,
  தணல்- ஐத் தொடர்பு கொண்டமைக்கு நன்றி. ஜனவரி முதல் வாரத்தில் பயிற்சிப்பட்டறைக்கான தேதி அறிவிக்கப்படும். மார்ச் மாதம் பயிற்சிப்பட்டறை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Scroll to Top