தணல் வீடுகள்

தணல் வீடுகள்
தணலின் கொள்கைப்படி உள்ளூரில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களையும் தாவர மற்றும் விலங்கு இடுபொருட்களும் சேர்த்து விலை குறைவாக மரபு முறையில் வடிவமைத்துச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் கட்டப்படும் வீடுகள்

5வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது

பயனாளியே கட்டுதல் -பயனாளியே தன்னுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் ஈடுபாட்டுடன் சில வேலையாட்களை வைத்துக்கட்டுதல்
இயற்கைக் கட்டுமானத் தொழிலர்கள் – ஆர்கிடெக்(கட்டிடக்கலைஞர்கள்), இன்சினியர் (பொறியாளர்), இன்டீரியர் டிசைனர், ஒப்பந்ததாரர்கள் (கான்ட்ராக்டர்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான தொழிலர், உட்புற வடிவமைப்பாளர் ஆகியோர் செய்த இயற்கைக் கட்டுமானங்கள்.
தற்கல்வி பெற்ற கட்டிடக்கலைஞர்கள் -விவசாயிகள், கலைஞர்கள், நாடோடிகள், வடிவமைப்பாளர் (ஃபேஷன் டிசைனர்), விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர் மற்றும் பலர்
கைவினைஞர்/ கொத்தனார்: – பூச்சுச் செய்பவர், தச்சர்கள், மூத்த கொத்தனார்கள் மற்றும் இயற்கைக் கட்டிடக்கலையின் பல பாகங்களிலும் கைத்தொழிலும் திறமைகொண்ட கைவினைஞர்கள்
தணலர்கள் (தணலைட்ஸ்)-தணலின் நிறுவனர்களான பிஜு பாஸ்கர் மற்றும் சிந்து பாஸ்கரிடம் நீண்டநாள் மாணவராகப் பயிற்சி பெற்று தொழில் செய்பவர்கள்

 

தணலர்கள்- இளம் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள்

தணலர்கள் என்பது தணல் வளாகத்தில் செயல்வழி அனுபவம் பெற்று பயண்ங்கள் வழியாகவும் ஆய்வுகள் வழியாகவும் பாரம்பரியக் கட்டுமான முறைகளை நன்கு கற்றுத்தேர்ந்து சூழலுக்கு இணக்கமான முறையில் அதைப் பல ஆண்டுகள் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி வருபவர்கள் ஆவர்.

ஒரு கவிதை வாயிலாக சுதையைப்(சுண்ணாம்பு) புரிந்துகொள்வோம்.

பல ஆண்டுகள் உழைத்து, பயிற்சி பெற்று, தன் முன்னோர்கள் வழங்கிய ஞானம் குன்றாமல் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திவரும் கலைஞர்கள் தான் இயற்கை கட்டுமானத்தின் நாயகர்கள்.

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.

Scroll to Top