இயற்கை நிறைவுகள்
இயற்கை நிறைவுகள்
இயற்கை நிறைவுகள் என்பது இயற்கைக் கட்டுமானத்தில் உள்ள சுவர் நிறைவுகள் (மண் மற்றும் சுண்ணாம்பு தொடர்பான பூச்சுகள், வண்ணப்பூச்சு) தளமைவுகள்(மண் தளம், கற்தளம், சுடுமண்ஓட்டுத்தளம்) பற்றி நாங்கள் அல்லது மற்ற கலைஞர்கள் செய்த ஆய்வுகளை உள்ளிடக்கிய ஒரு தொடர்.
ஒரு வீட்டின் பல்வேறு பாகங்களான சுவர், கூரை மற்றும் தளம் ஆகியவற்றின் மீது செய்யப்படும் நிறைவுகள் பலவகையான தொழில்நுட்ப முறைகளில் செய்யப்படலாம். அவற்றைப் புரிந்துகொண்டு ஆய்வுசெய்து அதைப் பற்றிய அறிவைச் சாமானிய மக்களுக்கு அறிமுகப்படுத்தி மறந்துபோன தொழில்நுட்பங்களை மீட்டெடுக்கச் செய்கிறோம்.
சுதை என்றால் சுண்ணாம்பு. தீஞ்சுதை= தீமை+சுதை. தீமை விளைவிக்கும் சுதை. இக்கட்டுரையைப் படிக்கும்போது புரியும் ஏன் சிமெண்ட் ஐ தீஞ்சுதை என்றழைக்கிறோம் என்று. வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் தீஞ்சுதை, பெருபான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.