தணல் வேலைகள்
தணல் இயற்கைக் கட்டுமான வேலைகள்
குறிப்பு:
எங்களுடைய சிறிய குழு டிசம்பர் 2021 வரை, “வீடு திரும்புதல், இந்திய மரபுக் கட்டுமானங்களுடன் ஒரு உள்ளார்ந்த பயணம்” என்ற காணொளித்தொடர் உருவாக்கம்& வெளியிடுதல் தொடர்பான வேலைகளில் ஈடுபடும். அதுவரை வேறு எந்தக் கட்டுமான வேலையை எடுத்துச் செய்ய இயலாது.
தணல் ஒரு விழிப்புணர்வுக் குழுவே தவிர கட்டுமான நிறுவனமோ அல்லது ஒப்பந்தக்காரரோ அல்ல. நாங்கள் ஒரு வருடத்திற்கு இரண்டிற்கும் மேற்பட்ட கட்டுமானத் திட்டங்களில் ஈடுபடுவதில்லை. அதனால் தேர்ந்தெடுக்கும் திட்டங்கள், அதன் மதிப்புகள், நோக்கம் அறிந்து உறுதிப்படுத்திய பின்னரே தீர்மானிக்கப்படும். மண் கட்டுமானங்கள் என்பது வீடு என்பதைத்தாண்டி பல்வேறு விதமான தேவைகளுக்கும் பொருந்தும் என்பதை செய்து காண்பிக்க விரும்புகிறோம். உங்களுடைய முன்னெடுப்புகள் மாறுபட்டதாக இருந்தால் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மண் கட்டுமான தொழில்நுட்ப முறைகள் பற்றித் தெரிந்துகொள்ள எங்களுடைய பயிற்சிப்பட்டறையில் கொள்ளலாம். தணல் முன்னெடுக்கும் ஒவ்வொரு கட்டுமான வேலைகளும் அன்பளிக்கும் வகையில் செய்து தரப்படும். தணல் எப்படியொருக் கட்டுமான வேலையை எடுத்துச்செய்கிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள “ஒரு இயற்கைக் கட்டுமானத்தை அன்பளித்தல்” என்பதை வாசிக்கவும்.
நடப்பு வேலைகள்/ வருங்கால வேலைகள்
முடிந்த வேலைகள்
எங்களது கட்டுமான வேலைகள் பற்றிய காணொளிகள்
தணல் வேலைகள்
50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.
This post is also available in: English