தணலைப் பற்றி

Note: தணல் பயன்நோக்காமல் செயல்படுகின்ற ஒரு விழிப்புணர்வு அமைப்பாகும். எமது நிறுவனர்கள் ரமண மகரிஷியின் கருத்தைப் பின்பற்றுவதால் அந்த மதிப்புகளைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இதன்காரணமாகத் தேவையில்லாத கருத்தரங்கு, விவாதம் அல்லது பொதுவெளிப்பிரச்சாரம் ஆகியவற்றைத் தவிர்க்கிறோம். விழிப்புணர்வைப் பரப்புவதில் இத்தகைய தீவிரச் செயற்பாடுகளைத் தவிர்த்து, இயற்கைக்கு நெருக்கமாக வீடுகள் அமைக்க விருப்பம் கொண்டோருக்கு, ஆன்லைன் வகுப்பு, வெளியீடுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் மூலமாக முறையாகக் கற்றுத்தருகின்றோம்.e

தணல் என்பதை தண்+அல் என எழுதலாம். அதாவது தணல் என்பதற்கு தன்மையான நிழல் என்று பொருள்தணல் நேச்சுரல் ஹோம்ஸ் என்பது திருவண்ணாமலையில் அமைந்துள்ள இயற்கைக்கட்டுமான விழிப்புணர்வு அமைப்பு.  இதைப் பிஜூ பாஸ்கர் மற்றும் அவரது மனைவி சிந்து பாஸ்கர் 2011ஆம் ஆண்டில் நிறுவினர். பிஜு பாஸ்கர் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

வேதகாலத்தில் (சங்ககாலத்தில்) பின்பற்றப்பட்ட இந்திய வழிக்கற்றல் முறை மற்றும் அந்தந்த நிலத்துக்குரிய கட்டுமான முறைகள் ஆகியன மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டுள்ளதால், அவற்றை எளிமையான முறையில் ஆய்வுபடுத்துதலும், தேர்வு செய்வதும் முக்கிய நோக்கமாகும். விஷ்ணுதர்மோத்தராவின் சித்தசூத்திராவில் சுண்ணாம்பு மற்றும் சுட்டமண்ணுக்குமான பிணைப்பின் விளைவு, தாவரங்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்படும் மூலப்பொருட்களைக் கட்டுமானத்தில் நேர்த்தியாகப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்புகள் உள்ளன. பலதுறைகளிலும் மரபுசார்ந்த நுட்பங்களை முறையாக ஆவணப்படுத்துவதில் நம்நாடு பின்தங்கியே உள்ளது. அப்பாடங்களின் மூலம் முற்றிலும் அழிவதற்கு அந்நிய நாட்டினரின் கண்டுபிடிப்புகள் அறிவியல் விளக்கங்கள் காரணமாக அமைகின்றன.

நமது முன்னோர்களின் வாழ்விடங்களை உற்றுநோக்கினால், அவர்கள் எழுப்பியக் கட்டுமானங்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டுக்கட்டப்பட்டதாகவும், நீடித்து நிலைத்து உயிர்ப்புடனும் அமைதியாக வாழும் வகையிலும் இருக்கும். உலகளாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மண்ணால் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருகின்றனர்.

மனதில் எழும் சிந்தனைகளின் பிரதிபலிக்கும் பொருளாக வீடுகள் அமைகின்றன. நவீனக்கட்டுமானப் பொருட்கள் கொண்டுக்கட்டப்படும் வீடுகள் குடியிருப்பாளர்களுக்கு மிகுந்த சிக்கலைத் தினந்தோறும் உருவாக்குகின்றன. அதனால் எந்தெந்தப் பொருளை எந்தெந்த விதத்தில் பயன்படுத்துவது என்பது முக்கியமானதாகும். அதனால் அப்பொருட்களின் தேர்வும், பயன்படுத்தும் விதமும் ஒரு வீடு செயல்படுவதற்கு முதன்மையான தாக்கத்தை ஏற்படுத்தும். சூழலைச் சிதைக்காமல், அருகாமையில் கிடைக்கும் மூலப்பொருட்களை அதிக ஆற்றல் கொண்டு மாறுதலுக்கு உட்படுத்தாமல் அப்படியே பயன்படுத்த வேண்டும். அதனால் இயற்கையுடன் ஒத்திசைந்த வாழ்வை பறவைகள் கூடு கட்டி வசிப்பதுபோல் மேற்கொள்ளலாம்.

நமது தற்சார்பான கிராமங்களைத் திரும்ப நோக்கினால், ஆச்சரியமான தீர்வுகள் கிடைக்கும். அருகாமையில் கிடைக்கும் மண் மற்றும் மற்ற பொருட்களைக் கொண்டுக் கட்டப்பட்டதாகவே வீடுகள் இருந்தன. ஒரே சுண்ணாம்பு சூளை,ஒரு கிராமத்தின் தேவைக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ ஒரு வீடு கட்டுவதற்குப் பாரம்பாரமாகச் சிமெண்ட் மூட்டைகள் வெகுதூரத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மாற்றுக்கட்டுமானம் என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை அதிகம் பயன்படுத்துவது எப்படித்தீர்வாக அமையும்? இயற்கைக் கட்டுமானங்களே இக்காலத்திற்குப் பொருத்தமான தீர்வாகவும், மரபுசார்ந்த நுட்பங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் அமையும்.

இந்தியாவிற்கு சிமெண்ட் எப்பொழுது அறிமுகமானது? அதற்கு முன்னர் எந்த வீடுகளும் கட்டப்பட வில்லையா? கச்சா வீடு, புக்கா வீடு என்ற தவறான வகைப்பாட்டிற்குப்பின், பெரும்பான்மையான மக்கள் பக்கா சிமெண்ட் வீட்டின் மீது ஆசைப்படுகின்றனர். ஆனால் மிகக்குறைந்த சிலரே, அவ்வீடுகள் உடல்நலத்திற்குப் பொருத்தமற்ற சூழலைக் கொண்டுள்ளதை சிந்தித்துப் பார்க்கின்றனர். அதிக ஆற்றல் நுகர்வது மட்டுமல்லாமல் உடலுக்குத் தீங்குவிளைவிக்கக்கூடிய பல வேதிப்பொருட்களையும் தற்போதைய கட்டிடங்கள் கொண்டுள்ளன.

மாற்றுக்கட்டுமான முறைகளில் இயற்கைக்கட்டுமானப் பொருட்களுடன் சிமெண்ட் மற்றும் செயற்கை வேதிப்பொருட்களைக் கலப்பிடம் செய்கின்றனர். இப்படி செய்வதால் மண்ணானது, சிமெண்ட் போல் விறைப்பானதாகி சுவாசிக்கும் குணத்தை இழந்து விடுகிறது. இந்தியா இயற்கை விவசாயம், மாற்றுக்கல்வி, இயற்கை மருத்துவம், இயற்கை ஆடை மற்றும் உணவு ஆகியன வழியாக நேர்மறை மாற்றத்தைச் சந்தித்து வரும் வேளையில், உண்மையான இயற்கைக் கட்டுமானமும் தேவையான ஒன்றே!

அழிவின் விளிம்பில் நிற்கும் அத்தகைய தொழில்நுட்பங்களை ஆய்வுக்குட்படுத்துதலும் ஆவணப்படுத்துதலுமே தணலின் முக்கிய செயற்பாடாகும். அத்தகைய மரபு தொழில்நுட்ப வல்லுநர்கள் பெரும்பாலும் முதியவர்களாக இருப்பதால், அவை வரலாற்றில் புதைந்து விடாமல், முறையாகப் பதிவு செய்வது இன்றியமையாதது. எனவே தான் நாங்கள் கட்டுகின்ற கட்டிடங்களில் அந்த நுட்பங்களைச் செய்து காண்பித்து, தேவைப்படுவோருக்குச் செயற்விளக்கம் அளித்து அறிவியல் பகுப்பாய்வு செய்ய வழிவகை செய்கிறோம். இது எதிர்காலத் தலைமுறையினருக்கு ஒரு அறிவுக்களஞ்சியமாகச் செயல்படும்.

மாற்றுக்கட்டுமான முறைகள் பொருளாதார ரீதியாகச் சாத்தியமுள்ளதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதையக் கட்டிடவியலாளர்கள் பரிந்துரைக்கும் மாற்றுக்கட்டுமான முறைகளுக்கு அதிக பணம் விரயமாகின்றது. இதன் அர்த்தம் சில நபர்களுக்கு மட்டுமே அது பொருந்தும்.இது நேர்மறையற்ற செயற்பாடு அல்லவா? மண் என்பது ஏழைகளுக்கானதாகக் கருத வேண்டாம். நாங்கள் மரபு சார்ந்த, விலைகுறைவான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அம்மண்ணை எல்லோரும் வீடுகட்டும் பொருளாகப் பயன்படுத்த வேலை செய்து வருகின்றோம். உடலுக்கும் மனதுக்கும் நெருக்கமான முறையில் கட்டிடக்கலை பல கோணங்களில் வளரும் என்பதை நாங்கள் உணர்கிறோம். உலகளாவில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிக்குப் பொருந்தும் வகையில் தீர்வுகளைக் கொண்டுச் செல்ல வேண்டும்.

மரபு சார்ந்த நுட்பங்களைச் செயற்படுத்தியும், எங்களுடைய செயல்களில் ஏற்படும் தவறுகளை நிவர்த்தி செய்தும் புவிச்சூழலுக்குகந்த வீடுகளை உருவாக்கி வருகிறோம். அத்தகவலைப் பரிமாறிக் கொள்ளும் தளமாகவும் தணல் செயல்படுகிறது.

நாங்கள் கற்றப் பாடங்களைப் பயிற்சி வகுப்புகள் மற்றும் வெளியீடுகள்(விரைவில் காணொலிகள், நூல்கள் ) மூலமாகப் பகிர்ந்து வருகின்றோம். பயிற்சி வகுப்பு வந்து முறையாக் கற்றுக்கொண்டவர்களில் பெரும்பான்மையினர் சொந்த வீட்டைத் தாமாகவே கட்டுகின்றனர். இது ‘தன் வீட்டைத் தானே கட்டுதல்’ திட்டத்தில் சேரும். குருவிகள் எப்படிக் கூடு கட்டுகின்றனவோ அதைப் போல ஒவ்வொருவரும் தம் வீட்டைக் கட்டுவதற்கானப் பிறவித்திறமை கொண்டுள்ளதால் ஒரு வீடு கட்டுவது எளிது. தன்னால் கட்டப்பட்ட வீட்டிற்கும் தனக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு இருக்கும்.

குறைந்தது ஒரு கட்டிடத்திலாவது தணலுடன் இணைந்துப் பணியாற்றினால், அவர்கள் தணர் என்ற நிலையை எட்டுவர். அதற்கு அவர்கள் இயற்கைக் கட்டுமானப் பொருட்களைப் பற்றிய புரிதலையும், எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் தெரிந்திருந்து ஆய்வுக்குட்படுத்துதல் ஆவணப்படுத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட வேண்டும். தணலுடன் நீண்டகாலம் வேலை செய்து தணல் மாணாக்கராக விரும்புபவர்கள் (1 வருடம் முதல் 1.5 வருடம்) பணிப்பயிற்சி(ஒரு கால இடைவெளியில் 3 நபர்கள்) அல்லது உள்ளீட்டுப்பயிற்சியில்(ஒரு கால இடைவெளியில் 2 மாணவர்கள்) இணையலாம். அல்லது குறைந்தகால இடைவெளியில் கட்டுமானம் கற்க விரும்புவோர் தன்னார்வலராக (உரிமையாளரின் வசதி வாய்ப்பிற்கேற்ப) நாங்கள் கட்டும் கட்டிடம் ஏதாவதொன்றில் பணியாற்றலாம். விழிப்புணர்வு பரப்புவது எங்களுடைய பணிகள் மூலமாக இருக்குமே தவிர பல பல கட்டிடங்களை எழுப்புவதில் அல்ல.

தணல் இயற்கைக் கட்டுமானப் பள்ளி: கற்றவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் ஒருபொதுவான தளத்தில் பயிற்சி அளிப்பது இதன் முன்னெடுப்பாகும். நீடித்த வளர்ச்சியில் அதிக கிராமங்கள் உருவாக வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. அதனால் அதிக இயற்கைக் கட்டிடவியலாளர்களை கிராமப்புறத்தில் உருவாக்குவது தணலின் முக்கிய நோக்கம். அதீத நுகர்வுக்கும் தேவைக்கும் வேறுபாடு அறிந்தவர்கள் தணலின் கொள்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இயற்கை வழி வாழ விரும்பும் ஒவ்வொருவருக்கும் பொருளாதாரப் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இயற்கைக் கட்டுமானம் பொருத்தமானதே! இத்தகைய தொலைநோக்குத்திட்டத்திற்கு அதிகமான மக்களைத் தயார்செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றோம்.

கட்டிடக்கலை ஒவ்வொருவருக்கும் உரிமையானதே! அதனால் நாங்கள் எழுப்பும் கட்டிடங்களுக்கு எவ்வித பணமதிப்பையும் பெறுவதில்லை. ஆனால் தணலின் வளர்ச்சிக்கு உதவும் அன்பளிப்பை ஏற்கின்றோம். எங்களுடைய தினசரி செலவுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் பயிற்சி வகுப்பின் மூலமாக மட்டும் கிடைக்கும் பொருளாதாரத்தைப் பயன்படுத்துகிறோம். இயற்கைக் கட்டுமானம்பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, எங்களது பயிற்சிபட்டறை அல்லது இணையவழி வகுப்பில்  கலந்துகொள்ள பரிந்துரைக்கிறோம். இயற்கைக் கட்டிடவியலாளர் ஆக விருப்பம் கொண்டவர்களிடம் இணைந்து மேம்பட விரும்புகிறோம். மேலும் உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்கள் தவிர்த்து, இயற்கைக் கட்டுமான முறையில் திறமைகள் கொண்டோரும் எங்களுடன் பயணித்துப் பலவகையான இடங்களுக்குப் பொருத்தமானக் கட்டிடங்கள் கட்ட உதவி செய்யலாம

இணைய வழிக் காணொளி வகுப்பு

நூல்கள்& இ-நூல்கள்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50க்கும் மேலான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளன மற்றும்
1500க்கும் மேலான மக்கள் செயல் வழியாகக் கல்வி கற்றனர்.

தணலின் சமூக ஊடங்கங்கள்

Scroll to Top