வெளியீடுகள்
தணல் வெளியிட்ட நூல்கள் மற்றும் இ-நூல்கள்

யாக்கை சுவர்கள்
வண்ணஓவிய விளக்கங்களுடன் ஒரு மண் வீடு கட்டுவதற்கான கையேடு.
உள்ளூரில் கிடைக்கும் பொருளை வைத்து இயற்கை வீடு கட்டும் உலகத்தை அறிய முயிற்சிக்கும் ஒவ்வொருக்கும் வழிகாட்டும் நூல். வண்ண ஓவியங்களுடன் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் தங்கள் வீடு கட்டும் போது தங்கள் கைகளால் சோதனை செய்யத் தயாராக இருப்போருக்கான கையேடு. இந்த நூலில் இயற்கைக் கட்டுமானப் பொருட்களைப் பற்றிய அறிமுகமும் மண்சுவர்,வரிச்சி, கற்கள், சுண்ணாம்பு மற்றும் மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விதமும் விளக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில், விலை குறைவாக, உள்ளுர்ப் பொருட்களை வைத்து வீடு கட்ட விரும்பும் சாமானிய மக்களுக்குத்தேவைப்படலாம்.
கிண்டல் பதிப்பை வாங்குவதன் மூலம் எங்கள் செயற்பாட்டுக்குப் பங்களிக்கலாம்.
புதுக்கம்: யாக்கை சுவர் புத்தகம் விரைவில் தமிழ், மலையாளம் & ஆங்கிலத்தில் வெளியிடப்படும். தமிழ் & மலையாளம் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தது. தற்போது திருத்தப் பணியும் வடிவமைத்தல் பணியும் நடைபெறுகிறது.
- ஆகஸ்ட் 2023 இல் மூன்று புத்தகமும் வெளியிடப்படலாம்.



