மதிப்புகள்
தணலின் கொள்கை ஒரு அமைதியான சிந்தனையிலிருந்து உதித்தது…..
1916 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஆசான் நாராயணகுருவிற்க்கும் பகவான் ரமண மகரிஷிக்கும் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.
இரு துறவிகளும் நேருக்கு நேர் சிறிது நேரம் பார்த்தபோது அவர்களுடைய கண்களே உரையாடலை மேற்கொண்டது போல் அமைந்தது.
நாராயணகுருவிற்கும் ரமண மகரிஷிக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்புபற்றி தெரிந்துகொள்ள-இணைப்பு.
ஆசானின் சில கருத்தில் உடன்பாடு உடையவர்கள் வாழ்க்கையின் சுய செயற்பாட்டில் இறங்குவார்கள். ஆசானுக்குப் பிடித்த வழியைத் தேர்ந்து எடுப்பார்கள் அல்லது அந்த வழி அவர்களைத் தேர்ந்தெடுக்கும். இதன் கீழ் பல செயற்பாடுகள் மற்றும் வழிகள் உள்ளன. அதில் விவசாயம், எழுதுதல், ஆசானின் படைப்புகளை மொழிபெயர்த்தல் அல்லது விலங்குகளைப் பராமரித்தல் அடங்கும். இதனைப் பின்பற்றுவர்கள் எல்லாம் ஒரு புள்ளியில் சந்திப்பர்.
இவ்வாறு உள்ள பல வழிகளில் தணல் தேர்ந்தெடுத்த பாதை மண் வீடு கட்டுதல். தணல் நடைமுறைப்படுத்தும் செயல்களின்போது எங்களின் கர்மாவில் உள்ள ஒவ்வொரு கற்களையும் அகற்றி, ஒவ்வொரு கற்களாக அடுக்கி ஒரு வீடு கட்டுகிறோம். ஆசான் மாணவ உறவிற்கான மூன்று தனி மேற்கோள்கள்.
ரமண மகரிஷி மற்றும் அண்ணாமலைசுவாமி
ரமண மகரிஷி அண்ணாமலை சுவாமியிடம் “நீங்கள் சுவர் கட்டுவதால் மண் சுவர்களால் வெளியை உருவாக்குங்கள்.மண்ணுடன் நீர் கலந்து கலவை தயார் செய்து அழுத்தினால் அது வலிமையானதாகும்” என்று கூறினார்.
-டேவிட் காட்மன் எழுதிய ‘லிவிங் வோர்ட்ஸ் ஒப் பகவான்’ நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
நடராஜ குரு மற்றும் நித்யா சைதன்யா யாத்தி
நானும் நடராஜகுருவும் பெங்களூரின் சோமானஹாளி என்ற கிராமத்தில் ஒரு வீடு கட்டத்துவங்கினோம். குருவின் திட்டப்படி வேலை நடந்தது. இரண்டு வட்ட வடிவ அறையும் ஒரு சமையலறையும் கட்ட இருந்தது. சமையலறைக்கான திறப்பு, சுவரில் துளையிட்டு உருவாக்கப்பட்டது. அதே இடத்தில் மண் மற்றும் மணல் கலந்த நிலம் இருந்ததால் அந்த மண், சுவரில் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அது உலர்ந்து கடினம் அடையும்போது பாறை போன்று மாறும். குரு எங்களுக்குக் கொத்தனார் இல்லாமல் எப்படி வீடு கட்டுவது எனக்கற்பித்தார். வாளியை எடுத்துக்கொண்டு இருவரும் ஆற்றங்கரைக்குச் சென்று சிறு கற்களையும் பெரிய கற்களையும் பொறுக்கிக் கொண்டு வந்தோம். அந்த நேரங்களில் இருவரும் கழுதை போல் வேலை செய்தோம்.
-குரு நித்ய சைதன்ய யாத்தியின் சுயசரிதையில் இருந்து
மிளரெப்பா மற்றும் மார்பா
மார்பா மிளரெப்பாவை உடல் உழைப்பில் சிறந்த தொழிலாளியாகவும் மனதிடம் கொண்டவராகவும் உருவாக்கினார். மிளரெப்பாவிடம் யாரின் உதவி இல்லாமல் மண் தோண்டி, சுமந்து, செங்கல் சுவர் எழுப்பி, தளம் அமைத்து, கூரை வேய்ந்து ஒரு குடியிருப்பாளருக்குப் பொருந்துமாறு ஒரு வீடு கட்ட கட்டளை பிறப்பித்தார். பின் அதை இடித்து மற்றொரு வீடு கட்ட சொன்னார். வெளிப்படையாகவே கடுப்பு உணர்வூட்டும் மற்றும் கண்டிப்பு குணம் கொண்ட மார்பாவிடம் இருந்து எவ்வித விளக்கமும் பெறாமல் பல வருடங்கள் கடந்தன.
– ‘தி லைஃப் ஆஃப் மிளரெப்பா’ இல் இருந்து
நன்றிக்குரியவர்கள்
நாராயண குரு மற்றும் ரமண மகரிஷியின் ஓவியம்
- Shashi Memuri, ஆல் வரையப்பட்டது குரு நித்ய சைதன்ய யாத்தியிடம் கல்வி பயின்ற ஒரு கலைஞர். பிற்படுத்தப்பட்டோருக்கான ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறையின் உதவியுடன் கோரபுட் மற்றும் ஒரிசாவின் பழங்குடி கலைகளைக் கற்றார். (IRDWSI).
- அண்ணாமலை மற்றும் ரமணர் இணைந்து ஆசிரமம் கட்டும் ஓவியம்- ஜேன் ஆடாம்ஸ் ன் வலைப்பதிவுப் பக்கம் janeadamsart.wordpress.com இல் இருந்து எடுக்கப்பட்ட வரைபடம். ரமண மகரிஷியின் ஓவியங்கள் அவர் பக்கத்தைத் தொடர்வதால் பார்க்க முடியும்.
- நிதாந்த் ராஜ் பிஜூ பாஸ்கரின் எண்ணங்களை வெளிப்படுத்தித் தணலின் மதிப்புகளாக எழுத உதவினார். சூரி நாகாமா எழுதிய Letters from Sri Ramanasramam புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்தார். இளமைக்காலத்திலே குரு நித்யா சைதன்யா யாத்தியை சந்திக்கத் தொடங்கினார். தற்போது மத்ருபூமி புத்தகத்தில் வேலை செய்து கொண்டே புனித இந்தியாவின் பல துறவிகளைச் சந்தித்து வருகிறார்.