சிமெண்டும், அதன் மோகமும்

 

 

போர்லாண்ட் சிமெண்ட் மற்றும் இதற பொருள்களின் ஆய்வு:

கவனத்திற்கு: இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் தனிமனித கருத்தாகும். யார் மனதையும் புண்படுத்தவதற்கு இல்லை.

சிமெண்ட் எஃகுடன் சேர்ந்த பின்னர் மனிதகுலம் இதற்கு முன் எட்டத்துணியாத புதிய உயரங்களை தொட்டதால், இதை ஒரு அதிநவீனக்கட்டுமானப் பொருள் என்று போற்றப்படுகிறது. சிமெண்ட் பிறப்பதற்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கட்டுமானங்களை இயற்கை பொருட்களை கொண்டே பாதுகாப்பாக கட்டமைக்கப்பட்டன என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் சிமெண்ட், பெருமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. பரவலாக பயன்படுத்தப்படும் இந்த சாம்பல் பொருளைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு மூலம் அதன் பின்னால் உள்ள உண்மையை இக்கட்டுரை ஆராய்கிறது.

நவீன உலகின் கட்டிடக்கலை:

சிமெண்ட் தற்போதைய உலகின் நவீன கட்டிடங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஒரு கட்டிடமானது மழை, வெயில், புயல் போன்ற காலமாற்றத்தினாலும் கலை, நாகரீகம், வளங்கள் போன்றவற்றாலும் தனித்திருந்தது. மேலும் சிமெண்ட் பயன்பாட்டால் அவை தரப்படுத்தப்பட்டன. எல்லா இடங்களிலும் கட்டிடங்கள் ஏரக்குறைய ஒரே மாதிரி தான் உள்ளன. நியூ யார்க் நகரத்தில் உள்ள உயர்ந்த கட்டிடத்திற்கும் துபாயில் உள்ள உயர்ந்த கட்டிடத்திற்கும் பெறிய வித்தியாசம் ஏதுமில்லை. எங்கும் நிறைந்திருக்கும் இவற்றால் நமக்கு பாதிப்புகள் அதிகம் உண்டாகும். கடுமையாக மாறிக்கொண்டிருக்கும் நிலபரப்புகள் சுற்றுச்சூழலுக்கு அழிவை ஏற்படுத்தும்.

இந்தியாவில் கட்டப்பட்ட கட்டிடங்களின் வேற்றுமை பல்வேறு தரப்பு மக்களை ஒன்றாக இணைத்துள்ளது. திறந்தவெளியுடன் இயற்கை சூழ அக்கட்டிடங்கள் நன்கு வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனால் அண்டை மக்களிடையே நல்லுறவு நிலவியது. ஆனால் இப்பொழுது காணப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் இயற்கை வளம் குறைந்தது மட்டுமின்றி மக்களிடையே இருந்த நல்லுறவு துண்டிக்கப்பட்டு விட்டது.

சிறிய இடத்தில் அதிகமான வீடுகள் கட்டப்படுவதால் குடியிருக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் மனநிலை பாதிக்கப்படுகிறது. இதை “சிக் பில்டிங் சின்ரொம்” என்று அழைப்பர். கிரமங்களும் இதனால் பாதிக்கப்புக்குள்ளாகி இருக்கிறது. அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் சமூக வாழ்வாதாரம் இதற்கு காரணம். நகரமயமாக்களால் மேற்கத்திய நரிகளில் ஏற்படும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு அற்கான தீர்வுகள் ஆராயபட்டு வருகின்றன. இந்தியாவும் அதை நோக்கிதான் பயனித்துக் கொண்டிருக்கிறது.

ஏன் அடுக்குமாடிக் கட்டிடங்கள் அதிகமாக உள்ளது?

வானைத் தொடும் அளவிற்கு பல அடுக்குகள் கொண்ட கட்டிடங்கள் கட்டுவதில் சிமெண்ட் தான் உதவுகிறது. இப்படி கட்டுவதால் ஒரு சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கை மக்களுக்கு இடமளிக்கலாம். இவ்வாறு செய்வதால் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.

மும்பை போன்ற பெறுநகரங்களில் வானை எட்டும் கட்டிடங்கள் ஏராலமாக உள்ளன. வீடுபற்றாக்குறை இருந்தும் 1.2 கோடி வீடுகள் காலியாக தான் உள்ளன. மேலும் இன்றைய கட்டுமானத்துறையின் வளர்ச்சியின்மைக்கு பெறுகிவரும் சேரிகளெ உதாரணம். பிரச்சனைகள் என்னவென்று தெளிவாக தெரிந்தும் நாம் அதை உதார்சினப்படுத்துகிறோம். வீட்டு மனைகள் வாங்கி விற்கும் ரியல் யஸ்டெட் அமைப்பு முறையாக இல்லை. அடுக்குமாடி வீடுகளால் வரும் சிக்கல்கள் பொருளாதார அநீதியையும் சமூகத்தில் களங்கத்தையும் உண்டக்கி நகரமயமாக்கள் பாத்திப்படைகிறது.

மண் மூலம் பயன்கள் உண்டா?

நமது வரலாற்றை திரும்பி பார்த்தால் இயற்கையாக கிடைத்த ஈர மண்ணை பயன்படுத்தி அதிக அளவில் பாலகளும் நீருக்கு அடியில் கால்வங்களும் மிக அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. இவை  நாமது பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது.

அவ்வாறு நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய வடிவமைப்புகளால் வீட்டுமனை பற்றாகுறையைத் தீர்க்க முடியும். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிடக்கலையின் நுணுக்கங்களை மக்கள் நன்கு அறிந்திருந்தனர். அக்காலத்தில் கட்டப்பட்ட அரண்மனைகள், நுழைவதற்கு கடிமாக தோன்றும் கோட்டைகள் இதற்கு சான்றாகும். எவ்வளவு பெரிய நிலநடுக்கம் வந்தாலும் இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் அதை தாங்கும் திறன்வாய்ந்தது. இப்போது கட்டப்படும் கட்டிடங்கள் இதற்கு ஈடாகாது.குஜராத் மாநிலத்தில் உள்ள “புங்கா” எனும் பழைய கட்டிடம் பெரிய அளவில் வந்த நிலநடுக்கங்களை தாங்கியது. அதைபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்தார்ஷெஹர் போன்ற உட்கிராமத்தில் பல கட்டிடங்கள் இன்றும் நிலைத்திருக்கிறது.

சிமெண்ட்: எப்போ,எப்படி பயன்படுத்துவது?

கட்டிட பொருள்கள் நிலைத்திருக்க சிமெண்ட் பெரும் உதவியளிக்கிறது. மனிதன் முற்காலத்தில் இருந்தே இவற்றை பயன்படுத்தி வருகிறான். ஓர் நூற்றாண்டு முன்னதாக போர்ட்லேண்ட சிமெண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு இயற்கையாக கிடைத்த சுண்ணாம்பு மற்றும் களிமண் கொண்ட கலவை பயன்பாட்டில் இருந்தது. இதற்கு ரொமன் சிமெண்ட் என்று பெயர். சுற்றுசூழலுக்கு ஏற்ப இந்த பொருட்களின் தன்மை மாறுபடும். அதை தரபடுத்த வேறு சில பொருட்களின் தேவை அதிகரித்தது. எனவே கால்சியம், சிலிகான், ஐயன் மற்றும் அலுமினியம் சேர்த்தக் கலவையில் தரப்படுத்தப்பட்ட சிமெண்ட் தயாரிகப்படுகிறது.

கட்டிட பொருள்கள் நிலைத்திருக்க சிமெண்ட் பெரும் உதவியளிக்கிறது. மனிதன் முற்காலத்தில் இருந்தே இவற்றை பயன்படுத்தி வருகிறான். ஓர் நூற்றாண்டு முன்னதாக போர்ட்லேண்ட சிமெண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு இயற்கையாக கிடைத்த சுண்ணாம்பு மற்றும் களிமண் கொண்ட கலவை பயன்பாட்டில் இருந்தது. இதற்கு ரொமன் சிமெண்ட் என்று பெயர். சுற்றுசூழலுக்கு ஏற்ப இந்த பொருட்களின் தன்மை மாறுபடும். அதை தரபடுத்த வேறு சில பொருட்களின் தேவை அதிகரித்தது. எனவே கால்சியம், சிலிகான், ஐயன் மற்றும் அலுமினியம் சேர்த்தக் கலவையில் தரப்படுத்தப்பட்ட சிமெண்ட் தயாரிகப்படுகிறது.

ஐந்தாண்டு திட்டத்தின்படி தொழிற்சாலைகள் மூலம் சிமெண்ட் உற்பத்தி அதிகரித்தது. பசுமை புரட்சியின் போது உணவு உற்பத்தியை   அதிகரிக்க ரசாயின உரங்கள் உபயோகிக்கப்பட்டன. அவை  விளைநிலங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதேபோல எதிர்காலதில் ஏற்படகூடிய இன்னல்களை பற்றி அறியாமல் சாபல் புரட்சி கொண்டுவரபட்டது. ரசாய உரங்கள் நம் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.

ஓர் பயிற் சாகுபடி மற்றும் ஓர் கான்கிரிட் கலவை நடைமுறைக்கு வந்தது. சிமெண்ட் விளம்பரங்களின் மூலம் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர். மணல் இல்லாமல் சிமெண்டை மட்டும் பயன்படுத்த இயலாது. எனவே நதிகரையில் அதிமாக மணல் எடுக்கப்படுகிறது. இதனால் மணல் திருட்டு அதிகரித்திருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்தும் கட்டுமான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது

பழங்காலத்திருந்து பயன்படுத்தப்பட்டுவரும் சுண்ணாம்பு பற்றிய குறிப்பு:

சிமெண்ட் இல்லாத அக்காலகட்டத்தில் சுண்ணாம்பு முக்கிய பங்கு வகித்தது. அரண்மனைகள், கோட்டைகள், குவிமாடங்கள், பெட்டகங்கள் போன்றவை ஆயிரம் வருடங்களுக்கு மேலாக தனித்து நின்றது. அரைத்தல், அடித்தல் மற்றும் நொதிக்கவைத்தலோடு மூலிகை சாறுகளையும் சேர்த்து வலுவான சுண்ணாம்பு தயாரிக்கப்பட்டது. இதற்கு அதிமான நேரமும் அதிமான வேலையாட்களும் தேவைப்பட்டனர். அதன் விளைவோ அமோகமாக இருந்தது. கார்பனேற்றம் மூலமாக சுண்ணாம்பு கட்டியில் இருந்து சுண்ணாம்பை எடுக்கும் போழுது கரியமில வாயு வெளியேறுகிறது. மறுபடியும் சுண்ணச்சாந்தில் இருந்து சுண்ணாம்பு கட்டியாக மாறும் போழுது இந்த வாயுவானது உட்கொள்ளப்படுகிறது.  மூலிகைச் சாறை சேர்ப்பதன் மூலம் நமக்கு வேண்டிய வடிவில் இச்சுண்ணாம்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வரலாற்றைத் திரும்பி பார்க்கும் போழுது சிமெண்ட் பயன்படுத்தாமல் கிடைத்தப் பொருள்களை வைத்து எல்ல காலமாற்றத்திற்கும் ஏற்றவாறு மிக அற்புதமாக வீடுகள் கட்டப்பட்டன. இப்போது அவ்வீடுகளை அழித்து புதியதாக வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கு காரணம் சொந்த வீடு கட்டினால் தான் மதிப்பு என்கிற சமூக தன்மையே காரணம். உடைதுண்டம் நிரம்பிய இடங்களை பயன்படுத்தாமல் இருந்தால் அதில் உள்ள கனிமங்கள் மண்ணிர்க்குள் அடங்கிவிடும்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள்:

1 டன் சிமெண்ட் தயாரிப்பில் 10% அதவது 2.5 டன் கரியமில வாயு வெளியாகிறது. மேலும் கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு சிமெண்ட் சென்று சேர்வாதற்கு ஏரக்குறைய 600 கி.மீ. ஆகிறது. சிமெண்ட் மற்றும் இதற பொருள்கள் தயாரிக்கும் செயல்முறைகளால் நச்சு வாயுவும் நச்சுப் பொருள்களும் வெளியேறுகின்றன. எனவே கதிரியக்கத்தை அவ்வப்போது ஒத்துப்பார்த்தல் நல்லது. காற்று மாசு அதிகரிப்புக்கு சிமெண்ட் தொழிற்சாலைகள் பெரும்பங்கு அளிக்கின்றன.

எப்படி சரிசெய்வது:

இந்த உரையாடல் மூலம்  இங்கு நிலவுகின்ற பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதை அறிவோம். ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் மற்றும் தனிமனிதன் என பல்வேறு தரப்புகளின் தீர்வுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அறியாமையின் காரணமாக உருவாகியுள்ள பாதிப்புகளைப் பற்றி மக்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாம் உதார் சினப்படுத்தியதால் நம் உலகில், நதிகள், கழிவுநீர் கால்வாய்கள் போன்றவற்றில் சிமெண்ட் கலந்திருக்கிறது. எனவே, நம் முன்னோர்கள் வழிவந்த அறிவுதிறனை பயன்படுத்த வேண்டும்.

சிமெண்ட் பயன்பாட்டின் விளைவுகள்:

கான்கிரிட் புற்றுநோய் எனப்படும் நோய் கட்டிடங்களை பாதிக்கின்றது. கான்கிரிட் ஈரப்பசையை உறிஞ்சி அது வெளியேறாமல் அடைத்து வைத்துவிடுகிறது. இதனால் இரும்பு பொருள்கள் துருப்பிடித்துவிடுகிறது. நமக்கு இது வெளியில் தெரியாது. பிறகு கட்டிடம் அதன் வலுவையிழந்து நிலைக்குலைந்துவிடும். சிமெண்டின் வலுவைப்பெற நாம் விலை உயர்ந்த பொருள்களை பயன்படுத்தி அழித்து வருகிறோம்.

இயற்கை கட்டிடங்களில் சிமெண்டின் பயன்பாடு:

பாபாரா ஜியுடையக் கட்டுரையில் இயற்கை கட்டிடங்களில் சிமெண்ட் சேர்ப்பதன் மூலம் வரும் விளைவுகள் நன்றாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அமைப்புகள், சுவறுகளை மண் சுவறுகள் போல் தோன்றும் கட்டிடங்கள் கட்டும் குறிக்கோள் கொண்டுள்ளன. ஈரமண்ணில் சிமெண்டைக் களப்படம் செய்வது மிகவும் ஆபாத்தானதாகும். அப்படிபட்ட உளை வீடுகள் விலை உயர்ந்ததாக உள்ளது. இப்படி கலப்பு நிறைந்த வீடுகள் சுற்றுச்சூழல் உணர்வு கொண்டவர்களுக்கு வியாரயுக்தியாக மாறியுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கத்திய நாடுகளின் தத்துவசாஸ்திரத்தால் இவை நடைமுறைக்கு வந்தன. இதனால் ஈரமண் அசுத்தமாகி புரைச்சல் ஏற்படுகிறது.

ஈரமண்ணிற்கும் சுண்ணம்பிற்கும் சரி செய்துகொள்ளும் தனிதுவம் உள்ளது. ஏனெனில் விரிசல் ஏற்பட்டால் அதில் இப்பொருள்களை மறுபடியும் பூசி சரி செய்துவிடலாம். ஆனால் சிமெண்ட் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டால் அது அக்கட்டிடத்திற்கு ஆபத்து.

கட்டிடங்களை தரப்படுத்தவதற்காக இயந்திரங்களைக் கொண்டு பெரிய அளவில் வீடுகள் கட்டப்பட்டன. இதனால் மூச்சுத்திணறும் வகையில் தீப்பெட்டி போன்ற வீடுகள் கட்டப்பட்டு மக்களின் உடல் நலமும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.  கட்டிடம் கட்டும் போழுது தனித்து நிற்க அருவருப்பான யுக்திகளை கையாளுகின்றனர். கட்டிடத்தில் கண்ணாடிப் பொருள்கள் இருந்தால் அவை இயற்கையாகவே வெப்பத்தால் சூடாகிவிடும். அப்படி இருக்கும்போது குளிர்சாதனப்பெட்டி பயன்படுத்தினால் அவை மேலும் சூடாகிவிடுகின்றன. இதை நம் பகுத்தறவை உபயோகித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். சமூக அநீதிகள், அமைதியின்மை, மகிழ்ச்சியின்மை போன்றவற்றை இக்காலக் கட்டிடக்கலை உருவமைத்துக் காட்டுகின்றது. என்னவென்றே தெரியாமல் நாம் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நமது கட்டிடங்கள் நம்மை போலவே நிறமற்று சுவையற்று ஓரேயினமாக உள்ளன.

நமது நாட்டின் உள்ள மாற்று கட்டுமான துறையில் ஈரமண்ணுடன் சிமெண்ட் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. இவை சுற்றுச்சூழலைச் சீராக்கும் வீடுகள் என அழைக்கப்படுகின்றன. சிமெண்டை சேர்த்தால் ஈரப்பதம் குறைந்து பாதிப்பு ஏற்படும். ஈரமண்ணை உடைந்துவிட்டால் மறுபடி பயன்படுத்த முடியாது. அதனால் கட்டிடக்கலைஞ்களும் மக்களும் அவரவருக்கு வேண்டிய வீடுகளை உருவக்க இயற்கை பொருள்களின் தன்மையை அறிந்து அதற்கேற்ப உபயோகிக்க வேண்டும். அனைவரும் ஒன்றாக முயற்சித்தால் சரியான தீர்வுகளை கிட்டமுடியும். நாம் இழந்த அறிவுத்திறனை மீண்டும் உபபோயகித்து இவ்வுலகில் கிடைக்கும் இயற்கை பொருள்களை அதன் புனிதத்தன்மை மாறாமல் நம்பிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். சிமெண்ட் பயன்பாட்டிற்க்கு வந்தபிறகு மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல் வானுயர கட்டிடங்கள் நவீன உலகிற்கு வித்தாக அமைந்தன.

ஒரு கான்கிரிட் கட்டிடம் 50-60 வருடங்கள் மட்டுமே நிலைத்திருக்கும். இது அதன் உள்ளடக்கச் சக்தியை விட மிக குறைவானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருந்தாலும் அதன் கார்பன் தடம் மறைத்துவிடும். கான்கிரிடால் நச்சு கழிவுகள் நினைத்துப் பார்க்க முடியதா அளிவிற்கு அதிகமாக இருக்கும். நமது வேகமான வளர்ச்சியால் கழிநீர் கால்வாயில் வெள்ளம் ஏற்படக்கூடும். இதற்கான தீர்வு காணப்படவில்லை என்றால் இது மனிதன் ஏற்படுத்திய பேரிடராகிவிடும்.

 

எல்லத்தரைத் தடங்களிலும் கான்கிரிட் பூசப்பட்டிருப்பதால் வெள்ளநீர் வடிந்து செல்வதிற்கு வழியில்லாமல் ஆகிவிட்டது. இதனால் நமது கிராமங்களிலும் வறட்சி நிலவுகிறது.

சிமெண்ட் எனும் பொருளால் தான் பாதிப்பு என்றில்லை. தொழில்சாலைகள், பூமி வேப்பமயமாதல், ஆரோகியமற்ற உணவுகள், ஃபேஷன் போன்ற பல கரணங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. நம் இயந்தர வாழ்வில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் அடிவேறாக உள்ளது. எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் சமூகத்தில் அமைதி நிலவும். இயற்கைக் கட்டிடப் புரட்சி சாத்தியமானதே. ஆக்கப்பூர்வமாக நடந்துகொள்ள வேண்டும். இவ்வுலகில் கொல்லத்துக்காரரும்  ஒரு சில நல்ல உள்ளங்களும் நம் பயணத்திற்கு நல்வழி காட்டுவர்.

வேதங்களில் கூறிய முறைகளில் கட்டிய கட்டிடங்கள்  பல நூற்றாண்டுகளுக்கு நிலைதிருக்கிறது. இயற்கைக் கட்டிடப் பொருளான சுண்ணாம்பு ஒரு நல்ல தீர்வாகும். இயற்கை வளங்களை நாம் எவ்வாறு தேர்ந்தேடுத்து பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். நம் அன்றாட வாழ்வில் சிறிய அடிகள் எடுத்து வைத்தால் எதிற்காலத்தில் பயன்படும். இது நெடுங்காலம் எடுக்கலாம் ஆனால் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே நாம் சிமெண்ட் பயன்பாட்டிற்கு கண்டனம் தெரிவிப்பதைவிட, ஈரமண் மற்றும் சுண்ணாம்பை வைத்து கட்டுமான தீர்வுகளை எப்படி ஏற்படுத்தி செயல்படுத்துவது என ஆராய்வோம். நமது கிரகத்தை அன்புடன் பாதுகாக்க வேண்டும்.

இந்த கட்டுரையை இயற்கை கட்டிடாளர்கள் முஷாரஃப் ஹெபாலி மற்றும் பிஜு பாஸ்கர் எழுதியுள்ளனர். இந்த இடுகை எங்கள் பொருட்கள் மற்றும் எதிர்ப்பு பொருட்கள் தொடரின் ஒரு பகுதியாகும்.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *