நாராயண குரு மற்றும் ரமணமகரிஷி

தணலின் கொள்கை ஒரு அமைதியான சிந்தனையிலிருந்து உதித்தது…..

1916 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் ஆசான் நாராயணகுருவிற்க்கும் பகவான் ரமண மகரிஷிக்கும் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

இரு துறவிகளும் நேருக்கு நேர் சிறிது நேரம் பார்த்த போது அவர்களுடைய கண்களே உரையாடலை மேற்கொண்டது போல் அமைந்தது.

நாராயணகுருவிற்கும் ரமண மகரிஷிக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு பற்றி தெரிந்துகொள்ள-*இணைப்பு*

ஆசானின் சில கருத்தில் உடன்பாடு உடையவர்கள் வாழ்க்கையின் சுய செயற்பாட்டில் இறங்குவார்கள். ஆசானுக்குப் பிடித்த வழியைத் தேர்ந்து எடுப்பார்கள் அல்லது அந்த வழி அவர்களைத் தேர்ந்தெடுக்கும். இதன் கீழ் பல செயற்பாடுகள் மற்றும் வழிகள் உள்ளன. அதில் விவசாயம், எழுதுதல், ஆசானின் படைப்புகளை மொழிபெயர்த்தல் அல்லது விலங்குகளைப் பராமரித்தல் அடங்கும். இதனை பின்பற்றுவர்கள் எல்லாம் ஒரு புள்ளியில் சந்திப்பர்.

இவ்வாறு உள்ள பல வழிகளில் தணல் தேர்ந்தெடுத்த பாதை மண் வீடு கட்டுதல். தணல் நடைமுறைப்படுத்தும் செயல்களின் போது எங்களின் கர்மாவில் உள்ள ஒவ்வொரு கற்களையும் அகற்றி, ஒவ்வொரு கற்களாக அடுக்கி ஒரு வீடு கட்டுகிறோம். ஆசான் மாணவ உறவிற்கான மூன்று தனி மேற்கோள்கள்.