தணலர்கள்- இளம் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள்

தணலர்கள்- இளம் இயற்கைக் கட்டிடக் கலைஞர்கள்

தணலர்கள் என்பது தணல் நிறவனர்களான பிஜு பாஸ்கர் மற்றும் சிந்து பாஸ்கரின் வழிகாட்டுதலில் தணல் வளாகத்தில் செயல்வழி அனுபவம் பெற்று பயண்ங்கள் வழியாகவும் ஆய்வுகள் வழியாகவும் பாரம்பரியக் கட்டுமான முறைகளை நன்கு கற்றுத்தேர்ந்து அதைப் பல ஆண்டுகள் தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி வருபவர்கள் ஆவர்.

தீர்ஜ் ரெட்டி

தெலுங்கானாவின் மிரியல்கூடாவைச் சேர்ந்த இவர், தன்னுடைய கல்லூரிப் படிப்பிற்குப் பின் தணல் செயத வேலைகளான காப் கிச்சன், வீவிங் வால்ஸ், மண்மூட்டை வீடு ஆகியவற்றில் வேலை செய்திருக்கிறார். அவரது முதல் புராஜெக்ட் ஒரு அலுவலக இடம். அதாவது ஆந்திராவின் கடாப்பாவில் உள்ள கோடூர் கலை மற்றும் பண்பாட்டு மையத்திற்கான ஹட்-கே வை வடிவமைத்துக்கட்டினார். மண் கட்டுமானங்களை மற்றவருக்கும் கற்பிக்கும் பொருட்டு பயிற்சிப்பட்டறைகளும் நடத்துவதுண்டு. இப்பொழுது அவர் பணிசெய்யும் இடங்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா.

மேலும் அறிய: https://www.facebook.com/dheerazzzzzzzzzzzzzzzz

முசாரஃப் ஹெபாலி

மும்பை கட்டிடக்கலைக் கல்லூரியில் பயின்றபின் 2015ல் தணலில் இணைந்து பெங்களூரில் வீவிங் வால் புராஜெக்ட், Firefly’s dream, பலவித நீர்த்தொட்டிகள் கட்டுமானம் போன்றவற்றில் கள அனுபவம் பெற்றவர்‌. கர்நாடகாவில் உள்ள தார்வாடுவைச் சேர்ந்த இவர் அவரது சொந்த ஊரிலே 800சதுர அடி அளவில் ஒரு வீடு கட்டிவருகிறார். செப்ட் விண்டர் ஸ்கூலில் பயிற்சிப்பட்டறை நடத்தி மாணவர்களுக்குக் கற்றுத்தருவதும் அவரது பணி‌. கோவா மற்றும் கர்நாடகாப் பகுதிகளில் வடிவமைப்பாளராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

மேலும் அறிய: https://www.facebook.com/musharaff

அணுஸ்ரீ தெண்டுல்கர்

மும்பையைத் தாயகமாகக் கொண்ட அணு, கல்லூரிப் படிப்பை முடித்துப் பின் 2015ல் தணலில் பயிற்சிபெறத் தொடங்கினார். பெங்களூரில் வீவிங் வால் புராஜெக்ட், Firefly’s dream, பலவித நீர்த்தொட்டிகள் கட்டுமானம் போன்றவற்றில் கள அனுபவம் பெற்றவர்‌. தற்போது Dhirty Hands என்ற சிறுநிறுவனத்தை இயக்குகிறார். அந்தக்குழு வழியாகப் வண்ண நிறைவமைவுகள்(Finishes), கட்டுமான வேலைகள், ஆய்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் என இயற்கைக்கட்டுமானத்தின் பன்முகங்களுடன் வலம் வருகிறார். 

மேலும் அறிய: https://www.facebook.com/dhirtyhands/

சுந்தர் ராஜ் கணேஷ்

சேலத்தைச் சேர்ந்தவர் சுந்தர் . தணலில் 2016- 2018 காலகட்டத்தில் நடந்த வேலைகளான தெர்விஷ் ஸ்டுடியோ, பயிற்சிக்கூடம், போளூரின் மாட்டுக்கொட்டகை, திண்டுக்கலின் விதைவங்கி, அட்டப்பாடியின் விவசாயி வீடு எனப் பலவற்றிலும் முக்கியப் பணி செய்த அனுபவம் உண்டு. இப்பொழுது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் செயல்படுகிறார். இப்பொழுது இரண்டு வீடு கட்டும் வேலையை எடுத்துச் செய்கிறார்.

மேலும் அறிய : https://www.facebook.com/younkersundarrsl

அகில் சாஜன் 

Joined Thannal in 2017, From Trivandrum, Kerala. Currently working in Trivandram
Find more at: https://www.facebook.com/akhil.m.shajan

 

து. கருப்பசாமி பாண்டி

Civil Engineer from a farmer’s family, a native of Thoothukudi, Tamil Nadu. After getting trained through a workshop at Thannal in 2018, worked at the Seed Bank project for one year. He now works near the Thoothukudi region in Tamil Nadu.
Find more at: https://www.facebook.com/karupasamypandi1805

நம்மைச் சுற்றிய இயற்கைக் கட்டிடக்கலைஞர்களைக் கண்டறிக

இங்கே வடிவமைப்பாளர்கள், கலைத்துறையினர், கட்டிடக் கலைஞர்கள், சிவில் பொறியாளர்கள், கொத்தனார்கள் மற்றும் பல துறைச்சார்ந்தவர்களையும் தணலில் பயிற்சி பெற்று அவர்கள் கட்டிய இயற்கைக் கட்டிடங்களையும் காணலாம்.

இயற்கைக் கட்டிடக்கலையை ஆன்லைனில் பயில வேண்டுமா?

இயற்கைக் கட்டுமானத்தை உலகில் எங்கிருந்தும் எப்பொழுதும் தணலுடன் சேர்ந்து கற்கலாம்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இக்கட்டுரையைப் பகிர்

கையால் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

ஆன்லைன் வீடியோ டுடோரியல்

இணையவழித் தொடர்-இயற்கைக் கட்டுமான வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

செயல்வழிப் பயிற்சிப்பட்டறை

நூல்கள்& இ-நூல்கள்

இயற்கைக் கட்டுமான நூல்கள், இ-நூல்கள் தமிழ்,ஆங்கிலம்& மலையாளத்தில்

முந்தைய பயிற்சி பட்டறைகள்

50 க்கும் மேற்பட்ட செயல்-வழிப் பயிற்சி வகுப்பின் மூலம் 1500க்கும் மேற்பட்டோர் கற்றுச்சென்றுள்ளனர்.

புதுக்கங்களைப் பெற

வாட்சப் குழுவில் இணைக

7000 + நபர்கள் வாரந்தோறும் புதுசெய்திகள் புதன்கிழமையில் பேசலாம் அல்லது அரட்டை செய்யலாம்

இயற்கைக் கட்டுமானத்தை ஆன்லைனில் கற்க வேண்டுமா?

நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கற்கலாம்

ஆன்லைன் டுடோரியல் வீடியோ தொடர் இயற்கைக் கட்டுமானம்
Scroll to Top