சிமெண்டும், அதன் மோகமும்

சிமெண்ட் எஃகுடன் சேர்ந்த பின்னர் மனிதகுலம் இதற்கு முன் எட்டத்துணியாத புதிய உயரங்களை தொட்டதால், இதை ஒரு அதிநவீனக்கட்டுமானப் பொருள் என்று போற்றப்படுகிறது. சிமெண்ட் பிறப்பதற்கு முன்பே ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த கட்டுமானங்களை இயற்கை பொருட்களை கொண்டே பாதுகாப்பாக கட்டமைக்கப்பட்டன என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெறும் நூறாண்டு காலமாய் இருந்துவரும் சிமெண்ட், பெருமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. பரவலாக பயன்படுத்தப்படும் இந்த சாம்பல் பொருளைப் பற்றிய ஒரு பகுப்பாய்வு மூலம் அதன் பின்னால் உள்ள உண்மையை இக்கட்டுரை ஆராய்கிறது.