கூரை

கூரைஒரு கட்டிடத்தின் தொப்பி போல அதாவது வெயில், மழை மற்றும் குளிரில் இருந்து கட்டிடத்தையும் அதில் வசிக்கும் நம்மையும் பாதுகாக்கும் அமைப்பு. இந்தியாவில் புற்கள், தாவரத்தண்டுகள், சுடுமண் ஓடுகள், செங்கல், மண்,மூங்கில் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி பல வகையிலும் கூரை அமைத்தனர். இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கும் பலவகையான கூரைகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

படோடு கல் வீடு

இராஜஸ்தானில் படோடு எனப்படும் வீடுகள்
முழுவதும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட மணற்பாறைத்துண்டுகளால் கட்டப்பட்டவை. அந்தக்கல்லுக்கு ஜோத்பூர் பட்டி என்ற பெயரும் இருக்கு. அதே கற்களை தூண்(column), விட்டம்(Beam) மற்றும் கூரையின் உறுப்புக்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.

ஏரிக்கரை மண்வீடு, அருணாச்சலாமலை அடிவாரம்‌.

ஒரு சமூகமாகக்கூடி இணைந்து வேலை செய்யும் போது செலவில்லாமல் எளிதாக இயற்கை வீடு கட்டலாம் என்பதற்கான உதாரணம்தான் இந்த ஏரிக்கரை மண்வீடு.

Scroll to Top