உழவர்களுக்கான இயற்கைக் கட்டுமான வகுப்பு

Natural Building Workshop for Farmers
ஒரு நாள் வகுப்பு – இயற்கைக் கட்டிடக் கலை
திருவண்ணாமலை, தமிழ்நாடு
நாள் : கார்த்திகை 5 ( நவம்பர் 21, 2018)

இம்மண்ணில் விதையாய் விதைக்கப்பட்ட அய்யா நம்மாழ்வாரும், அவரின் வழி வந்த ஒத்திசைந்த இயற்கைச் சிந்தனையுள்ளவர்களால், தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மையும்,உணவு முறையும்  செழுமையடையத்துவங்கியுள்ளது. மாற்றுக்கல்வி, இயற்கை வழி மருத்துவம், சூழலுக்கு ஏற்ற இயற்கை உடை என்று இயற்கை வாழ்வுக்கான பல நல்ல மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டேயுள்ளது. அதேபோல இயற்கைக் கட்டுமான முறைகளை அறச்சிந்தனையுள்ளவர்களின் மனதில் விதைக்க இதுவே சரியான நேரமாகும்.

இயற்கை  விழிப்புணர்வு குழுவான தண்ணல், சாமானிய மக்களை சென்றடையவே பல முயற்சிகளை எடுத்துவருகின்றது. இவ்வகுப்பு  சிற்றூர் உழவர்களை சென்றடையும் அடுத்த படியாகும். இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளும் உழவர்களுக்கு, இயற்கைவழிக் கட்டுமானங்கள் இன்றி வாழ்வில் முழுமையான தற்சார்பை அடைய இயலாது. தற்சார்புப் பாதையில் முன்னோக்கி செல்லும் உழவர்களுக்கு தேவையான கட்டிடங்களை அவர்களே கட்டி எழுப்புவதற்கான விழிப்புணர்வு போதுமான அளவு இங்கே இல்லை. அவர்களுக்கு நமது மரபையும், இயற்கைக் கட்டுமான அறிவையும் கொண்டு சேர்ப்பதே தண்ணலின் முதற்பணி. இயற்கைக் கட்டுமான முறைகள் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கும் இயற்கைவழி வேளாண்மை செய்யும் உழவர்களுக்கான வகுப்பு இது. தமிழகம் எங்கும் உள்ள சிற்றூர் உழவர்களுக்காக தனிச்சிறப்புடன் தண்ணல் செய்யும் முதல் வகுப்பு இது.

பாரம்பரிய விதைகளும், இரசாயனமில்லா உழவாண்மையும் இயற்கை வழி வேளாண்மைக்கு எவ்வளவு அடிப்படையானதோ, அவ்வளவு முதன்மையாக கட்டுமானங்களில் தவிர்க்கப்படவேண்டியவை ஆறுகளை சிதைத்த மணல், உற்பத்தி ஆகும்சூழலை கெடுக்கும்  சிமெண்ட், அளவு மீறும் கணிமக்கொள்ளையான இரும்புக்கம்பிகள். இவை இல்லாமல் எழுப்பப்படுவதே தூய  இயற்கைக் கட்டுமானங்கள். நச்சுப்பொருட்கள் கலப்படமின்றி, எளிதில் கட்டுமானம் எழுப்பும் இடத்திலேயே அதன் சுற்றத்திலேயோ கிடைக்கூடிய எளிமையான பொருட்களை வைத்து தூய இயற்கை கட்டுமானங்களை  எழுப்புவதே தண்ணலின் நோக்கம்.செடிகளும், கொடிகளும், மூலிகைகளும், புற்பூண்டுகளும், மரங்களும், இவைதரும் பூக்களும், காய்கனிகளும், விதைகளும், பட்டைகளும், கால்நடைகளிடமிருந்து கிட்டும் பொருட்களும் இயற்கைக் கட்டுமானங்களில் பரிசோதித்து பயன்படுத்துவதே தண்ணலின் கொள்கை. இயற்கைக் கட்டுமானத்திற்கு உதவும் தாவரங்களை உழவர்களே நடவு செய்து, கட்டுமானங்களிலும் அவர்கள் தற்சார்பு அடைய வேண்டும் என்பது தண்ணலின் ஆழ்ந்த விருப்பம்.

விவசாயிகளுக்கான இயற்கை கட்டுமான வகுப்பு – நவம்பர் 21 – 2018

இயற்கை கட்டுமானம் – அறிமுகம் கொள்கை வகுப்பு
இயற்கை கட்டுமான பொருட்கள் கொள்கை வகுப்பு
மண் – பரிசோதனை கொள்கை வகுப்பு
சுண்ணாம்பு – சுழற்சி/ கொள்கை வகுப்பு
மூங்கில்/ மரம் – முறை கொள்கை வகுப்பு
அடித்தளம்கொள்கை வகுப்பு
*சுவர் வகைகள் -*
மண்சுவர் கொள்கை வகுப்பு
பின்னிய சுவர்கள் கொள்கை வகுப்பு
பச்சை செங்கற்கள்கள் கொள்கை வகுப்பு
அமுகத்துக்களாக்கப்பட்ட செங்கற்கள்கள் கொள்கை வகுப்பு
மண்மூட்டை கட்டுமானம் கொள்கை வகுப்பு
*பூச்சுகள் -*
மண் பூச்சுகள் கொள்கை வகுப்பு
சுண்ணாம்பு பூச்சுகள் கொள்கை வகுப்பு
மண் + சுண்ணாம்பு பூச்சுகள் கொள்கை வகுப்பு
தளம், கூரை பற்றிய வகுப்பு கொள்கை வகுப்பு

வகுப்பு தேதி : கார்த்திகை 5  ( நவம்பர் 21, 2018)

வகுப்பு இடம் – தண்ணல் வளாகம், திருவண்ணாமலை, தமிழ்நாடு

வகுப்பு கட்டணம் – ரூ.1000

பதிவுக்கு :

இந்த ஒரு நாள் வகுப்பின் பாடங்கள் : இயற்கைக் கட்டுமானமும் அதன் பொருட்களும் ஒரு அறிமுகம், அடித்தளம் அமைத்தல், மண் சுவரின் வகைகள் மற்றும் இயற்கைப் பூச்சுகள்இவற்றை பற்றிய விளக்கமும், செய்முறை மாதிரிகளும் காட்டப்படும்.

இவ்வகுப்பில் சிற்றூர் இயற்கை வழி வேளாண்மை செய்யும் உழவர்களுக்கு மட்டுமே அனுமதி. நகரபுறத்திலிருந்து மரபு வழி திரும்புவோருக்கு வேறு வகுப்புகள் நடக்க உள்ளன. தாங்கள் ஒரு சிற்றூர் உழவர் என்றாலோ, அல்லது உங்களுக்கு இதில் விருப்பமுள்ள உழவர்களை தெரியும் என்றாலோ,  கீழ்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு – 93856 20884

Phone time 9:00Am- 5:00Pm